Tag Archive: இடும்பி

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 64

பகுதி பதின்மூன்று : இனியன் – 6 இருண்ட காட்டுக்குள் கண்களுக்குள் அஸ்தமனத்தின் செவ்வொளி மிச்சமிருக்க பீமனும் இடும்பியும் கடோத்கஜனும் சென்றனர். மரங்கள் இருளுக்குள் திட இருள் வடிவுகளாக நின்றன. சீவிடுகளின் ஒலி திரண்டு இருட்டை நிரப்பத்தொடங்கியது. அவ்வப்போது கலைந்து பறந்த சில பறவைகள் நீரில் அறைவதுபோல இருளில் ஒலியெழுப்பி சிறகடித்தன. சிறகுகள் மரங்களிலும் கிளைகளிலும் உரசும் ஒலியுடன் அவை சுழன்றன. எங்கோ சில இடைவெளிகளில் வழிந்த மெல்லிய ஒளியில் மின்னிய இலைகள் ஈரமானவை போல் தோன்றின. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67139

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 63

பகுதி பதின்மூன்று : இனியன் – 5 பீமன் காட்டுக்குள் அவன் வழக்கமாக அமரும் மரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்திருந்தான். அவனைச்சூழ்ந்து பின்பொழுதின் வெள்ளிவெயில் இலைத்தழைப்பின் விரிவுக்கு மேல் கால்களை ஊன்றி நின்றிருந்தது. காற்று வீசாததனால் இலைவெளி பச்சைநிறமான பாறைக்கூட்டம் போல அசைவிழந்து திசை முடிவு வரை தெரிந்தது. பறவைகள் அனைத்தும் இலைகளுக்குள் மூழ்கி மறைந்திருக்க வானில் செறிந்திருந்த முகில்கள் மிதக்கும் பளிங்குப்பாறைகள் போல மிக மெல்ல கிழக்கு நோக்கி சென்றுகொண்டிருந்தன. முகில்களை நோக்கியபடி பீமன் உடலை நீட்டி படுத்தான். அவனுக்குக் கீழே அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67124

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 62

பகுதி பதின்மூன்று : இனியன் – 4 பெரிய மூங்கில் குழாய்களாலும் பலவகையான காய்களின் குடுக்கைகளாலும் உருவாக்கப்பட்ட தாளக்கருவிகளில் சிறிய குச்சிகளால் தட்டி தாளமிட்டு நடமிட்டபடி இடும்பர்குலத்துக் குழந்தைகள் குடில்களில் இருந்து கிளம்பினர். அவர்களுக்குப் பின்னால் குடிமூத்த ஆண்கள் நீண்ட கழிகளை கையில் ஏந்திச் செல்ல தொடர்ந்து இடையில் மான் தோல் அணிந்து பச்சை இலைகள் கொண்ட மரக்கிளை ஒன்றை ஏந்திய கடோத்கஜன் மகிழ்ந்து சிரித்து இருபக்கமும் நோக்கியபடி நடந்தான். அவனுக்குப்பின்னால் இடும்பியும் பெண்களும் சென்றனர். அவர்களின் வரிசையில் இணையாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67118

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 60

பகுதி பதின்மூன்று : இனியன் – 2 காட்டுக்குள் பறவைகள் துயிலெழுந்து இலைக்கூரைக்கு மேல் சுற்றிப்பறந்தன. சற்றுநேரத்தில் பறவையொலிகளால் காடு முழங்கத் தொடங்கியது. புல்வெளியில் இருந்து ஒரு நரி வாலை காலிடுக்கில் செருகியபடி ஓடி பீமனை அணுகி அஞ்சி பின்னடைந்தபின் திரும்பி புதருக்குள் சென்று மறைந்தது. புதரில் இருந்து ஒரு காட்டுக்கோழி ஓடி புல்வெளியை நோக்கிச் சென்றது. புல்வெளியில் இருந்து நீரோடையின் ஒளியுடன் வந்த பாம்பு காட்டுக்குள் நுழைவதை நோக்கியபடி நின்றவன் புன்னகையுடன் காலை ஓங்கி தரையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67215

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 59

பகுதி பதின்மூன்று : இனியன் – 1 இடும்பவனத்தின் எல்லைக்கு அப்பால் இருந்த சாலிஹோத்ரசரஸின் கரையில் பின்னிரவில் தனிமையாக பீமன் நின்றிருந்தான். கொதிக்கும் சமையற்பெருங்கலம் போன்ற சிறிய குளம் அது. அடியில் இருந்த வற்றாத ஊற்று மண்ணுக்குள் சென்றுகொண்டிருந்த ஆழ்நதி ஒன்றின் வாய். அதிலிருந்து கொப்பளித்தெழுந்த நீர் மண்ணுக்குள் வாழும் நெருப்பில் சூடாகி மேலெழுந்து ஆவி பறக்க தளதளத்துக்கொண்டிருந்தது. வெண்ணிறமான களிமண்ணால் ஆன வட்டவடிவக் கரைக்கு அப்பால் உயரமற்ற புதர்மரங்கள் கிளைதழைத்து நின்றிருந்தன. மிக அப்பால் சாலிஹோத்ரர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66972

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 54

பகுதி பதினொன்று : காட்டின் மகள் – 7 இடும்பவனத்தின் தெற்கு எல்லையில் இருந்த மூதாதையரின் நிலத்துக்கு இடும்பன் நடந்துசெல்ல அவன் குலத்தினர் சூழ்ந்து சென்றனர். பீமனை இடும்பி அழைத்துச்சென்றாள். பின்னால் பாண்டவர்கள் சென்றனர். தருமன் “அன்னையே, தாங்கள் அங்கு வராமல் இங்கேயே இருக்கலாமே” என்றான். குந்தி மெல்லிய ஏளனத்துடன் “நான் ஷத்ரியப்பெண் அல்ல என்று எண்ணுகிறாயா?” என்றாள். பீமன் “அன்னை வரட்டும். அவர் என் போரை இதுவரை நேரில் பார்த்ததில்லை அல்லவா?” என்றான். குந்தி புன்னகை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66667

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 53

பகுதி பதினொன்று : காட்டின் மகள் – 6 அடர்காட்டில் இடும்பி முன்னால் செல்ல பின்னால் பீமன் சென்றான். குந்தியும் தருமனும் நடக்க பின்னால் நகுலனும் சகதேவனும் பேசிக்கொண்டு சென்றனர். கையில் வில்லுடன் இருபக்கங்களையும் பார்த்தபடி அர்ஜுனன் பின்னால் வந்தான். அவர்களைச் சூழ்ந்து மரங்கள் வழியாக வந்த குரங்குகள் உரக்க சேர்ந்தொலி எழுப்பின. அதே ஒலியை எழுப்பி அவற்றைப்போலவே பீமன் உடலை ஆட்டி மறுமொழி சொன்னான். “அவர்களின் எல்லை முடிகிறது என்கிறார்கள் மூத்தவரே. இனி வேறு குலத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66600

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 52

பகுதி பதினொன்று : காட்டின் மகள் – 5 குந்தியும் தருமனும் இறைபீடம் அருகே வந்தபோது நகுலனும் சகதேவனும் மூதாதைக் கற்களுக்கு மலர்மாலை சூட்டியிருந்தனர். குந்தி தூக்கி வீசிய திருதராஷ்டிரருக்குரிய கல்லை எடுத்து சற்று அப்பால் தனியாக நிற்கச்செய்திருந்தான் சகதேவன். கைதவறி விழுந்தது போல அதன் அருகே ஒரு மலர் போடப்பட்டிருந்தது. குந்தி அதை நோக்கியதும் அவன் பார்வையை திருப்பிக்கொண்டான். குந்தி “சகதேவா, அதையும் எடுத்து பீடத்தின் அடியில் மண்ணில் வை” என்றாள். கூர்ந்த விழிகளுடன் திரும்பிய அர்ஜுனன் “அது யார்?” என்றான். “உன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66523

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 51

பகுதி பதினொன்று : காட்டின் மகள் – 4 சிரிப்பை அடக்க முடியாமலேயே இடும்பி பீமனைத் தொடர்ந்து நடந்து வந்தாள். “சிரிக்காமல் வா!” என்றான் பீமன் மீண்டும். “நாம் நெருங்கிவிட்டோம்.” என அதட்டினான். இடும்பி “சிரித்துக்கொண்டு வந்தால் என்ன நினைப்பார்கள்?” என்றாள். “அடக்கமில்லாதவள் என்று. முறைமைகள் அறியாதவள் என்று” என்றதுமே பீமனும் சிரித்துவிட்டான். “எங்கள் குலத்தில் சிரிக்காமல் வந்தால்தான் அப்படி எண்ணுவார்கள். அயலவரை நோக்கியதுமே சிரிப்பதுதான் இங்கே முறைமை” என்றாள் இடும்பி.  “நாங்கள் சிரிப்பை ஒடுக்கி ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66499

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 50

பகுதி பதினொன்று : காட்டின் மகள் – 3 அதிகாலையிலேயே இரண்டு கருங்குரங்குகள் வந்து பீமனை எழுப்பின. குடிலுக்கு நேர்கீழே இருந்த இரு கிளைகளில் அமர்ந்து எம்பி எம்பிக்குதித்து வாயைக்குவித்து அவை குரலெழுப்பின. பீமன் எழுந்து உடலில் ஒட்டியிருந்த மெல்லிய கரிநூல்களை தட்டியபடி அவற்றைப் பார்த்தான். அர்ஜுனன் புரண்டுபடுத்து “என்ன சொல்கிறார்கள்?” என்றான். பீமன் குடிலுக்கு வெளியே சென்று கிளைகளில் கால்வைத்து நின்று “தெரியவில்லை” என்றபின் பக்கவாட்டில் நோக்கி “இதுவா?” என்றான். அர்ஜுனனை நோக்கி திரும்பி “ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66476