அன்பு ஜெ, அச்சு இதழ்களில் எழுதுவதில்லை என்ற உங்கள் எண்ணத்தைப் படித்தேன். சற்றே வருத்தமாக இருந்தது. விகடன் உங்களைப் பற்றி அவதூறு எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தொடர்ந்து விகடன் படித்து வருபவன் என்பதால் கேட்கிறேன் ‘அப்படி என்ன எழுதிவிட்டார்கள்’ என்று. ஒருவேளை நான் சிலவாரங்கள் படிக்காமல் இருந்திருக்கலாம். மாறாக ‘தொப்பி-திலகம்’ என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய பதிவை ஒரு குற்றமாக எழுதியிருந்ததைத்தான் சொல்கிறீர்களா? உண்மையில், அதுவும் கூட ஒரு திறப்பாகவே அமைந்தது. அதைப் படித்துவிட்டுதான் நீங்களும் பிளாக் வைத்திருக்கிறீர்கள் …
Tag Archive: ஆனந்த விகடன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/8458
விகடன் பற்றி இறுதியாக….
‘புலிநகக் கொன்றை’ ஆசிரியர் பி.ஏ.கிருஷ்ணன் பயனீர் ஆங்கில இதழில் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றை நண்பர் அனுப்பியிருந்தார். சுட்டி கீழே ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம். http://www.dailypioneer.com/columnist1.asp?main_variable=Columnist&file_name=anantha%2Fanantha20%2Etxt&writer=anantha என்னுடைய எண்ணம் இதிலிருந்து சற்றே மாறுபட்டது. இதுcவரை வசைகளும் கண்டனங்களும் பல வந்துள்ள போதிலும் பொதுவாக நம் சூழலில் இருந்து வந்த எதிர்வினை மிகவும் ஜனநாயகபூர்வமாகவே இருந்தது என்றே படுகிறது. திரைத்துறையும் சரி பல்வேறு ரசிகர் அமைப்புகளும் சரி நிதானமாகவே இப்பிரச்சினையை கையாண்டார்கள். பிரச்சினை நம் ஊடகங்களிலேயே என்பது மீண்டும் உறுதியாகிவிட்டது. நம் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/278
விகடனை எண்ணும்போது…
அன்புள்ள ஜெயமோகன் .. விகடன் செய்தியின் விளைவுகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எப்படி உணர்கிறீர்கள்? ராஜேந்திரபிரசாத் அன்புள்ள ராஜேந்திரபிரசாத் இதுவரை கிட்டத்தட்ட முந்நூறு மின்னஞ்சல்கள் வந்துள்ளன. தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. சாதாரணமாக ஒருநாள் ஆயிரம்பேர் பார்க்கும் இந்த தளத்தின் பார்வையாளர் எண்ணிக்கை ஆறுமடங்கு பெருகியிருக்கிறது. நேற்று மட்டும் 5613., இன்று மதியம் ஒருமணி வரை 3148. பெரும்பாலும் எல்லா வாசகர்களும் ஆனந்தவிகடன் இதழ் செய்திருக்கும் பொறுப்பற்ற செயல் பற்றிய வருத்தத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களில் பலர் விகடனில் வெளியான எனது ‘சங்கசித்திரங்கள்’ …
Permanent link to this article: https://www.jeyamohan.in/160
வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்
வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்அறிவிப்பு பெறுநர் ஆசிரியர் ஆனந்த விகடன் அன்புடையீர், கருத்துச் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.அதை நாங்களும் அறிவோம்.பாரம்பரியமிக்க பத்திரிக்கையான நீங்களும் அறிவீர்கள்தான்.ஒரு கருத்துக்கு ஓராயிரம் எதிர்கருத்துக்கள் இருக்கும்.அவை அனைத்தையும் பதிவு செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.ஆனால் அதற்கு மாறாக எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளத்தில் எழுதியதில் ஒரு பகுதியை எடுத்துப் போட்டு அவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம். தி.க.சிவசங்கரன் ஆ.மாதவன் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/456
இதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் …..நீங்கள் ஆனந்தவிகடன் குமுதம் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்கள். அவை இப்போது நீங்கள் சொல்லும் ethics கொண்டவையா என்ன?… அன்புள்ள சடகோபன் உங்கள் கேள்வி முதல் நோக்கில் தர்க்கப்பூர்வமானவையாகப்படும். ஆனால் தமிழ்ச் சூழலை சற்று அறிந்தவர்களுக்கு இக்கேள்வியே எழாது. விகடனும், குமுதமும் வணிக நிறுவனங்கள். வணிக மதிப்பை மட்டுமே முன்னிறுத்துபவை. அவை எந்த இலக்கிய மதிப்பீட்டையும் முன்வைப்பதில்லை. எல்லா வணிக ஊடகங்களும் அவை எதிர்கொள்ளும் சமூகத்தில் உள்ள எல்லா போக்குகளையும் எப்படியோ பிரதிநிதித்துவப்படுத்தும். குமுதத்தில் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/233
ஆனந்த விகடன் பேட்டி 2007
கேள்வி : தமிழ்ல முக்கியமான எழுத்தாளரா, நிறைய எழுதுற எழுத்தாளரா அறியப்பட்டுள்ளவர் நீங்க. ஆனா இப்ப ஒரு வருஷமா எழுதறத நிறுத்திட்டீங்க. ஏன்? கடைசியா வந்த ‘கொற்றவை’ நாவலை மூணுவருஷமா எழுதிட்டிருந்தேன். அந்த நடையைப் பாத்தீங்கன்னா தெரியும். ரொம்ப கவித்துவமான உருவகநடை. தனித்தமிழ். அதாவது சிலப்பதிகாரத்தில இருக்கிற வடமொழி வார்த்தைகளைக்கூட தமிழாக்கம் செஞ்சு எழுதிய நாவல். அந்த நடை மண்டைக்குள்ள ஏறி எறங்க மறுத்தது. ஒரு இடைவெளி விட்டா சரியாகும்னு ஒரு நினைப்பு. எழுதித் தள்ளியாச்சு போதுமேன்னு ஒரு …
Permanent link to this article: https://www.jeyamohan.in/200