Tag Archive: ஆன்மிகம்

குருகுலமும் கல்வியும்

ஒன்று உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு தெய்வத்துக்கு அடுத்தபடியில் குருவையே வைக்கிறது. அதாவது மானுடரில் உயர்ந்தவர் குருவே. குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகாதேவன் என்ற பிரபலமான மந்திரம் குருவை ‘ஆக்கிக்காத்தழிக்கும்’ முத்தெய்வங்களும் ஒன்றானவன் என்கிறது. இதற்கு இணையான முக்கியத்துவம் ஜென் மரபிலும் குருவுக்கு இருப்பதைக் காணலாம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/204

கென் வில்பர்:இருகடிதங்கள்

திரு ஜெயமோகன் தங்களது சித்தர்கள் பற்றிய கட்டுரையும் [மந்திர மாம்பழம்] கென் வில்‌பர் பற்றிய கட்டுரையும் [முழுமையறிவும் கென் வில்பரும் ]சிந்திக்க உதவியாக இருந்தது தங்களுடன் பகிர்ந்து கொள்ள சில சிந்தநைகள் (தாங்கள் இந்த விஷயங்களை ஏற்கநவே அறிந்த்திருக்கலாம்) சித்தர்கள் பற்றி: ரூமி என்கிற ஸூஃபி கவிஞர் மொழிபெயர்ப்புகளை படித்திருக்கிறேன். மொழிசார்ந்த கட்டமைப்புகளை தாண்டி உணர்வு பூர்வமாக மனத்தை தொட வல்லவை இந்த கவிதைகள். இவையுடன் சித்தர் பாடல்களையும் சிந்தித்தது உண்டு. இவை இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை கட்டுப்பாடுகளைத் தாண்டுவதே. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/533

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை,தொடர்ச்சி

யோகத்தின் வரலாற்றுப் பின்னணி   யோகத்தின் வரலாற்றுப்பின்னணி என்ன என்று புரிந்துகொள்வது யோகத்தை புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல யோகத்தை புரிவதற்கும் அவசியமானது. தற்காலத்தில் யோக சாதனைகளில் பலவகைகளிலும் ஈடுபடுபவர்களிடம் அப்படிப்பட்ட புரிதல் ஏதும் இல்லை என்பது நாமறிந்ததே. யோகத்தை ஒருவிதமான பக்தியாக ‘ காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும்’ நிலையாக இவர்களில் சில விளக்கும் அபத்தமும் நமது சூழலில் நடந்துகொண்டுதான் உள்ளது. யோகம் எவ்விதமான மன எழுச்சிக்கும் எதிரான ஒன்று என்பதை அவர்கள் உணராமைக்கு காரணம் அதன் வரலாற்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/400

கீதைத்தருணம்

அன்புள்ள ஜெயமோகன்,கீதையைப்பற்றி எழுதியிருந்த கட்டுரைகளை விரும்பிப்படித்தேன். நான் சிறுவயதிலிருந்தே கீதையை பாராயணம் செய்திருக்கிறேன். அவ்வப்போது படித்ததும் உண்டு. கீதை ஓர் அழகிய நூல் என்று தோன்றியிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் முக்கியத்துவம் மனதில் பட்டதில்லை. நீங்கள் எந்தக் கோணத்தில் கீதையை படிக்கிறீர்கள் என்ற ர்வம் எனக்கு உள்ளது. ஆர்.சங்கர நாராயணன், மும்பை அன்புள்ள சங்கர நாராயணன், கீதையை வாசிப்பதற்கு உரிய தருணத்தை கீதையே உருவாக்கும் என்ற நம்பிக்கை நம் மரபில் உண்டு. அதையே ‘கீதா முகூர்த்தம்’ என்கிறார்கள். இருபத்தைந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/317

கேள்வி பதில் – 71

இலக்கியமும் அரசியல் அறிவும்(அரசியலில் பங்கு என்று சொல்லவில்லை) பெண்களுக்கு எவ்வளவு தூரம் தெரிந்திருக்க வேண்டும்? ஏன் இன்னமும் இலக்கியம் பேசும் பெண்ணை அவளது உள்வட்டமும், அரசியல் ஆர்வமுள்ள பெண்ணை வெளிவட்டமும் விநோதமாகவே பார்க்க வேண்டும்? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். மனிதனுக்கு இவ்வளவுதான் தெரிந்திருக்க வேண்டும் என்ற எல்லையே இல்லை. நான் அத்வைதி என்பதனால் நாராயணகுருவை மேற்கோள் காட்டி ‘அறிவதை அறிந்து அறிவில் அறிவாக அமர வேண்டும்’ என்று சொல்வேன். எல்லாவற்றையும் அறிந்து அறிந்தவற்றை ஒன்றுடன் ஒன்றாக இணைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125

கேள்வி பதில் – 61

ஆன்மிகநெறி என்பது வாழ்க்கையில் என்ன? மனிதன் புறவாழ்க்கையில் அன்றாடம் அனுசந்திக்கும் அவரவர் மூதாதையர் வழி கேட்டறிந்த ஜாதி, மத ஆசாரங்களா, அன்றி அவன் அகஉணர்வில் இறைமையைத் தேட எடுக்கும் முயற்சிகளும் மனநெறி ஒழுக்கங்களுமா? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். இச்சொற்களை நான் துல்லியமாகப் பகுத்துக் கொள்கிறேன். ஏனெனில் ஓர் சொற்களனில் [Discourse] சொற்களை வரையறுக்காமல் ஆன்மிகம் போன்ற கருத்துவடிவங்களைப் பற்றிப் பேச ஆரம்பிப்பது மேலும் குழப்பத்தையே அளிக்கும். அதேசமயம் மூலக்கருத்துவடிவங்களைப் பற்றி எவருமே முழுமுற்றான வரையறைகளை அளித்துவிட முடியாதென்பதையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118