Tag Archive: ஆப்ரிக்கா

தான்சானியா -ஒருகடிதம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கங்கள். தாங்கள் நலமாக இருக்க என்றும் இறைவனை வேண்டுகின்றோம். சில மாதங்கள் ஆப்ரிக்கா(தன்சானியா) பணிக்கு சென்று விட்டதால் கடிதங்கள் எதுவும் முறையாக எழுத முடியவில்லை. நூறு கடிதங்களுக்கு மேல் எழுதி அவை தங்களுக்கு அனுப்பும் தரத்தில் இல்லாததால் அனுப்பாமல் வைத்து விட்டேன். மழைப்பாடலுக்கு பிறகு வெண்முரசு புத்தகங்கள் ஆப்ரிக்காவில் இருந்ததால் வாங்க இயலவில்லை. கடந்த வாரம் துபாய் திரும்பி விட்டேன். ஆனாலும் இணையத்தில் ஒரு நாள் கூட வெண்முரசு தவறுவது இல்லை. தன்சானியா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81420

ஆப்ரிக்காவின் நிகழ்காலமும் நமது இறந்தகாலமும்

அன்பு ஜெ சார். வணக்கம். வெங்கடேஷ் (கென்யா). நீங்களும் குடும்பமும் நலம்தானே? கென்யாவில் ஜனாதிபதி தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடந்தது. சென்ற 2007 தேர்தலின் பின்னான வன்முறையில், அதிகபட்ச உயிர்ச்சேதங்களும், பெரும்பான்மை மக்களின் இடப்பெயர்வும் நடந்திருந்ததால் (உள்நாட்டிலேயே இன்னும் அகதி முகாம்கள் இருக்கின்றன.), இம்முறை சூழ்நிலை சற்று பதட்டமாகவே இருந்தது. வெளி மக்கள் பெரும்பாலும் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த நாடு சென்றார்கள்; நான், மல்லிகா, இயலும் ஒரு மாத விடுப்பில் கோவை வந்திருந்தோம். இப்போது தேர்தல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35179