Tag Archive: ஆத்மா

ஆத்மாவை நிரூபிக்க அரியவழி!

நகைச்சுவை ”ஆத்மாவுக்கு அறிவியல் விளக்கம்! அரிய சாதனை!! அறிஞர் சவால்!!!” என்ற நாளிதழ் விளம்பரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு வெங்ஙானம்மூடு வாசுதேவன்பிள்ளை தேடிவந்தார். குடை, காலருக்குப்பின்னால் செருகப்பட்ட கைக்குட்டை, முழுக்கை சட்டை வேட்டி, எப்போதும் லேசாக அமிர்தாஞ்சன் வாசனை.”பாத்தேளா, சொல்லிட்டே இருந்தேன்லா? எண்ணைக்காவது ஒருநாள் ஒரு ராட்சஸன் கெளம்பி இம்மாதிரி ஒரு குண்டைத்தூக்கிப் போடுவான்ன்னுட்டு? வே…பாரும்…பகிரங்கமா சவால் விட்டிருக்கான் ” என்றபடி காகிதத்தை என்னை நோக்கி வீசினார். நான் காகிதத்துண்டை எடுத்துப் படித்தேன். பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸூர்யநாறாயண ஸாஸ்த்ரிகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/785