Tag Archive: ஆலிவர் சாக்ஸ்

எரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை

1996 காலகட்ட்த்தில் நான் விஷ்ணுபுரம் நாவலை எழுதி மீண்டு, அன்று இங்கே பேசப்பட்டு சற்றே ஓய்ந்துவிட்டிருந்த பின்நவீனத்துவச் சிந்தனைகளை மூலநூல்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றபோது நித்ய சைதன்ய யதியின் மதிப்புமிக்க வழிகாட்டுதல் கிடைத்தது. பின்நவீனத்துவச் சிந்தனைகளை வாசிக்கையில் நேர் எதிரான இருவகை சிந்தனைகளை இருபக்கமும் நிறுத்திக்கொண்டு வாசிப்பதே சமநிலையை உருவாக்கும் என்று நித்யா சொன்னார். ஒன்று மார்க்ஸிய இலட்சியவாதம். இன்னொன்று நரம்பியல் தொகுப்புநோக்கு.அவர் எனக்குப் பரிந்துரைத்த நூல்களில் ஒருபக்கம் எரிக் ஹாப்ஸ்பாம் இருந்தார். மறுபக்கம் ஆலிவர் சாக்ஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22727

ஆலிவர் சாக்ஸ் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், நரம்பியல் நிபுணர் ஆலிவர் சாக்ஸின் மரணச் செய்தி அறிந்ததும் ‘சொல் புதிது‘ இதழில் என்னுடைய மொழியாக்கத்தில் வெளியான ‘நிறங்களை இழந்த ஓவியனின் கதை’ நினைவுக்கு வந்தது. அந்தக் கட்டுரை வெளியானபோது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்போதும்கூட சொல் புதிது இதழ் குறித்து யாரேனும் நண்பர்கள் பேசும்போது அந்தக் கட்டுரையை மறக்காமல் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். இன்று மீண்டும் அதை வாசித்தபோது சொல்புதிது இதழ் நடத்திய காலங்கள் நினைவில் அசைந்தன. மற்றபடி நலம். சந்திப்போம். அன்புடன் எம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78320

அஞ்சலி ஆலிவர் சாக்ஸ்

ஆலிவர் சாக்ஸை நான் நித்ய சைதன்ய யதியிடமிருந்து அறிமுகம் செய்துகொண்டேன், 1997ல். அப்போது அவர் பொதுவான அறிவுலகில் பரவலாக அறியப்படாத ஓர் ஆளுமை. அன்று இலக்கியச்சூழலில் ரோலான் பார்த்தின் அமைப்புவாதமும் தெரிதாவின் பின்அமைப்புவாதமும் பெரிதாகப்பேசப்பட்டன. படைப்பு, அறிதல் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டடையப்பட்டது என்ற தொனி சில பேராசிரிய மட்டங்களில் நிலவியது. அதைப்பற்றி நான் நித்யாவிடம் உரையாடியபோது ஆலிவர் சாக்ஸை அறிமுகம் செய்தார் சாக்ஸ் ஓர் நரம்பியலாளர். மூளை எப்படி அறிகிறது, அறிவைத் தொகுத்துக்கொள்கிறது, அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78314

ஒலியும் மௌனமும்

அன்புள்ள ஜெ, இசையை நீங்கள் கேட்கும் முறைமை பற்றி எழுதியிருந்ததை படித்தேன். ஒலிகளைக் காட்சிகளாய் உணர்வது என்பது எனக்கு முற்றிலும் புதிதாக இருக்கிறது. ஒளியையும் பிரித்தறிந்தால் முடிவில் இருப்பது ஒலியலைகளே என்று எங்கேயோ படித்த ஞாபகம். உங்கள்மனம் ஒருவேளை பிம்பங்களால் மட்டுமேயானதோ என்றொரு ஐயமும் ஏற்பட்டது. ஆனால்அவ்வாறிருக்க சாத்தியம் மிகக்குறைவு என்றே தோன்றுகிறது. எந்த ஒரு தத்துவ சிந்தனையும், மரபும், மார்கமும் ஒலிகளுக்குத் தரும்முக்கியத்துவம் மிக அதிகம் என்றே தோன்றுகிறது. அது ஓங்காரத்தை உலக முதலாய் நிறுத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2304