Tag Archive: ஆதிமூலம்

ஆதிமூலம் படைப்புகளைப் பாதுகாக்க…

எழுத்தாளரும், இதழாளருமான தளவாய் சுந்தரம் இந்த மின் மடலை எனக்கு அனுப்பியிருக்கிறார். அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். நம் பெருமிதத்துக்குரிய கலை ஆளுமையான ஆதிமூலம் மறைந்த ஓரிரு மாதங்களுக்குள், அவரது பெயரில் அவரது ஓவியமெனப் போலியான ஒன்றைச் சென்னை கண்காட்சிக்கூடமொன்று ஓவியச் சந்தையில் விற்க முயன்றுள்ளது. அது கண்டுபிடிக்கப்பட்டு, நீதிமன்ற தலையீட்டில் தடை செய்யப்பட்டது. ஆதீமுலத்தின் பெயர் மதிப்பை வியாபாரமாக்கிப் பிழைப்பு நடத்த முனையும் இந்த செயல் கண்டிக்க வேண்டியது. ஒரு படைப்புக் கலைஞனின் வாழ்நாள் உழைப்பையும் கலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/593

ஆதிமூலம் நினைவிதழ்

தமிழ் சிற்றிதழுலகில் சுந்தர ராமசாமிக்கு உரிய இடம் ஆதிமூலத்துக்கும் ஒருவகையில் உண்டு. எழுபதுகளில் சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவந்து அவை மட்டுமே அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு உரிய ஒரே தளம் என்ற நிலை இருந்தபோது அவற்றின் முன்னுதாரணர்களாக இருவரும் இருந்தார்கள் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவரை இன்னொருவர் எப்போதும் நினைவுறுத்திக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.சிற்றிதழ்சார்ந்து வாசிக்க ஆரம்பிக்கும் ஒர் இளம் வாசகன் எழுபதுகளில் சந்திக்க விரும்பும் இரு ஆளுமைகளாக அவர்கள் இருந்தார்கள். நிமிர்வான தோற்றமும், கவனமான பேச்சுமுறையும், நிதானமான அணுகுமுறையும், எவரையுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/261

ஆதிமூலம்

ஆதிமூலத்தின் கோட்டு ஓவியங்களைப்பற்றிய என் அறிமுகம் சுமுகமானதாக இருக்கவில்லை. நுண்கலைகளில் நான் ரொம்பவும் நுண்மையானவன் — இருப்பதே தெரியாது. சுந்தர ராமசாமியின் நடுநிசி நாய்கள் தொகுப்பின் [முதல் பதிப்பு, க்ரியா] வடிவமைப்பு பற்றி என் கருத்தை சொன்னேன். ”அட்டையிலே எழுத்துக்களை அச்சடிச்சதில தப்பு வந்திட்டுது சார். லெட்டர்ஸ் கோணலா இருக்கு. பிளேட் சரியா போடல்லை”. சுந்தர ராமசாமி ஞானிகளுக்கே உரிய புன்னகையுடன் ”அது ஆதிமூலம் போட்டது ”என்றார். நான் ”பாவம் அவருக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும், இதைப்பாத்தா” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/164