Tag Archive: இசை

வாழ்க்கை எனும் அமுதத்துளி

லோகி மது அருந்தினால் விரும்பிப்பாடும் பாடல்களில் ஒன்று இது. பெரும்பாலும் அழுதுவிடுவார். இன்று இவ்வரிகளுடன் அவரது கண்ணீர் வழியும் முகமும் கலந்துவிட்டிக்கிறது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7855

கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள்

  தமிழின் தனித்தன்மை கொண்ட ஓர் இலக்கியவடிவம் என்று கிறித்தவ தோத்திரப்பாடல்களை சொல்லமுடியும். குமரிமாவட்டத்தில் பிறந்து வளார்ந்த நான் தொடர்ந்து நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அவற்றைக் கேட்டுவருகிறேன். என் மனம் கவர்ந்த கிறித்தவ தோத்திரப்பாடல்களின் பெரிய பட்டியலே உண்டு. ஆனால் இந்தப்பாடல்களின் முறையான வரலாறோ இதன் ஆசிரியர்களின் பெயர்களோ நானறியாதவை. சமீபத்தில் வாசிக்கநேர்ந்த ஒரு நூல் அதன் காரணமகாவே மிகுந்த மனக்கிளர்ச்சியை உருவாக்குவதாக அமைந்தது பேராசிரியர் யோ.ஞானசந்திர ஜான்சன் [தமிழ்த்துறை, கிறித்தவக்கல்லூரி தாம்பரம்] பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களின் மாணவர். அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58315

பழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்

I எப்போதும் எதிர்ப்படக் கூடிய சாத்தானை எதிர்பார்த்து சட்டைப்பைக்குள் சிலுவையை சுமந்தலையும் விசுவாசியைப் போல கவிதைத் தொகுதிகளை பையில் வைத்துக் கொண்டு அலைந்த நாட்கள் 2002 லிருந்து 2008 வரையிலான என் சென்னை வாசத்தின் நாட்கள். ஷங்கரின் கவிதைத் தொகுதிகள் இரண்டும் அவற்றில் உண்டு. கல்லூரியில் நான் உலவிக்கொண்டிருந்த கலை இலக்கிய உலகம் அனைத்தையும் விட்டுவிட்டு, கனிணிகளையும் கார்ப்பரேட் கம்பெனிகளையும் வென்றடக்க வேண்டிய நிர்ப்பந்தங்களோடு சென்னைக்கு அனுப்பப்பட்டேன். கும்பகோணத்தில் படித்த காலங்களிலிருந்து சிற்றிதழை சேர்ந்தவர்களோடு இருந்த நட்புகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111195

இசைக்கு மெய்ப்பொருள் விருது

கவிஞர் இசை சமகாலத் தமிழ்க்கவிஞர்களில் முக்கியமானவர். எளிய நேரடியான வரிகளில் அன்றாடக்காட்சிகளை சித்தரிப்பவர். அந்த நுண்சித்தரிப்பு வழியாக உருவாக்கப்படும் உணர்வுநிலைகளும் முழுமைப்பார்வையும் அவற்றை கவிதையாக்குகின்றன. தமிழ்க்கவிதையின் புதிய முகம் இவ்வருடத்திற்கான மெய்ப்பொருள் விருது இசைக்கு வழங்கப்பட்டுள்ளது. இசைக்கு வாழ்த்துக்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/78778

ஓர் அக்கினிப்பிரவேசம்

எம் எஸ். சுப்புலட்சுமியின் அதிதீவிர ரசிகரான ஒரு பிராமணர் எனக்கு அலுவலகத்தோழராக இருந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி ஏராளமாகப்பேசியிருக்கிறார். அவரது இல்லத்தில் எப்போதுமே எம்.எஸ் பாடிய பாடல்கள்தான் காலையில் முதலில் ஒலிக்கும் என்றார். ஒருபேச்சில் தற்செயலாகச் சொன்னார், எம்.எஸ்ஸின் முகம்தான் ஒரு மங்கலமான பிராமண குடும்பத்தலைவியின் முகம் என்று.   நான் சாதாரணமாக, எம்.எஸ் பிராமணப்பெண்ணே அல்ல என்றேன். அவருக்கு ஆச்சரியம். நான் அவர் மதுரை சண்முகவடிவு என்ற தேவதாசி குலத்து வீணைக்கலைஞருக்குப் பிறந்தவர். அவரது அப்பாபெயர் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4607

இசை – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், மகாராஜாவின் இசை படித்தேன் – அருமை தங்களுக்காக இந்த இராமாயண பாடல் நீங்கள் கேட்டிருக்கக் கூடும் இருப்பினும் .. புரியாத புதிய விஷயங்களை பெரியவர்கள் ” இருப்பா சொல்றேன் என்று ஆற அமர விளக்கும் போது ஏற்படும் தெளிவு மகிழ்ச்சி உங்கள் பல வரிகளில் உள்ளது போலவே மகாராஜாவின் இசையும் இவருடன் எனக்கு பிடித்தமானவர்கள் KVN மற்றும் சஞ்சய் நன்றி மணிகண்டன் திரு ஜெயமோகன், பேதங்களை வளர்க்கும் கருத்துக்களில் சிக்கவேண்டாம் என்பது என் பொதுவான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75456

மகாராஜாவின் இசை

திருமணமான ஆரம்பநாட்களில் வீட்டுப்பொருட்கள் வாங்கவே எங்களுக்கு சேமிப்பு சாியாக இருந்தது. காதல் மணமானதனால் சீர் எதுவும் கிடைக்கவில்லை .மேலும் அப்போது ஒற்றைச்சம்பளம் .ஓரளவு சுதாாித்தபோது அருண்மொழி நங்கை ஒரு டேப்ரிக்கார்டர் வாங்கவேண்டுமென ஆசைப்பட்டாள். அவளுக்கு தஞ்சைப் பகுதி காற்று வாக்கினால் கர்நாடக சங்கீத ஆர்வம் உண்டு. இந்தியா டுடே உதவி ஆசிாியர் நண்பர் அரவிந்தன் [இப்போது உலகத்தமிழ் இணையதளம்] வந்து இசையைப்பற்றி பேசிப்பேசி அவள் ஆர்வத்தினை தூண்டிவிட்டு போனார் .எனக்கு அந்த ஓசையே ஆகாது . தனி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75405

ஒலியும் மௌனமும்

அன்புள்ள ஜெ, இசையை நீங்கள் கேட்கும் முறைமை பற்றி எழுதியிருந்ததை படித்தேன். ஒலிகளைக் காட்சிகளாய் உணர்வது என்பது எனக்கு முற்றிலும் புதிதாக இருக்கிறது. ஒளியையும் பிரித்தறிந்தால் முடிவில் இருப்பது ஒலியலைகளே என்று எங்கேயோ படித்த ஞாபகம். உங்கள்மனம் ஒருவேளை பிம்பங்களால் மட்டுமேயானதோ என்றொரு ஐயமும் ஏற்பட்டது. ஆனால்அவ்வாறிருக்க சாத்தியம் மிகக்குறைவு என்றே தோன்றுகிறது. எந்த ஒரு தத்துவ சிந்தனையும், மரபும், மார்கமும் ஒலிகளுக்குத் தரும்முக்கியத்துவம் மிக அதிகம் என்றே தோன்றுகிறது. அது ஓங்காரத்தை உலக முதலாய் நிறுத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2304

ஞானக்கூத்தன் பற்றி இசை

உன்னதங்களின் பொந்திற்குள் புகுந்துவிளையாடும் எலிக்குஞ்சு [ஞானக்கூத்தன் கவிதைகளை முன்வைத்து .. ] 2000 க்கு பிறகு தமிழ்கவிதைகளுக்குள் நிகழ்ந்த பெருவிளையாட்டுக்களுக்கு ஒரு விதத்தில் சி.மணி, ஞானக்கூத்தன் ஆகியோர் துவக்கப்புள்ளிகள். ஞானக்கூத்தனின் விளையாட்டு சி.மணியைக்காட்டிலும் வெளிப்படையானதும் எளிமையானதுமாகும். மரபின் காதும் நவீன மனமும் கொண்டவை என ஞானக்கூத்தன் கவிதைகளைச் சொல்லலாம்.இவரின் சில கவிதைகள் தனிப்பாடல் திரட்டின் கவிதைகளை நமக்கு நினைவூட்டுபவை. ஆனால் பல தனிப்பாடல்களுக்கு கவிதை அந்தஸ்து கிடையாது. அவை வெற்றுவிளையாட்டுகள். ஞானக்கூத்தன் கவிதைகளில் உள்ளது ”விளையாட்டு பாவனை”. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68854

விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்

மலையாளக் கவிஞர், நாவலாசிரியர் டி.பி.ராஜீவன். முதன்மையான மலையாளப்படைப்பாளியாகிய ராஜீவன் கறாரான உணர்ச்சி வெளிப்பாடு, அங்கத நோக்கு கொண்ட எழுத்துக்களுக்காக அறியப்பட்டவர். நெடுங்காலமாக எனக்கும் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். குருநித்யா ஆய்வரங்கு நிகழ்த்திய தமிழ்-மலையாள கவிதை உரையாடல் அரங்குகளில் அனேகமாக அனைத்திலும் கலந்துகொண்டிருக்கிறார். ராஜீவனின் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் தமிழில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன டி பி ராஜீவன் கவிதைகள் வாசிக்க ஞானக்கூத்தனின் நண்பரும், மாயவரத்தைச் சேர்ந்தவருமான சா.கந்தசாமி தமிழின் நவீனத்துவ எழுத்துமுறையின் முன்னோடி. ‘கதையில் இருந்து கதையை வெளியேற்றுவதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68633

Older posts «