Tag Archive: ஆர்வி

ஆகவே கொலை புரிக!

நானும் ஒரு வருஷத்துக்கு மேலாக சிலிகான் ஷெல்ஃப் என்று ப்ளாக் எழுதி வருகிறேன். என் பாணியில், என் ரசனைக்கு ஏற்றபடி, சமரசம் இல்லாமல் மனதுக்குப் பட்டதை எழுதி வருகிறேன். நான் எழுதுவது விமர்சனம் என்பதை விட, புத்தக அறிமுகம் என்பதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஒரு ஏழெட்டுப் பேர் மாதமொரு முறை கூடி ஏதோ ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசுகிறோம். நான் மட்டுமல்ல இந்தக் குழும உறுப்பினர்கள் பலரும் ப்ளாக் எழுதுகிறார்கள். கூகிளில் buzz-கிறார்கள். ட்விட்டர், ஃ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23725

இலக்கியமும் சிலிக்கானும்

ஃபேஸ்புக் வந்தபின்னர் இணையப்பக்கங்கள் அனேகமாகச் செயலிழந்துவிட்டன. ஃபேஸ்புக் நிரந்தரமான ஒரு வட்டத்திற்குள் உள்ளவர்களால் மட்டும் வாசிக்கப்படுகிறது. அல்லது பார்க்கப்படுகிறது. ஆகவே பரபரப்பான வாசிப்புக்காக எதையாவது எழுதியாகவேண்டிய நிலை. நிதானமாக இலக்கியம், தத்துவம் போன்றவற்றுக்கான தளங்களை தேடிவருபவர்கள் குறைந்துவிட்டனர் ஆர்வி பிடிவாதமாக நடத்திவரும் சிலிகான் ஷெல்ஃப் இணையப்பக்கம் இலக்கியத்தை தொடர்ந்து விவாதித்து அறிமுகம் செய்து வருகிறது. தொடர்ச்சியாக இலக்கியவாசகன் என்பவன் யார், இலக்கியவிமர்சனம் எதற்காக என்னும் தலைப்பில் அவர் எழுதியிருக்கும் குறிப்புகள் விவாதத்திற்குரியவை இலக்கியவாசகன் யார்?

Permanent link to this article: https://www.jeyamohan.in/80520

ஆர்வி, அருட்பேரரசன் வாழ்த்துக்கள்

வெண்முரசுக்கு நண்பர் ஆர்வி வாழ்த்து அவரது இணையதளத்தில் வெண்முரசுக்கு நண்பர் அருட்பேரரசன் வாழ்த்து. முழுமகாபாரதத்தையும் அரசன் அவர்கள் தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்து தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்

Permanent link to this article: https://www.jeyamohan.in/65134

கோட்பாடுகளும் தரம் பிரித்தலும்

நண்பரும் சிறந்த வாசகருமான ஆர்வி அவரது தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரை இது. இந்த கட்டுரையின் தரப்புக்கு நான் பலமுறை விளக்கம் சொல்லியிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் இது திரும்பத்திரும்ப எழுதப்படுகிறது திரும்பத்திரும்ப சொல்லப்படும் இரு வரிகள் , இலக்கியத்திலே தரம் பிரிக்கக்கூடாது, பிடித்ததை வாசித்துக்கொண்டு போகவேண்டியதுதான். இன்னொன்று கோட்பாட்டுப்புரிதலோ விமர்சனக்கொள்கைகளை அறிவதோ வாசிப்புக்குத்தேவை இல்லை இலக்கியத்தில் தரம்பிரித்தலை நிகழ்த்தாத ஒரு நல்ல இலக்கியவாதிகூட உலக இலக்கியமரபில் கிடையாது. தரம் பிரிக்காமல் சிபாரிசு செய்யாமல் வாசிப்பே சாத்தியமில்லை. தரம்பிரிக்கக்கூடாது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58467

இணையதள வாசகர்கள்

ஜெ, உங்கள் பதில் அற்புதம். சாதாரணமாக ஆரம்பித்து (வழக்கம் போல :)) தத்துவார்த்த தளத்திற்கு சென்று விட்டது. என்ன பயன் என்று கேட்டதற்கு ஒரு உற்சாக டானிக் பதிலாகக் கிடைத்துவிட்டது. // இதை எப்படி மேலும் efficient ஆக செய்வது, அடுத்த லெவலுக்கு இந்த மாதிரி தளங்களை எப்படிக் கொண்டுபோவது என்ற கேள்வி. // என்றும் ஆர்.வி. கேட்டார். அதனால் அவர் சில practical tips, யோசனைகள், கூட்டு முயற்சிகள் ஆகியவை பற்றி ஐடியாக்கள் கேட்கிறார் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23756

சரித்திர நாவல்கள்

தமிழ் வரலாற்று நாவல்களைப்பற்றி ஆர்வி அவரது இணையதளத்தில் எழுதியிருக்கிறார். நான்தான் வேலைமெனக்கெட்டு நிறைய படித்துவைத்திருக்கிறேன் என்றால் இவர் அதற்கும் மேலே. ஆனால் குற்றாலக்குறிஞ்சியை எல்லாம் அவர் வாசித்திருப்பது மன்னிக்கமுடியாதது. ஆர்வியின் விவாதத்தில் நான் கவனித்தது என்னவென்றால் பெரும்பாலும் எல்லாவற்றையும் வாசித்து ரசிக்கக்கூடிய அவரே பெரும்பாலான வரலாற்றுநாவல்களை நிராகரிக்கிறார் என்பதுதான். அதற்கான காரணம் என்னவென்று யோசித்தேன். வரலாற்றுநாவல்கள் கல்கியால் தமிழில் ஆழமாக நிறுவப்பட்டன. கல்கியின் நாவல்கள் பெற்ற வெற்றி மேலும்மேலும் நாவலாசிரியர்களை உள்ளே கொண்டுவந்தது. ஒருகட்டத்தில் வார இதழ்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11466

ஆர்வியின் கதை

ஆர்வி சிலிக்கான் ஷெல்ஃப் என்ற இலக்கிய இணையதளத்தை நடத்தி வருகிறார். அவரது அம்மாவுக்கு புரியாது கதைக்கு நான் இட்ட பின்னூட்டம் இது ஆர்வி, நெடுநாட்களுக்குமுன் நீங்கள் கருத்து கேட்டிருந்தீர்கள். 1. இது சுஜாதாபாணி கதை. பேரிதழ்களில் பலரும் எழுதும் பாணி. ஆகவே கொஞ்சம் சலித்துப்போன ஒன்று என்னென்ன அம்சங்களை சுஜாதாபாணி எனலாம்? அ. கொஞ்சம் நக்கல் எல்லா வரிகளிலும் ஓடிக்கொண்டே இருப்பது ஆ. வாசகரிடமே நேரடியாக உரையாடும் போக்கு இ .சித்தரிப்புகளை சுருக்கமாக அளிப்பது. கதையையே சுருக்கிச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9218

வாசிப்புக்காக ஒரு தளம்

இந்த தளத்தில் கடிதங்கள் எழுதும் ஆர்வியின் இணையதளம் இது. http://siliconshelf.wordpress.com/ ”நான் எழுதும் பதிவுகளில் பாதிக்கு மேல் புத்தகம் பற்றிதான். அதனால் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நாளாக யோசனை. இன்று ஆரம்பித்துவிட்டேன்! சிறந்த சிறுகதைகள், சிறந்த நாவல்கள் என்று இரண்டு ஸ்டிக்கி பதிவுகள் வைத்திருக்க யோசனை. படிக்கும்போது, நினைவு வரும்போது இந்தப் பதிவுகளில் சேர்த்துவிட எண்ணம்” என்கிறார் புத்தகங்களைப்பற்றிய ஆர்வம் கொண்டவர்கள் வாசிக்கவேண்டிய தளம்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/8401