Tag Archive: ஆழிசூழ் உலகு

மின்தமிழ் பேட்டி 4

38. ஆண்டுதோறும் இலக்கியவாதிகளை அடையாளங்கண்டு விருது வழங்குதல், ஊட்டியில் நடைபெறும் இலக்கிய முகாம் – இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் என்ன? நீங்கள் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தபடி அது செயல்படுகிறதா? (அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொள்வது ஏதேனும் ஒருவகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும், அல்லது குறைந்தபட்சம் கருத்துச் சாய்வையேனும் ஏற்படுத்தும் எனக் கருதுவதால் நான் அதில் இணையவில்லை). பதில் இலக்கியம் தனிமனிதர்கள் வழியாக சமூக நிகழ்வாக வளர முடியாது. ஆகவே அதற்கு ஓர் இயக்கம்தேவை என்று க.நா.சு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73137

மின் தமிழ் பேட்டி 3

30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன உடனடி மதிப்பீடு செய்வது என் வழக்கம். ஏனெனில் பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69820

ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி

2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது கொற்கை நாவலுக்காக ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆழிசூழ் உலகு நாவல் மூலம் தமிழ்வாசகர்கள் நடுவே கவனிக்கப்பட்டவர் ஜோ. தமிழின் மீனவ மக்களின் வாழ்க்கையை எழுதிய முதல் மீனவர் அவர். எழுதப்படாத வாழ்க்கைகளை எழுதும் நவீன தமிழிலக்கியப்போக்கு கண்டடைந்த மிகச்சிறந்த வெற்றி என்பது அவரது இருநாவல்கள்தான் நண்பர் ஜோ டி க்ரூஸுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்   இணைப்புகள் கடலறிந்தவையெல்லாம்- ஜோ டி க்ரூஸின் ஆழிசூழ் உலகு ஆழிசூழ் உலகு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43327

அகமும் ஆன்மீகமும்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் உங்கள் இணையதளத்தைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். என் ஆன்மீகப்பயணத்தில் நான் தனித்தவனல்ல என்ற உணச்சி ஏற்படுகிறது. ஒரு கோரிக்கை, நம்முடைய கடலோரத்து தெய்வங்களைப்பற்றி ஏதாவது விரிவாக எழுதமுடியுமா? மற்ற இடங்களின் வழிபாட்டு மரபைப்பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளது. ஆனால் கடலோர மக்களின் ஆன்மீகம் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கிறது இதற்கான காரணம் ஏதாவது இருக்கமுடியுமா? செந்தில் வி அன்புள்ள செந்தில் தமிழகத்துக் கடலோர மீனவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பதினேழாம் நூற்றாண்டில் கிறித்தவ மதத்துக்கு மாற்றப்பட்டார்கள். நூறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35458

ஓராயிரம் கண்கள் கொண்டு

நாவலைப் படித்தபின் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இந்த நாவலை இருவர் எழுதியிருக்கிறார்கள் என்பதுதான். ஒன்று ஜோ எனும் படித்த மீனவ இளைஞர், களப்பணியாளர், ஆய்வாளர், இன்னொருவர் டி. குருசா எனும் மீனவ கிராமத்துக் கிழவி. கொஞ்சம் கற்பனை செய்தால் அவளைக் கண்கள் முன் கொண்டுவந்துவிடலாம். ஓலைக் குடிசையின் கீழ் அமர்ந்து கொண்டு, இடித்து இடித்துக் குழிவிழுந்த ஒரு கல்லில் மழுங்கிப்போன இன்னொரு கல்லை வைத்து, கல்லைப் பல்லாக்கி செக்கச் செவேலென வெற்றிலையை இடித்துக்கொண்டே, கதை கேட்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22384

ஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…

தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரைப்பகுதியைச்சேர்ந்த ஜோ டி குரூஸ் பரதவ குலத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் கடலோடி மீன்பிடித்தவர். சென்னை லயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு கப்பல் போக்குவரத்துத் துறையில் இன்று மிக முக்கியமான நிபுணராக இருக்கிறார். தற்செயலாக சில கவிதைகளுடன் தமிழினி வசந்தகுமாரை அவர் காணவந்தார். கவிதைகள் நவீனக் கவிதையின் மாற்றங்களை உணராதவையாக இருந்தன. வசந்தகுமார் அவரிடம் அவற்றை அச்சிடுவது உகந்தது அல்ல என்று சொல்லிவிட்டு பொதுவாகப்பேசிக் கொண்டிருந்தபோதுதான் அவரது மகத்தான அனுபவச்சொத்தும் கூர்மதிமூலம் தன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/59