Tag Archive: இதழியல் பற்றிய கேலி

நான்காவது கொலை!!! – 14

எழுத்தாளர் சிரித்து , ‘அப்டியா சொல்றீங்க ? வாங்க ‘ என்றார். ‘நானே இப்ப ரொம்ப குழம்பிப்போய் இருக்கேன் .ஏற்கனவே கதை பதிமூணு வாரம் வந்தாச்சு , இன்னும் முதல் அத்தியாயமே முடியலை… ‘ பாண்ட் ஸ்தம்பித்து , ‘ பதிமூணு அத்தியாயம் வந்துவிட்டதாக சொன்னார்களே ? ‘ ‘அப்படியா ? அது மார்க்சியர்களும் பெரியாரியர்களும் என்னைப்பத்தி சொல்ற அவதூறுங்க. இப்பதான் முதல் அத்தியாயத்தோட பதிமூணு பகுதிகள் எழுதியிருக்கேன். … ‘ ‘நாலாவது கொலையோடு கதை முடிந்துவிடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11599/

நான்காவது கொலை !!! 13

ஓட்டல் முகப்பு அல்லோல கல்லோலப்பட்டது . டிவிமுன்னால் ஒரே கூட்டம். ‘பாஸ் , ரொம்ப நாளா சந்தேகம். இந்த அல்லோலகல்லோலம்னா என்ன ? தெரியாம திக்குமுக்காடறேன் ‘ ‘ ‘இதெல்லாம் தொடர்கதை வார்த்தைகள்டா. பேசாம படிச்சுட்டே போகவேண்டியதுதான் ,ஏன் இப்ப நாப்பது வருஷமா ஜனங்க படிக்கலியா ? உனக்கு மட்டும் என்ன ? ‘ ‘ ‘ D.A. சீதே , அதிலே சன் டிவி போடறானா பாக்கச் சொல்லுடா ‘ சி என் என் மற்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11597/

நான்காவது கொலை!!! – 12

ஜேம்ஸ்பாண்ட் 007 ஆம்லெட் போட முட்டையை உடைத்துக் கொண்டிருந்த போது அவரது ரகசிய ஃபோன் அடித்தது. அவர் அதை எடுத்து ‘ ‘ மை நேம் இஸ் பாண்ட் , ஜேம்ஸ் பாண்ட் ‘ என்ற அதிரகசியக் குழூஉகுறியைச் சொன்னதும் எதிர்முனையில் அவரது பாஸ் வந்தார். [யதார்த்தத்தை நம்புகிறவர்களுக்காக இங்கே காமிராக்கோணம் விரிக்கப்படுகிறது. அவர் ஆம்லெட் போட்டுக் கொண்டிருந்தது ஆல்ப்ஸ் பனிமலையின் உச்சியில் இரு சிகரங்களுக்கு நடுவே கட்டப்பட்டிருந்த கயிறின்மீது தொங்கிக் கொண்டிருந்த தொட்டில்க்கூடாரத்துக்குள்தான் ] ரகசிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11595/

நான்காவது கொலை !!! – 11

சுந்துவை தோளில் தூக்கிக் கொண்டு வெளியே கிளம்பியபோது அவன் சுபாவமாக ‘அப்பா நீ நல்ல அப்பாவா கெட்ட அப்பாவா ? ‘ என்று கேட்டபோது சாம்புவுக்கு மார்பை அடைத்தது. ‘ஏண்டா ? ‘ ‘அப்பான்னா நீ எனக்கு ஒண்ணுமே வாங்கித்தர மாட்டேங்கிறே ? ‘ ‘படவா. இப்பதானேடா கமர்கட் வாங்கித்தந்தேன் ? ‘ ‘அதத்தான் தின்னுட்டேனே ? ‘ இது என்ன லாஜிக் என்று சாம்புவுக்கு சற்றும் புரியவில்லை .ஆகவே ‘அப்ப நான் வாங்கித் தந்துட்டேன்ல ? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11593/

நான்காவது கொலை !!! – 10

உதயகாலப்பறவைகளில் ஒலியில் விடுதி துயிலெழுந்தபோது எங்கும் மென்மையான மஞ்சள்நிற ஒளியே நிரம்பியிருந்தது . சுற்றுலாப்பயணிகளின் ஊடாக துப்பறியும் நிபுணர்களின் கனத்த கரிய பூட்சுகள் அணிந்த கால்கள் ஒளிரும் மணல்வெளியின் மென்பரப்பை அழுந்தமிதித்து நகர்ந்தன. கடல்மீது பறவைகள் கீழ்த்திசை நோக்கி சரிந்த காற்றில் சிறகுகள் மடித்து வளைந்துபரவின …. வசந்த் ‘பாஸ் என்னமோ இடம் தவறி வந்துட்டோம் .இது வேற ஏரியா . நம்ப ஆள் அணுகுண்டு வெடிச்சாலே ஆறு வார்த்தைகள்ல சொல்ல நெனைக்கிறவர். இங்க என்னடான்னா ஒண்ணுக்கடிச்சு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11591/

நான்காவது கொலை!!! -9

சங்கர்லால் அந்த இருவரையும் பதுங்கிப் பதுங்கிப் பின் தொடரும்போது எதிரே வேறு ஒரு ஆசாமி பதுங்கிப்பதுங்கி வருவதைக் கண்டு [ சரவணா ஸ்டோரில் கிலோ விலைக்கு வாங்கிய ] துப்பாக்கியை சரேலென்று உருவி ஒரு தூணின் மறைவில் ஒளிந்தபடி எட்டிப்பார்க்கையில் ஒரு சடைமுடிச் சாமியார் பம்முவதைக் கண்டு ‘ கைகளை மேலே தூக்கு ! உன் பெயர் என்ன ? எங்கிருந்து வருகிறாய் ? ‘ என்று கேட்டார் . ‘கைகளை மேலே தூக்கினால் வேட்டி அவிழ்ந்துவிடுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11588/

நான்காவது கொலை!!! -8

கைரேகை நிபுணர் பேரா கைலாச மூர்த்தி எம். ஏ , எல்.எல். எஸ், பி, ஏ.ஏ, எஸ்.ஏ, டி ஆர். ஓ அவர்களின் அறைக்கதவை கோபாலன் பவ்யமாக தட்டி காத்து நின்றபோது உள்ளிருந்து சன் டிவி சின்னம் போல குங்குமப் பொட்டு போட்ட ஒரு மாமியும் அவளுக்குரிய மாமாவும் வெளிவந்து செருப்பணிந்து கோபாலனை குறுகுறுப்பாக பார்த்து சென்றார்கள் ‘வாங்கோ! வாங்கோ! ‘ என்றார் கைரேகை நிபுணர் ‘உக்காருங்கோ. செளக்கியமா உக்காருங்கோ’ என்றார். ‘அவா ரெண்டுபேரும் கேளுங்கள் கேசவனிலே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11586/

நான்காவது கொலை!!! -7

சன்னதம் கொண்டெழும் ஆயிரம் வனராக்கிகளின் உதரபிம்பத்தில் குளித்தெழுந்த நீர்ப்பரப்பின் வெளியில் உதித்த சூரியர்களில் பெரும் பாழில் மடியும் நீர்கோலங்கள் நெளியும் வானத்து வெண்களிம்பின் மீது நெருப்பு வண்டுகள்ரீங்கரித்து பறக்கும் கரிசல் நிலவின் கனலில் பயங்கர வசீகரமென மின்னும் பனிக்கோளங்கள் சிரிக்கும் சுரோணிதப் பூனையின் கண்களிலிருந்து பறந்துவரும் பூச்சிகளின் மீது விழுந்து சிறகடிக்கும் அடங்காத வெகுமெளனம் இடுங்கிய வாசல்கள் திறந்த தெருச்சுருள்கள்கள் வழியாக நெளியும் பாவனைகள் உதிரும் பட்டுப் பரப்பின் தூய்மை கூறப்படும் . ஆயிரத்தியெட்டாவது அண்டாரெண்டப்பட்சியும் சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11584/

நான்காவது கொலை!!! -6

கணேஷ் ஓட்டலின் கீழ்த்தளத்தில் டைனிங் ஹாலில் அமர்ந்து ஒரு தயிர்வடையை மெதுவாக ஸ்பூனால் சாபிட்டுக் கொண்டிருக்கும்போது எதிரே ஒருவர் வந்து கூர்ந்து பார்த்து ‘உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் ‘ என்றார் . ‘என்னையா ? ‘ என்றான் கணேஷ் .அந்த பெரியவர் கையில் துப்பாக்கி ஏதும் இல்லை . ‘முக்கியமான ஒரு விஷயம் சொல்வதற்காகத்தான் ‘ என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வெயிட்டர் லெட்சுமணப்பெருமாள் வந்து பணிவைக் காட்டினான் . ‘அடுப்பின்மீது வைத்து போதிய அளவில் சூடுபடுத்தப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11582/

நான்காவது கொலை!!! -5

கணேஷ் அந்த பிளாஸ்டிக் குறுவாளை எடுத்து இலச்சினையைப் பார்த்து . ‘ஐஸ்வர்யா டாய் ஹவுஸ் .முப்பது ரூபாய்’ என்று படித்து ‘கொஞ்சம் கலங்கிப் போயிட்டேண்டா ‘ என்றான் ‘கடைசி வரிதானே பாஸ் ,கொஞ்சம் மிகையா இருக்கிறதுல தப்பில்ல. முன்ன ஒரு தடவை நான்கூட இப்டி ஒரு தொடகதைல பாத்ரூம் கதவை திறந்து பாத்து உள்ள தண்ணியில்லைன்னு தெரிஞ்சு தலையிலே ஆயிரம் இடி சேர்ந்து இறங்கினது மாதிரி கலங்கியிருக்கேன் . ‘ சிரித்தபடி ஒரு குண்டு சேட்டு பையன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11570/

Older posts «