Tag Archive: ஆன்மீகம்

நிழலில்லாத மனிதன்




  பழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவிடம் கேட்டார். குரு சொன்னார். ’காம,குரோத,மோகங்களால் ஆனது வெளியுலகம். அதிலிருந்து நாம் நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்கிறோம். அதற்காகவே இந்த மடாலயத்தில் வாழ்கிறோம்’. சீடன் கேட்டான்.’அந்தத் தனிமை எதற்காக?’ குரு சொன்னார் , ’அந்தத் தனிமைதான் நம்முடைய காவல், நம்முடைய கவசம், நமது ஆயுதம்’.   சீடன் கேட்டான், ’அப்படியானால் எவன் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/16876

நாராயண குரு எனும் இயக்கம்-2




தொடர்ச்சி நடராஜகுரு   நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கியது. நாராயணகுருவின் இயக்கத்தை கேரள எல்லையில் இருந்து விடுவித்து உலகளாவக் கொண்டு சென்றது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் என்ற அளவில் நாராயணகுருவின் இயக்கம் அதன் பங்களிப்பை முடித்துவிட்டு ஆழமான தேக்கத்தை அடைந்து பலவகையான சிக்கல்களை நோக்கி செல்ல …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/7524

நாராயண குரு எனும் இயக்கம் -1




  நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/7522

கல்வியழித்தல்




அன்புமிக்க திரு. ஜெயமோகன் வாசிப்பு பற்றி குமார் முல்லக்கல் அவர்களின் கேள்விக்கு மிக விரிவாகப் பதிலளித்திருக்கிறீர்கள். “கற்றாரை யான் வேண்டேன் ; கற்பனவும் இனியமையும்” என்னும் மாணிக்க வாசகரை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்றறிய ஆவல் மரபின் மைந்தன் முத்தையா *** Dear J, ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து… . ”ராமகிருஷ்ண பரமஹம்சர் இதை இப்படிச் சொல்கிறார். காலில் முள் குத்தினால் இன்னொரு முள்ளைக் கொண்டு அதை எடுக்கிறோம், இரண்டையும் வீசிவிட்டு முன்னால் செல்கிறோம். அறியாமை …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/2553

தன்னறம்




‘திருடனை துரத்த நாய் உள்ளே வந்தது. திருடன் ஓடியும் நாய் உள்ளேயே சுற்றி வருகிறது!’







Permanent link to this article: https://www.jeyamohan.in/7005

”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”




‘நல்ல கதை என்பது எலியின் உயிர்வாதையையும் பூனையின் பசியையும் ஒரேசமயம் சொல்வது’– மிகப்பழைமையான சொலவடை இது. சொல்வது எத்தனை எளிதோ அத்தனை சிரமமானது சாதிப்பது. இன்னொரு கோணத்தில் நிரந்தரமான விவாதத்துக்கு உரியது. ‘அம்மையை அடித்தாலும் அதிலிமிருக்கும் இரண்டு பக்கம்’ என்று மலையாளப் பழமொழி. அப்படியானால் நியாயம் என்றும் தர்மம் என்றும் ஒன்றுமில்லையா என்ன? உண்டுதான். கலைஞன் எப்போதுமே நீதியின்குரல்தான். நீதி என்பது பலவகை. அன்றாட உலகியல் நீதி ஒன்று நம் கண்ணுக்குப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மண்ணில் மனிதரை …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/17235

கவிதையின் அரசியல்– தேவதேவன்




    எங்களூரில் தினம் ஒரு இடத்தில் ‘தகடு எடுப்பு’ நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம் ”அண்ணாச்சி தகடு ஆரு வீட்டுக்கு?”என்று கேட்டபடி வேடிக்கைபார்க்கும் கும்பல் பின்னால் போகும். அந்தி கறுத்ததும் வீட்டுக்கு தென்மேற்கு மூலையில் நுனிவாழை இலை விரித்து, பச்சைமட்டைக்கீற்றில் தேங்காயெண்ணை ஊற்றி சுருட்டிய துணித்திரியில் பந்தம் கொளுத்தி, நான்குபக்கமும் நட்டு, நடுவே கல்லில் சாமி ஆவாகனம் பண்ணி நிறுத்தி ,மஞ்சள்பொடிகலந்த அரிசிப்பொரியும் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/240

யாதெனின் யாதெனின்…




  இரண்டு நாட்களுக்கு முன்னர் கெ.பி.வினோத் என்ற நண்பர் பார்க்க அலுவலகம் வந்திருந்தார். நல்ல வாசகர். கணிப்பொறித்துறையில் ஒரு நிறுவன மேலாளராக இருக்கிறார். ரயில் டிக்கெட் எடுப்பதற்கான என்னுடைய சிரமங்கள் பற்றிய பேச்சு வந்தது. இணையம் மூலம் பதிவுசெய்யலாமே என்றார் வினோத். அதற்கு கடன் அட்டை வேண்டுமே என்றேன். ”என்னது, கடன் அட்டை இல்லையா?” என்று பிரமித்தபின் ”சரி பரவாயில்லை. ஒரு வைப்பு அட்டை பெற்றுக்கொள்ளுங்கள். எல்லா வங்கிகளிலும் கொடுப்பார்கள்”.நான் ”அதற்கு வங்கியில் பணம் போடவேண்டுமே..”என்றேன். அவர் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/389

இங்கிருந்து தொடங்குவோம்…




கொஞ்சநாள்முன்னர் நானும் நண்பர்களும் வட தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு விவசாயி சொன்ன வசனம் காதில் விழுந்தது ”…அப்பாலே சடங்கு சாங்கியம்லாம் செஞ்சு பொண்ணைக் கூட்டிட்டு வந்தாச்சு…” நண்பர் கேட்டார், ”சடங்கு சரி, அதென்ன சாங்கியம்?” இந்து ஞான மரபில் பரிச்சயம் உள்ள ஒருவருக்கு சாங்கியம் என்ற சொல் மிக அறிமுகமானதாகவே இருக்கும். அது நம் சிந்தனை மரபில் உள்ள ஒரு முக்கியமான பிரபஞ்ச தரிசனத்தின் பெயர். சாங்கிய தரிசனத்தை …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/3732

இருபுரிச்சாலை




தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் கூட வேதாந்தம் என்ற சொல் பெரும்பாலான சாதாரணக் காதுகளுக்கு எதிர்மறையாகவே ஒலிப்பதைக் கவனித்திருக்கிரேன். அதற்குக் காரணம் ‘வரட்டுவேதாந்தம்’ என்ற சொல்லாட்சி. வேதாந்தியான நாராயணகுருவின் மாணவரும் வேதாந்தியுமான குமாரன் ஆசான் கூட வரட்டு வேதாந்தம் என்ற சொல்லாட்சியை கையாண்டிருக்கிறார். நடைமுறைக்குப் பயன்படாத உயர்தத்துவங்களை தர்க்கபூர்வமாக பேசுவது என்று இச்சொல்லுக்குப் பொருள். இந்தச் சொல்லாட்சி எப்போது உருவாகியிருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். இந்திய தேசம் அதன் அனைத்து அறிவார்ந்த மரபுகளும் அறுபட்டு அரசியலும் பண்பாடும் சிதறி கஞ்சிக்குப் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/3973

Older posts «