Tag Archive: ஆ.மாதவன்

கடைத்தெருவை கதையாக்குதல்…

  1962 நான் பிறந்த அதேவருடம் மலையாள எழுத்தாளர் எஸ்.கெ.பொற்றேகாட் ஒருநாவல் எழுதிவெளியிட்டார். ’ஒரு தெருவின் கதை’. கோழிக்கோடு நகரத்தின் முக்கியமான கடைவீதியான மிட்டாய்த்தெருவின் கதை அது. உண்மையில் தெருவின் கதை அல்ல, தெருவாழ் மக்களின் கதை. தெருவில் வாழும் பிச்சைக்காரர்கள், தினக்கூலிகள், அனாதைப்பையன்கள், வேசிகள் ஆகியோரின் கதை. கூடவே கடைவணிகர்களின் கதை. அவர்கள் எழுச்சிகளின் வீழ்ச்சிகளின் சரித்திரம். கேரள சாகித்ய அக்காதமி விருது பெற்ற அந்நாவல் இன்றும் மலையாள இலக்கியத்தில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்பட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9185

கபாடபுரம் இதழ் கட்டுரை

  கே என் செந்தில் ஆசிரியத்துவத்தில் வெளிவரும் கபாடபுரம் இணைய இதழில் ஜெ ஆ.மாதவன் குறித்து எழுதியுள்ள கட்டுரை . //ஜோதி சிங்கை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிக்கொன்ற இளைஞன் என்னசெய்வான்? கற்பழிப்பு என்பது தப்ப மிக எளிதானது, தனக்காக வாதிட அசட்டு மனிதாபிமானிகளும் மொண்ணையான பெரியமனிதர்களால் ஆன நீதியமைப்பும் உள்ளது என புரிந்துகொள்வான். அந்தக்கற்பழிப்பை நிகழ்த்திய கணங்கள் தன் வாழ்க்கையின் உச்சநிலை என்றும் அப்போது தன்னில் வெளிப்பட்ட தானே உண்மையான தான் என்றும் உணர்ந்திருப்பான். ஆகவே சிக்காமல் கற்பழிக்க எண்ணுவான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82752

ஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்

வெறும் ஐந்தாண்டுகள்தான் ஆகின்றன. நினைவுகளில் அவை எங்கோ உள்ளன. காரணம் சென்ற ஐந்தாண்டுகளாக தொடர்ச்சியாகச் செய்துவரும் பணிகள். பரந்துபட்ட தளங்களில் அல்ல, இலக்கியம் என்னும் ஒரே புள்ளியில் குவிந்து செயல்பட்டிருக்கிறோம். வருடம் ஒரு இலக்கியப்பெருவிழா கோவையில். விஷ்ணுபுரம்விருதுவிழா இன்று தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கிய கொண்டாட்டம். வருடத்திற்கு ஒரு இலக்கியக்கூடல், ஊட்டியில். தமிழகத்தில் இன்று நிகழும் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்று. சற்றும் தொய்வுறாமல். இருபதாண்டுகளாக நிகழ்கிறது குருநித்யா இலக்கியச் சந்திப்பு. இதைத்தவிர பாராட்டுவிழாக்கள், வாழ்த்துக்கூட்டங்கள். பல்வேறு பயணங்கள், சிறிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81933

ஆ. மாதவனுக்கு சாகித்ய அக்காதமி விருது

  மூத்த எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு இவ்வருடத்திற்கான சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இயல்புவாத எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர் ஆ. மாதவன். புகைப்படத்துல்லியத்துடன் புறவய உலகைச்சித்தரிக்கும் அழகியல் இது. மானுட அகத்தின் தீமையை ஊசிமுனைக்கூர்மையுடன் தொட்டு காட்டும் படைப்புகள் அவருடையவை. ஆ.மாதவன் கடைத்தெருவின் கலைஞன். திருவனந்தபுரம் சாலைத்தெருவின் வாழ்க்கையைப்பற்றி மட்டுமே அவர் எழுதினார். பிச்சைக்காரர் முதல் பெருவணிகர் வரை அனைவருமே ஒருவரை ஒருவர் எத்திப்பிழைக்கும் அந்தத்தெரு அவருக்கு இவ்வுலகின் குறியீடாகவே விரிந்தது ஒருபடைப்பின் படைப்புகளில் மூன்றில் ஒன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81927

விஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை

அன்புள்ள நண்பர்களுக்கு, மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் பொருட்டு நம் நண்பர்களால் உருவாக்கப்பட்ட விருது ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ . எல்லாவகையிலும் அடுத்த தலைமுறையினரால் அளிக்கப்படுவதாக இருக்கவேண்டும் இது என்பதை ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டோம். இதுவரை ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இம்முறை மூத்த கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படுகிறது. ரூபாய் ஒரு லட்சமும் நினைவுப்பரிசும் அடங்கியது இது.வழக்கமாக பரிசுபெறுபவர் பற்றி ஒரு நூல் வெளியிடப்படும். இம்முறை நண்பர் கெ.பி.வினோத் ஞானக்கூத்தனைப்பற்றி தயாரிக்கும் ஆவணப்படம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67272

அணிவாயில்

மகாபாரதத்தை நான் முதன்முதலாகக் கேட்டது என் தாயிடமிருந்து. பெரும்பாலான இந்தியக் குழந்தைகளின் அனுபவம் அதுவாகவே இருக்கும். ஆனால் எளிய குடும்பத்தலைவியாக இருந்தாலும் என் அன்னை ஒரு அறிஞர். தமிழ் மலையாளம் ஆங்கிலம் அறிந்தவர். மலையாளம் வழியாக சம்ஸ்கிருதத்தையும் குறிப்பிடும்படி அறிந்தவர். உலகஇலக்கியத்திலும் தமிழ்-மலையாள நவீன இலக்கியத்திலும் ஆழ்ந்த வாசிப்புள்ளவர். எழுத்தச்சனின் மகாபாரதத்தை அவர் மூன்றுமுறை முழுமையாகவே வீட்டில் முறைப்படி பாராயணம் செய்திருக்கிறார். அன்று அதைக்கேட்க ஒவ்வொருமுறையும் ஏழெட்டு பெண்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். அம்மா தன் இனிய மெல்லியகுரலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47119

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், அண்மையில் தஞ்சைப் பயணம் சென்றிருந்தேன். உங்கள் தஞ்சைப் பயணம் குறித்த கட்டுரைகளால் உந்தப்பட்டது ஒரு முக்கிய காரணம். நீங்கள் சென்ற இடங்கள் அனைத்திற்கும் செல்ல இயலவில்லை எனினும், நாங்கள் சென்றவை அனைத்தும் நீங்கள் சுட்டிக்காட்டியவை. குடுமியான்மலை, தாராசுரம், கொடும்பாளூர் ஆகிய அற்புதமான இடங்களுக்குச் செல்ல ஆர்வமூட்டியதற்கு என் நன்றிகள். மூன்று ஆண்டுகளாய் உங்கள் பதிவுகளைத் தொடர்வதன் விளைவாய், இந்த வருடம் நான் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிற பல புத்தகங்களும், நீங்கள் அடையாளம் காட்டியவை…நாஞ்சில் நாடன், ஆ.மாதவன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11369

கடைத் தெருவின் கலைஞன், முன்னுரை

ஆ.மாதவன் நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நம்முடைய இயல்புவாத எழுத்தின் சாதனைகளில் ஒன்று அவரது புனைவுலகம். கண்முன் நிகழும் அன்றாட யதார்த்தத்தை ‘அப்பட்டமாக’ சொல்லும் பாவனை கொண்ட இவ்வெழுத்து நம் சமூகப்பிரக்ஞைகளை ஓங்கி அறைந்து அதிரச்செய்திருக்கிறது. அடிப்படை வினாக்களை நோக்கி நம்மை செலுத்தியிருக்கிறது. ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத்தெருவை களமாகக் கொண்டு எழுதியவர். சாலைத்தெரு அவரது எழுத்தில் காமகுரோதமோகங்களின் கொந்தளிப்பு நிகழும் வாழ்க்கைவெளியாகவே ஆகிவிட்டிருக்கிறது. ஆ.மாதவன் தமிழின் தேர்ந்த இலக்கியவாசகர் நடுவே எப்போதும் முக்கியமான படைப்பாளியாகவே கருதப்பட்டிருக்கிறார். ந.பிச்சமூர்த்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9395

ஆ.மாதவன் கடிதங்கள்

அன்புள்ள ஜெ ஆ.மாதவனைப்பற்றிய உங்கள் நீண்ட கட்டுரையும் அவரது மனம்திறந்த பேட்டியும் மிக முக்கியமானவை. ஆ.மாதவனைப்பற்றிய விரிவான அறிமுகத்தை அவை அளித்தன. ஒரு படைப்பாளிக்கு விருதளிக்கும்போது அதை ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டு அவரை விரிவாக அறிமுகம் செய்யவும் ஆராயவும் நீங்கள் முயற்சி எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது. விருதுகள் இப்படித்தான் அமையவேண்டும். ஆ.மாதவன் பேட்டியிலே நீங்கள் கேட்க மறந்த ஒரு கேள்வி. அவர் மலையாளம் படித்து கேரளத்திலே வாழ்பவர். நீங்கள் தமிழகத்தில் இருப்பதைப்போல. அவர் ஏன் மலையாளத்திலே எழுதாமல் தமிழிலே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10082

ஆ.மாதவன், தி ஹிண்டு சென்னை

விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் வழங்கும் விஷ்ணுபுரம் இலக்கிய விருது ஆ.மாதவன் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதைப்பற்றி விரிவான செய்தி தி ஹிண்டு சென்னை பதிப்பில் வெளியாகியிருக்கிறது A. Madhavan selected for Vishnupuram Literary Award ஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – இணையதளம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/10714

Older posts «