Tag Archive: ஆஸ்திரேலியா

புல்வெளிதேசம் 13அறைகூவலும் ஆட்டமும்

எண்பதுகளில் நான் ஊர் ஊராக அலைவதைப்பற்றி சுந்தர ராமசாமியிடம் சொன்னபோது ”சும்மா இடங்களையும் முகங்களையும் பாத்துண்டே போறதினாலே என்ன கிடைக்கும்?” என்று கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. குத்து மதிப்பாக ”மனசுக்கு உற்சாகமா இருக்கும் சார். நெறைய கற்பனைகள் வரும்…” என்று சொன்னேன். ” அந்த எடத்தைப்பத்தியோ ஜனங்களைப் பத்தியோ உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதே..அதனால என்ன பிரயோசனம்?” என்றார் சுந்தர ராமசாமி. பயணங்களில் நம் முன் நிகழும் நிலக்காட்சிகளும் முகங்களும் நமக்களிக்கும் அனுபவ வெளி சாதாரணமானதல்ல. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2834

புல்வெளிதேசம் 12,வேட்டையும் இரையும்

மெல்பர்ன் நகரில் இப்போது இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவர்கள் மேல் நடக்கும் இன ரீதியான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப்போராட்டங்கள் நடைபெறுகின்றன. சென்ற சிலநாட்களாக இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆந்திராவைச்சேர்ந்த ஒருவர் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். பஞ்சாபைச்சேர்ந்த ஒருவர் மேல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது. அவற்றை இனம் தெரியாத இளம்வயது குற்றவாளிகள் செய்திருக்கிறார்கள் அவை இனக் காழ்ப்பின் வெளிப்பாடுகள் என இந்திய மாணவர்கள் சொல்கிறார்கள். பேட்டிகளில் மாணவர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் பல்கலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2830

புல்வெளிதேசம்,கடிதம்

ஜெ.மோ., சுமார் 20 வருடங்கள் முன்பு நான் துவக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ‘கல்கண்டு’ பத்திரிக்கையில் லேனா.தமிழ்வாணன் ஆஸ்திரேலிய- நியூஸிலாந்து பயணக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தார். அப்போது மிக ஆவலாக படித்த பகுதி அது. கடையிலிருந்து வாங்கிக் கொண்டு நடந்து வீட்டுக்கு வரும்போதே படித்து முடித்துவிடுவேன். இப்போது அதே நிலப்பகுதியை பற்றி முற்றிலும் மாறுபட்ட ஒரு எழுத்தாளரின் விழி வழியே பார்க்கப் போகிறேன் என்கிறபோது இந்த அனுபவம் எப்படி இருக்கப் போகிறது என்ற ஆவல் எழுகிறது. சாய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2734

ஆஸி கடிதங்கள்

அன்புள்ள ஜெ, அமுல் மற்றும் மொரார்ஜி பற்றி ஒரு சிறிய செய்தி. 1946 ஜனவரி 4 ஆம் தேதி குஜராத்தில் கைரா மாவட்டத்தில் சமார்க்கா என்னும் இடத்தில் நடந்த விவசாயிகளின் கூட்டங்களை நடத்தினார் மொரார்ஜி தேசாய். சர்தார் பட்டேலின் ஆலோசனைப்படி அது நடந்தது. தீவிரமான பால் உற்பத்தி, சீரான பால்சேகரிப்பு, தரகர்களை முழுக்கவே தவிர்ப்பது ஆகியவை கொள்கைகளாக இருந்தன. தேசிய அளவில் வணிகம் செய்யவும் திட்டமிட்டார்கள். URL Link:http://www.indiavisitinformation.com/indian-personality/verghese-kurian.shtml பாலகிருஷ்ணன் அன்புள்ள ஜெ.மோ. வணக்கம்.  ஆன்ஸாக் தினத்தையும்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2656

புல்வெளிதேசம் 11, பிலம்

கேரளத்தில் திரிச்சூர் அருகே திருவில்வமலை என்ற ஊரில் ஒரு பெரிய குன்றின்மீது ஒரு குகை உள்ளது. அந்தக்குகைக்கு புனர்ஜனி என்று பெயர், அதாவது மறுபிறப்புக்குகை. இயற்கையாக உருவான குகை அது. நெடுநாட்களாக மழைநீர் ஓடி அங்கிருந்த கனிமங்களைக் கரைத்து உருவான வெற்றிடம் குகையாக ஆகியிருக்கிறது. குகைக்குள் நுழையும் இடம் கொஞ்சம் பெரிதாக இருக்கும். ஆனால் போகப்போக மிகச்சிறிதாக ஆகிவிடும். முற்றிலும் இருட்டு. பெரும்பாலான தூரத்தை தவழ்ந்தே கடக்க முடியும். குகை நம் உடலளவுக்கே இருப்பதனால் ஒருபோதும் பின்னால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2648

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் பயணக்கட்டுரைகளை இன்று படித்துக்கொண்டிருந்தேன். வரலாறை பயணத்துடன் அழகாக இணைத்திருக்கிறீர்கள். கலிபோலி போன்ற தொலைதூர நாட்டில் நிகழ்ந்த போரில் இந்தியர்கள் பங்கு கொண்டதைப்பற்றி நீங்கள் எழுதியிருந்ததை படிக்க ஆச்சரியமாக இருந்தது. அதைப்பற்றிய எந்த தகவலும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதுதான் சோகம். எனக்கு 33 வயதாக இருக்கும்போது அமெரிக்கா வந்தேன். நம்முடைய வரலாற்றுணர்வு எவ்வளவு சிறியது என்பதற்கான ஆதாரம் இது. நீங்கள் உங்கள் தீவிரமான வாசகர்களை அந்த வரலாற்றுக்குள் இழுத்துச்செல்லும் விதமாக அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2644

புல்வெளிதேசம் 10, காடும் வீடும்

மலையாள எழுத்தாளர் பி.கேசவதேவின் கதையில் இப்படி வருகிறது ”காலையில் எழுந்ததும் மப்ளரைக் கட்டிக்கொண்டு கம்பிளியை நன்றாகப்போர்த்திக் கொண்டு கிளம்பி கரிமலை ஏறி இறங்கி நீலிமலையைச் சுற்றிக்கொண்டு பாறைக்கடவு தாண்டி சின்னாறில் இறங்கி மறுபக்கம் ஏறினால் வரும் மண்சாலையோரமாக இருக்கும் கேசு அம்மாவனின் சாயாக்கடைக்குப் போய் சுடச்சுட பெட்காபி குடிப்பேன்” கிட்டத்தட்ட அதேமாதிரியான சூழலில் அமைந்த ஏராளமான ‘ஓணம் கேறா மூலைகள்’ முன்பெல்லாம் மலைநாடான எங்கள் ஊர்ப்பக்கம் இருந்திருக்கின்றன. பக்கத்து வீடு என்பது குடையும் கம்பும் கைவிளக்குமாக ஒருமணி நேரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2640

புல்வெளிதேசம் ,9, கங்காரு

ஊட்டியில் ஒருமுறை நான் தனியாக காலைநடைசென்றுகொண்டிருந்தேன். நீலகிரி மலையணிலுக்காக அண்ணாந்து பார்த்துக்கொண்ட்டே செல்வது என் வழக்கம். மிக அழகான பிராணி அது. பூனை அளவுக்கு பெரியது. மாந்தளிரின் நிறம். அதன் சிறப்பே அதன் வால்தான். யானைப்புல்லின் கதிர் போல செந்தவிட்டு நிறத்தில் பிசிறுகள் பொலிந்து மிக அழகாக இருக்கும். காட்டில் அப்படி எதையாவது தேடிக்கொண்டே சென்றால் ஒருகட்டத்தில் காடு மறைந்து அந்த இல்லாத மிருகம் மட்டுமே நம் மனதில் இருக்கும். அப்போது அனேகமாக அம்மிருகத்தை தவற விடமாட்டோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2631

கடிதங்கள்

அன்பு ஜெ. எம்., குரு வணக்கம். இதற்கு முன் அனுப்பிய அஞ்சல் கிடைத்திருக்குமென எண்ணுகிறேன். ஆஸ்திரேலியா கட்டுரைகள் மனக்கண் முன் அந்த நாட்டின் நிலவியலை..பழக்க வழக்கங்களை..பண்பாட்டுக் கூறுகளை ஓடவிடுவனவாக உள்ளன. புலம் பெயர்ந்தும் மாறாத சடங்கு சம்பிரதாய மத ரீதியான மரபுகளும் உண்டு. புலம் பெயர்வதாலேயே , இங்கே கைக் கொள்ளப்படும் சில மோசமான தவறான மரபுகள் கைவிடப் படுவதற்கான சாத்தியக் கூறுகளும் உண்டுதானே ?  ‘கூரைஎரிந்ததில் நிலவை ரசிக்கும் நான் ‘ என்ற வசந்திராஜாவின்(ஈழக் கவிஞர்) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2636

ஆஸ்திரேலியா:கடிதங்கள்

அன்புள்ள ஜெ.மோ, வணக்கம். நலமா? ஆஸ்ட்ராலியாப் பயணக்கதையைத் தொடர்ந்து வாசிக்கின்றேன். வீடு கட்டும் முறைகள் நம் நாட்டைவிட இந்தப் பகுதிகளில் வேறுபடுவது உண்மையே. நியூஸி & ஆஸி  நாடுகளில் அநேகமாக ஒன்றுபோலதான் இருக்கிறது. எங்கள் வீட்டைக் கட்டும்போது இதை அவதானித்து தினமும் என்ன நடந்தது என்று எழுதி வைத்திருந்தேன். அவைகளை இங்கே என் வலைத்தளத்தில் வீடு ‘வா வா’ங்குது என்ற தொடரில் பதிந்து வைத்தேன்.  நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள் என்று சொல்லத் தயக்கமாக இருக்கிறது. மொத்தம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2627

Older posts «

» Newer posts