Tag Archive: ஆப்பிரிக்கா

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா. நீங்கள் ஆப்பிரிக்காவில்  வாழும் நண்பர்கள்  பற்றி எழுதிய  பதிவை படித்தேன். உங்களுக்கு கடிதம் எழுதி  நீண்ட நாட்கள் ஆகிறது. 2012  மே முதல் நான்  இந்தியாவில்  புனேவில்தான் இருந்தேன். கே.ஜே. அசோக் குமார் கூட உங்களுக்கு  2014இல்  புனே  வரமுடியுமா என்று  கேட்டு  ஒரு  மெயில்  அனுப்பி இருந்தார். அந்த சமயம் நான் அங்கேதான்  இருந்தேன். புனேவில்  இருக்கும்போது  உங்களை பார்க்கவேண்டும்  என்று  பிரசாத்  பாலாஜி  திருமணத்திற்கு  திருச்சி  வந்திருந்தேன். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81713

அந்தக்கைகள்

Funny Junk என்ற இணையதளத்தில் இந்த படத்தைப்பார்த்தேன். அதன்மேலிருந்த குறிப்பு வயிற்றைப் பகீரிடச்செய்தது. அள்ளி அணைத்துக்கொஞ்சவேண்டும் போல ஒரு குழந்தை. அந்த உற்சாகத் துருதுருப்பு எல்லாப் பிள்ளைகளுக்கும் வருவதில்லை. தெருவிலே பார்க்கலாம், பத்தில் நூறில் ஒரு பயல்தான் அப்படி எந்நேரமும் கொப்பளித்துக்கொண்டிருப்பான். அவன் கண்களில் அந்த மின்னல் எப்போதுமிருக்கும்.அஜிக்குட்டி அப்படி இருந்தான். அது இயற்கையிலேயே அமையும் ஓர் அக ஆற்றல்.அறிவுத்திறனோ, கற்பனையாற்றலோ, மன உறுதியோ எல்லாமே அந்த ஆற்றலின் வெவ்வேறு முகங்கள்தான். அந்த ஆற்றலே கலையாக, இலக்கியமாக, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30174