Tag Archive: ஆற்றூர் ரவிவர்மா

தன்னந்தனிப்பாதை

கோவையில் இருந்து திரும்பி வந்து ஒருநாள்தான் வீட்டில் இருந்தேன். மறுநாள், பிப்ரவரி 4 இரவு குருவாயூர் எக்ஸ்பிரஸில் கிளம்பி திரிச்சூர் சென்றேன். கல்பற்றா நாராயணனின் மாணவரும் ஆற்றூர் ரவிவர்மாவுக்கு அணுக்கமானவருமான லத்தீஃப் பறம்பில் ஆற்றூர் ரவிவர்மாவின் நினைவாக ஒரு தொகைநூலை வெளியிட்டிருக்கிறார். காவியரூபன் – ஆற்றூர் ஓர்ம. நான் ஆற்றூரின் அஞ்சலிக்கூட்டத்தில் பேசிய உரையும் இடம்பெற்றிருக்கிறது. அதன் வெளியீட்டுவிழா திரிச்சூரில்.   லதீஃப் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். விழாவை திரிச்சூரில், ஆற்றூரின் நண்பர்கள் சூழ, வெளியிடலாமென நினைத்திருக்கிறார். ஏற்பாடுகளுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129729/

ஆற்றூர் ரவிவர்மா- அஞ்சலி உரை

ஆற்றூர் ரவிவர்மாவின் அஞ்சலிக்கூட்டத்தில் ஆற்றிய உரை. திரிச்சூர் சாகித்ய அக்காதமி விழாவில் Aug 7, 2019 அன்று  நடந்த அஞ்சலிக்கூட்டம் இது. கே.சச்சிதானந்தன், கே.ஜி.சங்கரப்பிள்ளை முதலிய இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பேசினர். ஆகவே சுருகக்மான உரை. .    

Permanent link to this article: https://www.jeyamohan.in/127824/

ஆற்றூர்-கடிதங்கள்

    அன்புள்ள ஜெ,   ஒரு முறை யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் ஆற்றூர் ரவிவர்மா பற்றி அன்வர் அலி இயக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. ரவிவர்மாவின் பெயரைக் கேட்டவுடன் உங்கள் தளத்தில் வெளியாகிய கட்டுரைகளும், மொழிபெயர்க்கப்பட்ட  அவரது கவிதைகளுமே நினைவுக்கு வந்தன;கூடவே பன்றிகள் பாதையைக் கடந்து சென்ற சம்பவமும். “என் ஆசிரியர்களில் முதன்மையானவர் ஆற்றூர் ரவிவர்மா” என்று பலதடவை நீங்கள் எழுதியது ஆழமாக நினைவில் உண்டு. சுந்தரராமசாமி அளவுக்கு அவரை அறிந்ததும் இல்லை. அதற்காகவே அந்த ஆவணப்படத்தைப் பார்க்கச் சென்றிருந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124474/

அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா

மலையாளக் கவிஞரும் என் முதல் ஆசிரியருமான ஆற்றூர் ரவிவர்மா அவர்கள் இன்று மாலை காலமானார். மலையாள நவீனக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர் ஆற்றூர் ரவிவர்மா. 1930 டிசம்பர் 27 ஆம் தேதி பிறந்தவர். இந்த வருடம் அவருக்கு தொண்ணூறாம் பிறந்தநாள் வந்திருக்கும். சென்ற சில ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றியிருந்தார். இன்று காலை முதலே மனம் நிலையிழந்திருந்தது. எதுவும் எழுதவில்லை. நண்பர்களை அழைத்து என்ன என்று அறியாமலேயே கடுமையான உளச்சோர்வு என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். இப்போது இச்செய்தி வந்திருக்கிறது என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124449/

இறைவிருப்பம்

   கவிஞர் வயலார் ராமவர்மா குருவாயூர் கோவில் மேற்குவாசல்முன் நின்றுகொண்டிருந்தார். ஒரு சிகரெட் பற்றவைத்து இழுத்து புகைவிட்டு குருவாயூரப்பனைப் பார்த்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அதைக்கண்டு காவலாள் ஓடிவந்தார். ”அய்யோ சார், இங்கே புகைபிடிக்கக் கூடாது…அபச்சாரம்…பாவம்”. வயலார் ராமவர்மா அமைதியாகச் சொன்னார் ”இது என் நேர்ச்சை…மேற்குவாசலில் நின்று இரண்டு சிகரெட் பிடிப்பேன் என்று வேண்டிக்கோண்டிருந்தேன்…” வயலார் ராமவர்மாவின் குணம் அதில் உள்ளது. கவிஞன் என்ற நிலையில் எதற்கும் கட்டுப்படாத தன்மை. மீறிச்செல்லும் ஆணவம். கூடவே தருணக் கணக்கு. உள்ளே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1130/

குருகுலமும் கல்வியும்

ஒன்று உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு தெய்வத்துக்கு அடுத்தபடியில் குருவையே வைக்கிறது. அதாவது மானுடரில் உயர்ந்தவர் குருவே. குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகாதேவன் என்ற பிரபலமான மந்திரம் குருவை ‘ஆக்கிக்காத்தழிக்கும்’ முத்தெய்வங்களும் ஒன்றானவன் என்கிறது. இதற்கு இணையான முக்கியத்துவம் ஜென் மரபிலும் குருவுக்கு இருப்பதைக் காணலாம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/204/

ஆற்றூர்

  சுந்தர ராமசாமியின் வீட்டிற்குச் சென்றபோது ராமசாமி ஒரு சிறு பரவசநிலையில் இருந்தார். ”என்ன சார்?” என்றேன். ”ஆற்றூர் ரவி வர்மா வந்திருக்கார்…”என்று சொன்னார். அவரது ‘ஜே.ஜே.சிலகுறிப்புக’ளை மலையாளத்துக்கு மொழியாக்கம்செய்ய ஆற்றூர் முனைந்திருப்பதைப்பற்றி நான் அறிவேன். ஆற்றூர் ரவிவர்மா மலையாளத்தில் முக்கியமான கவிஞர் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். முன் அறைக்குள் மேஜையில் அமர்ந்து பெரிய ஊற்றுப்பேனாவால் கைப்பிரதியை திருத்திக் கொண்டிருந்தவரை நான் எட்டிப்பார்த்தேன்.கரிய நிறம், உயரமில்லை. மெல்லிய உடல்வாகு. கரிய பட்டையான சதுரக் சட்டம் கொண்ட மூக்குக் கண்ணாடிக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/238/

எழுத்தாளரைச் சந்திப்பது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே, வணக்கம். சிலர் தங்களை பல தருணங்களில் சந்திக்க முடியாமல் போனதையும் அவர்களுக்கும் உங்களுக்குமான உறவை அவர்கள் தங்கள் மனதில் உருவாக்கி வைத்திருப்பதை எழுதியிருந்தார்கள். ஒரு எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான உறவு அற்புதமானது விசித்திரமானது. ஏனனில் ஒரு எழுத்தாளனும் ஒரு மனிதனே. ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் நிறை குறைகளை அவரிடமும் நாம் காணலாம். ஆனால் நாம் எழுத்தாளர்களை அப்படிப் பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்பதே சந்தேகம்தான். அவ்வப்போது சந்திக்கும் காதலி எதிர்பார்ப்பில் உருவாக்கும் பிம்பங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26814/

மின்தமிழ் பேட்டி -1

[சி சரவணக் கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் மின்தமிழ் இதழில் வெளியான பேட்டி] 1. நீங்கள் எழுத வந்து 30 ஆண்டுகள் பூர்த்தியாகப் போகிறது. இன்று சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் உச்சபட்ச ஸ்தானம். எப்படி உணர்கிறீர்கள்? இந்த நீண்ட பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தில் சாதித்து விட்டதாகத் தோன்றுகிறதா? பதில். எழுதவந்து 30 ஆண்டுகள் என்று சொல்வதைவிட அறியப்பட்டு முப்பதாண்டுக்காலம் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. நான் எழுத ஆரம்பித்தது எழுத்துக்கள் தெரிந்த நாளில் இருந்தேதான். என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69816/

இ.எம்.எஸ்ஸும் தமிழும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்தில் ஒரு வலைதளத்தில் சில தமிழ் தேசியவாதிகளின் பதிவை பார்த்தேன். அதில் மலையாள மொழி பற்றி குறிப்பிட்டிருந்தபோது சுதந்திரத்திற்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமயிலான கம்யூனிஸ்ட் அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு மலையாள மொழியை சமஸ்கிருத மயமாக்கியதாக கூறியிருந்தார்கள். அதற்கு காரணம் ஈ.எம்.எஸ் ஒரு ஆரிய பார்பனர் என்பதுதான். இதுபோன்ற உள் நோக்கம் ஏதேனும் அவருக்கு இருந்ததா? இதன் முழு பின்ணனி என்ன? சிவகுமார் சென்னை அன்புள்ள சிவக்குமார், நானும் யாரோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57014/

Older posts «