குறிச்சொற்கள் ஆளுமை

குறிச்சொல்: ஆளுமை

ஓர் அமரகாதல்

திரு.வி.கல்யாணசுந்தர முதலியார். தமிழ் விக்கி சென்னை நீதிமன்றத்தில் பணியாற்றிய ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர் திரு.வி.கல்யாணசுந்தரனாரின் நண்பர். அவரைக்காண பல்வேறுவகை மக்கள் தினமும் வந்துகூடுவார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் விதவைகள். அவர்களுக்கு என்று ஏதேனும் ஓர் அமைப்பு...

தன்னை விலக்கி அறியும் கலை

வணக்கத்திற்குரிய குருநாதர்களே, நண்பர்களே, குரு நித்யாவின் நினைவுநாளான இன்று அவரைப்பற்றிப் பேசுவதற்காக பதினாறு மணிநேரம் பேருந்தில் அமர்ந்து வந்து இறங்கி நேராக மேடையேறியிருக்கிறேன். அவரைப்பற்றி இக்குருகுல நிகழ்ச்சியில் பொதுவான பேச்சுகள் அவரை ஒரு ஞானியாக,...

அலைகளென்பவை….

1997 முதல் 2000 வரை நான் தக்கலைக்கு அருகில் உள்ள பழைய கேரளத்தலைநகரமான பத்மநாபபுரத்தில் வாழ்ந்தேன். அப்போது பத்மநாபபுரத்தின் கோட்டைவாசலில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் முன்னால் ஒரு வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் சிறிய பீடத்தைக்...

வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்

: வைக்கம் முகமது பஷீரின் ஒரு கதாபாத்திரம் குழந்தையாக இருக்கும்போது பள்ளியில் ஆசிரியர் கேட்கிறார் "ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் என்ன வரும்டா?'' குழந்தை தன் ஊரில் குன்றுமேலேறி நின்று இரு ஆறுகள் இணைவதைப் பார்த்த...

இறைவிருப்பம்

   கவிஞர் வயலார் ராமவர்மா குருவாயூர் கோவில் மேற்குவாசல்முன் நின்றுகொண்டிருந்தார். ஒரு சிகரெட் பற்றவைத்து இழுத்து புகைவிட்டு குருவாயூரப்பனைப் பார்த்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அதைக்கண்டு காவலாள் ஓடிவந்தார். ''அய்யோ சார், இங்கே புகைபிடிக்கக் கூடாது...அபச்சாரம்...பாவம்''....

நாஞ்சில் நாடனின் கும்பமுனி

  ஓர் எழுத்தாளனை மதிப்பிடுவதற்குரிய மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று அவனுடைய மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் அவனைக் கண்டடைவதாகும். நெஹ்ல்யுடோவில் தல்ஸ்தோயை (உயிர்த் தெழுதல்) ராஸ்கால் நிகாஃபில் தஸ்தயேவ்ஸ்கியை (குற்றமும் தண்டனையும்) ஜீவன் மொஷயில்...

அ.முத்துலிங்கம் நேர்காணல்

அ.முத்துலிங்கம் நேர்காணல் - ஜெயமோகன் April 27, 2003 – 4:43 am   “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!” ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா’வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு...

நாராயண குரு எனும் இயக்கம் -1

  நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் 'கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி' என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும்...

பெரியசாமி தூரன்

முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் நயினார் என்று ஒரு பாடகரின் கச்சேரியைக் கேட்க நேர்ந்தது. குழித்துறை மகாதேவர் கோயிலில். அன்றெல்லாம் எங்களுக்கு சினிமா ஒரு பொருட்டே அல்ல. காரணம் படம்பார்க்க தொடுவட்டிக்குத்தான் செல்லவேண்டும். பணம் கொடுக்க...

சதுரங்க ஆட்டத்தில்

  ''டே நீ சி.வியை வாசிச்சிருக்கியா?''என்றார் பாலசந்திரன் சுள்ளிக்காடு. ''ஆமாம்'' என்றேன். ''என்ன வாசிச்சே?'' நான் யோசித்து ''எல்லாம் ஹிஸ்டாரிகல் ரொமான்ஸ். அதெல்லாம் லிட்டரேச்சர் இல்லை'' என்றேன். அப்போது நான் சுந்தர ரமசாமியின் ஞானப்பிடியில்...