Tag Archive: ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன், ராமச்சந்திரன்

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சம்பந்தமாக இணையத்தில் ஏராளமான விவாதங்கள் நடந்தன. இணையத்தில் எழுதுபவர்களின் பொதுவான வரலாற்றுப்புரிதல் ரசனை ஆகியவற்றின் குறுகலான எல்லையைக் காட்டுவனவாகவே அந்த விவாதங்கள் இருந்தன. எனக்கு தனிப்பட்ட முறையில் பல கடிதங்கள். அவற்றுக்கு விரிவாக பதிலளிக்க முடியாமல் பல வேலைகள், பயணங்கள் அனேகமாக அந்த வினாக்கள் அனைத்துக்குமே ஆணித்தரமாக பதில் சொல்லியிருக்கிறார் வரலாற்றாய்வாளார் ராமச்சந்திரன். சொல்வனம் இதழில் அவரது பேட்டி விளக்கமானதும் தெளிவானதுமாக உள்ளது சுட்டி http://solvanam.com/?p=6441

Permanent link to this article: https://www.jeyamohan.in/6615

ஆயிரத்தில் ஒருவன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நேரிடையாக விசயதுக்கு வருகிறேன், தற்போது வெளியாகி உள்ள ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தேன். செல்வராகவனின் இந்த முயற்சி, என்னை தடுமாற வைக்கிறது. அதுவும் அந்த பின்பாதி சோழ மன்னர் வாழ்க்கை, சரி உங்களுடன் அதை பற்றி கேட்க  என்ன  இருக்கிறது  என்றால், படத்தின் பின் பகுதியில் காண்பிக்கப்பட்ட காட்சிகளில் பல, சோழ மன்னர்கள்  வாழ்க்கை இருந்து எடுக்கப்பட்டது என்கிறார்கள். நான் பேசிய அநேகம் பேரால் அவற்றை புரிந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6342