Tag Archive: ஆஸ்திரேலியா

சுவையறிதல்

அனைவருக்கும் வணக்கம், பதின்வயதுகளில் புல்வெட்டும் நண்பர்களுடன் காட்டுக்குச் செல்லும் வழக்கம் எனக்கு இருந்தது. கல்லூரிக்குச்செல்லும் பாவனையில் கிளம்பி புத்தகங்களை ஏதேனும் கடைகளில் போட்டுவிட்டுச் செல்வேன்.இரவில் திரும்பி வந்துசேர்வேன். படிப்பு உள்ள ஒரு நண்பன் கூடவருவதிலும் அவன் நிறைய கதைகளைச் சொல்வதிலும் நண்பர்களுக்கு மகிழ்ச்சி. காட்டைப்பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஒருமுறை ஒரு காட்டுயானையைப் பார்த்தேன். நாங்கள் ஒரு மேட்டில் ஏறியபோது கீழே விரிந்த சற்று வரண்ட நிலத்தில் பிரம்மாண்டமான கொம்பன் மேய்ந்துகொண்டு நின்றிருந்தது. உடம்பெல்லாம் செம்மண் படிந்து வரிவரியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2476

பார்த்த ஞாபகம்

அன்புள்ள ஜெயமோகன், ஃபேஸ்புக்கில் பதிந்தது உங்கள் பார்வைக்கு, நன்றி Venkada Prakash அட……பாத்துருக்கோம் படிச்சிருக்கோம் ஆனா திருடப்பட்டும் வந்துருக்கலாம்னு நெனைக்கத் தோணலையே நமக்கு!!!!! செய்தி: அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த ஸ்ரீபுரந்தானில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து நடராஜர் சிலை கடந்த 2008-ஆம் ஆண்டு திருடு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதனிடையே, விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இருந்த அர்த்தநாரீஸ்வரர் சிலையும் திருடு போனது கண்டறியப்பட்டது. ஆஸ்திரேலியா சென்ற சிலைகள்: …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61876

புல்வெளிதேசம் 20,விழாவும் விடையும்

கலாப்ரியாவின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்று உண்டு, பயணத்தில் உற்சாகமான ஒரே அம்சம் வீட்டுக்குத் திரும்பி வருவதுதான் என. ஆஸ்திரேலியப்பயணமும் முடிவை நோக்கி நெருங்கியது. ஊர்திரும்ப சில நாட்களே இருந்தன. ஏப்ரல் இருபத்தேழு அன்று தாய் ஏர்வேஸில் ஊருக்கு செல்வதாக இருந்தோம். அதற்குள் ஆஸ்திரேலியா ஒருமாதிரி சொந்தநிலம்போன்ற ஒரு சாயலைக் கொண்டு முகம் கொடுத்துப் பேச ஆரம்பித்தது. நானும் அருண்மொழியும் டாக்டருடன் காலையில் அருகே உள்ள பூங்காவுக்கு நடக்கச்செல்லும்போது முதல்முறையாக இயற்கையில் நாம் அடையும் முக்கியமான சந்தோஷம் ஒன்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4451

புல்வெளிதேசம் 19,மெல்போர்ன்

ஆஸ்திரேலியாவில் பயணம்செய்யும்போது வழிதவற வாய்ப்பே இல்லை. துல்லியமாக வழிகள் வகுக்கபப்ட்டு ஆவணபப்டுத்தப்பட்ட நாடு. பிரம்மாண்டமான ஒரு வரைபடம் போன்றது அது. வழிதவற முடியாத சாலையின் சோர்வூட்டும் அம்சம் என்னவென்றால் அதில் புதியவை என எதுவுமே நிகழ முடியாதென்பதே. அந்நிலையில் பயணத்தின் கவர்ச்சிகளில் முக்கியமான ஒன்று இல்லாமலாகி விடுகிறது. வழி தவறுவதென்பது நமக்கு முன் உள்ள சாத்தியக் கூறுகளில் நாம் முற்றிலும் அறிந்திராத ஒன்று திறந்து கொள்கிறது என்பதுதான் 14-4-2009 அன்று மெல்பர்னில் பேராசிரியர் காசிநாதன் எங்களை அழைத்துச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4438

புல்வெளிதேசம் 18, நதிக்கரையில்

ஆற்றங்கரைகளில்தான் பெரும்பாலான நகரங்கள் அமைந்திருக்கின்றன. ஏனென்றால் நகரங்கள் இயல்பாகவே அமைவது அங்கேதான். முற்காலங்களில் உள்நாட்டுப் போக்குவரத்துக்கு நதிகளையே நம்பி இருந்திருக்கிறார்கள். டெல்லி யமுனையின் கரையில் அமைந்தது அதனால்தான். மதுரை வைகை கரையில் அமைந்ததும் அக்காரணத்தாலேயே. காலப்போக்கில் நதிகளை போக்குவரத்துக்காக நம்புவது அனேகமாக நின்றது. அதற்கு ஒரு காரணம் விரிவான காடழிவின் விளைவாக நதிகளில் நீர்ப்போக்கு குறைந்தது என்பதுதான். பின்னர் அணைகள் வந்தன. நதி நீர் திசைமாற்றப்பட்டபோது பெரும்பாலான நதிகள் வரண்ட தடங்களாக மாறின அத்துடன் நகரங்களின் வளர்ச்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4107

புல்வெளிதேசம் 17,ரயிலில்

தொல்லியல் ஆய்வாளரான செந்தீ நடராஜன் என் வீட்டுக்கு வந்திருந்தபோது கேட்டேன், நாகர்கோயிலுக்கு ரயில் வந்த நாள். அவர் உடனே அவரது மனைவிக்கு ·போன் போட்டு கேட்டுவிட்டு ஆகஸ்ட் ஆறு 1972 ல் ரயில் விடுவதற்கான கால்கோள் விழா நடந்தது என்றார். நான் ஆச்சரியப்பட்டபோது தன் மகள் அன்றுதான் பிறந்தாள் என்று சிரித்துக்கொண்டே சொன்னார். திருவனந்தபுரத்துக்கு ரயில் வந்து அரைநூற்றாண்டு கழிந்துதான் நாகர்கோயிலுக்கு ரயில் வந்தது. குமரிமாவட்டத்தின் மேடுபள்ளமான நில அமைப்பு காரணமாக இங்கே ரயில்பாதை அமைப்பது மிகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3278

ஆஸ்திரேலியாவில் இனவெறித்தாக்குதல்

அன்புள்ள ஜெயமோகன், ஆஸ்திரேலியாவில் இப்போது இந்தியர்கள்மேல் நடக்கும் இனவெறித்தாக்குதல்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஜாஸ் டயஸ் ஆஸ்திரேலியாவின் தாக்குதல்களைப் பற்றி இம்மாத சண்டே இண்டியன் இதழில் மிண்டு பிரார் என்ற ஆஸ்திரேலிய சீக்கியர் எழுதிய கடிதம் உள்ளது. ”ஆஸ்திரெலியர்கள் மேல்தான் குற்றமா?” என்ற அக்கட்டுரை மிக முக்கியமான ஒன்று. அதில் அவர் அங்கே படிக்கச் சென்றிருக்கும், குடியேறியிருக்கும் இந்தியர்களின் நடத்தை பற்றிச் சொல்லி அது அங்குள்ள மக்களிடம் உருவாக்கியிருக்கும் ஆழமான மனக்கசப்பை பற்றிச் சொல்லியிருக்கிறார். நூற்றுக்கு நூறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3120

புல்வெளி தேசம் 16 நீலமலை

      நாஞ்சில்நாட்டில் தாடகைமலை என்ற ஒரு மலை உண்டு. நாஞ்சில்நாடனின் ஊரான வீரநாராயண மங்கலத்தில் நின்று பார்த்தால் அந்த மலை ஒரு மாபெரும் பெண்ணுருவம் தலைமுடி பரப்பி கால்களை நீட்டி முலைக்குன்றுகளுடன் மல்லாந்து படுத்திருப்பதாகவே தோன்றும். இன்னும் கச்சிதமாகப் பார்க்கவேண்டுமென்றால் பூதப்பாண்டி கோயிலில் நின்று பார்க்கவேண்டும். பார்க்கப்பார்க்க அந்த உருவம் அப்படியே பூதாகரமாக தெளிந்து வருவது ஒரு பெரிய அனுபவம். இமையமலையில் பெரும்பாலான சிகரங்களுக்கு இவ்வாறு உள்ளூர் பெயர்கள் உண்டு.இயற்கைமீது படியும் பழங்குடியின் பார்வை என்பது கிட்டத்தட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3047

புல்வெளிதேசம்: 15,மண்ணின் மனிதர்கள்

ஆஸ்திரேலியா பழங்குடிகள் உலகின் மிகத்தொன்மையான பண்பாட்டுக்கு வாரிசுகள் என்கிறார்கள். கிட்டத்தட்ட எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்பு பெரும்பனியுகத்தில் கடல்கள் உறைந்திருந்தபோது அவர்கள் ஆசிய மையநிலம் வழியாக நடந்தே இங்கே வந்திருக்கலாம் என்கிறார்கள். வெள்ளையர்கள் ஆஸ்திரேலியாவுக்கு  வந்தபோது அந்தக் கண்டத்தில் ஏழரை லட்சம் பழங்குடிகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். அவர்கள் பூமியில் தனித்துவிடப்பட்டமையாலும்  எண்ணிக்கை குறைவாக இருந்து வளங்கள் அதிகமாக இருந்தமையாலும் அவர்கள் மானுட நாகரீக வளச்சியின் பல புற அடையாளங்களை அடையவேயில்லை. உதாரணமாக அவர்களுக்கு விவசாயம் தெரியாது. மிருகங்களை பழக்கவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2858

புல்வெளிதேசம் 14,துறைமுகம்

தொன்மையான துறைமுகங்கள் அனேகமாக எதுவுமே இப்போது துறைமுகங்களாக இல்லை என்பதை சிலர் கவனித்திருப்பார்கள். தென்னிந்தியாவின் பெரும்புகழ்பெற்ற துறைமுகங்களில் பூம்புகார் இப்போது ஒரு சேற்றுமேடு. கொற்கை இன்றைய காயல்பட்டினம் அருகே ஒரு மணல்மேடு. கேரளத்தில் கொடுங்கல்லூர் என அழைக்கப்படும் சேரன் செங்குட்டுவனின் வஞ்சியில் இப்போது கடலே இல்லை. பழங்காலத்துத் துறைமுகங்கள் எல்லாமே நதிகளின் அழிமுகங்களில் அமைந்தவை. பூம்புகார் காவேரி அழிமுகம். கொற்கை தாமிரவருணியின் அழிமுகம். வஞ்சி பேரியாற்றின் அழிமுகம். காரணம் அன்றைய துறைமுகங்களின் சரக்குச்சேமிப்புப் பகுதி உள்நிலத்தில் இருக்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2854

Older posts «