Tag Archive: ஆத்மானந்தா

அலைகளென்பவை….

1997 முதல் 2000 வரை நான் தக்கலைக்கு அருகில் உள்ள பழைய கேரளத்தலைநகரமான பத்மநாபபுரத்தில் வாழ்ந்தேன். அப்போது பத்மநாபபுரத்தின் கோட்டைவாசலில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் முன்னால் ஒரு வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் சிறிய பீடத்தைக் கண்டிருக்கிறேன். அதில் ‘இங்குதான் குரு ஆத்மானந்தா தன் குருவைக் கண்டடைந்தார்’ என்று எழுதப்பட்டிருந்தது. அதில் அந்த வீட்டுக்காரர்கள் தினமும் விளக்கேற்றி வழிபடுவதுண்டு கிட்டத்தட்ட நான்குவருடம் அனேகமாக தினமும் இருமுறை அந்த நினைவுச்சின்னத்தைப் பார்த்தபடி நான் கடந்துசென்றிருந்தேன். பலமுறை போகிறபோக்கில் அதைப்பற்றிச் சிந்தனை செய்ததுண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7409

ஆத்மானந்தா

கிருஷ்ணமேனனின் பேச்சு உரையாடல் போன்றது. அவர் எவருக்காகவும் பேசவில்லை என்று தோன்றும். ஒன்றில் இருந்து ஒன்றாக தொட்டுச் செல்லும் கேள்விகளும் விடைகளுமாக அது நீண்டு இயல்பான முடிவை அடையும். அபாரமான ஆங்கிலத்தில் மூளையைச் சொடுக்கும் கவித்துவச் சொற்றொடர்களுடன் அவை அமைந்திருக்கும்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7446

ஆத்மானந்தா நூல்கள்

அன்புள்ள ஜெயமோகன் ஆத்மானந்தா எழுதிய நூல்கள் ஆங்கிலத்தில் இந்தச்சுட்டியில் கிடைக்கின்றன http://o-meditation.com/about-this-blog/some-good-books/downloadable-books/atmananda-krishna-menon/ போகன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/29329