Tag Archive: ஆதிச்சநல்லூர்

இரு கடிதங்கள்

ஈரோட்டில் ஒரு சந்திப்பு – கிருஷ்ணன் படித்தேன். ஜெயா தொலைக்காட்சியின் மார்கழி மஹோத்ஸவத்திற்காக காயத்ரி வெங்கடராகவனுக்கு வாசித்த போது, சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா எனும் இப்பாடலை (5 or 6 minutes) மிகவும் நிதானமான காலப்ரமாணத்தில் அனுபவித்தது நினைவிற்கு வந்தது. நேரமிருப்பின் ஒரு முறை கேளுங்கள். சுட்டி இங்கே: http://www.youtube.com/watch?v=TEuMKSXbxoE&feature=relmfu நன்றி, ஈரோடு நாகராஜன். திரு ஜெ அவர்களுக்கு, தங்களின் ஆதிச்சநல்லூர் பற்றிய பதிவை வாசித்தேன். கீழே இணைத்துள்ளதில் திருநெல்வேலி அருங்காட்சியகம் முகவரியுடன் உள்ளது. திருநெல்வேலி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26715

அதிரம்பாக்கம் – ஒரு தொல்லியல் புரட்சி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் தொல்லியல் துறையில் நடந்த ஒரு முக்கியமான ஆய்வைத் தங்கள் முன் வைக்க விரும்புகிறேன். சென்னையில் சர்மா ஆய்வு மையத்தைச் சேர்ந்த சாந்தி பாப்பு மற்றும் குழுவினரும் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கத்திற்கு அருகில் இருக்கும் அதிரம்பாக்கத்தில் நடத்திய விரிவான ஆய்வில், அங்கு இருக்கும் கொற்றள்ளயாறு பள்ளத்தாக்கில் 15 லட்சம் ஆண்டுகள் பழமையான பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்து இருந்ததைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது உலகத் தொல்லியலில் ஒரு புரட்சி என்றே வருணிக்கப்படுகிறது. இந்த ஆய்வுக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22367

ஆதிச்சநல்லூர், ராஜராஜசோழன் இரு கடிதங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். சமீபகாலமாக நான் தங்களது எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். தங்களது தொலைநோக்குப் பார்வை இன்றைய வாசகர்களும் படைப்பாளிகளும் கூர்ந்து நோக்க வேண்டிய ஒன்று. தங்களது எழுத்துக்களில் இருக்கும் தெளிவை என்னால் உணரமுடிகிறது. தற்போதுதான் தங்களது வலைப்பதிவுகளை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். அதன்பின் தங்களது நூல்களைப் படிக்க முடிவு செய்துள்ளேன். நான் தங்களது வலைதளத்தில் கடைசியாக வாசித்த கட்டுரை ‍ “ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?” உங்களது இக்கட்டுரை மிகவும் நேர்த்தியாக, தெளிவாக, ஆராய்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12591

ஆதிச்சநல்லூர்:கடிதங்கள் மேலும்

அன்புள்ள ஜெயமோகன் ஒக்கல் என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் புழங்கும் வழக்கமான ஒரு சொல்தான், இதற்காக நீங்கள் தஞ்சை வரை போக வேண்டாம். ஒக்கலில் பிள்ளையை வைத்துக் கொண்டு ஊரு பூராவும் தேடினாளாம்” என்பது மறதியில் இருப்பவர்கள் குறித்து அடிக்கடி எங்கள் ஊரில் அடிக்கடிச் சொல்லப் படும் ஒரு பழமொழிதான். ஆதிச்சநல்லூர் தாண்டி சில கி மீட்டர்களில் எனது கிராமம் இருக்கிறது. ஆதிச்சநல்லூர் பரம்பினைத் தாண்டித்தான் போக வேண்டும். சென்ற முறை அங்கு காரை நிறுத்தி இறங்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2343

ஆதிச்சநல்லூர்:மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், ஆதிச்சநல்லூர் சிதம்பரம் அவர்கள் ஆதிச்சநல்லூர் ஆதி எச்ச நல்லூர் என்று சொல்வதை நீங்கள் சரி என்று ஏற்றுக்கொள்கிறீர்களா? மொழியியல் அடிப்படையில் அந்தப் பகுப்பு சரிதானா? ஸ்ரீதர் அன்புள்ள ஸ்ரீதர், இந்தமாதிரி ஊர்ப்பெயர்களை இன்றைய நோக்கில் பகுப்புசெய்வது தமிழியக்கத்தின் அரசியல்தேவை சார்ந்து உருவான ஒன்றே ஒழிய அதற்கு வரலாற்று ஆய்வின் முறைமைப்படி எந்த மதிப்பும் கிடையாது. சொல்பவரின் பற்றும் ஈடுபாடும் மட்டுமே அதில் தெரிகிறது. பொதுவாக தமிழியக்கவாதிகள் தங்கள் கற்பனையின்படி ஊர்களையும் பெயர்களையும் சொற்பகுப்புசெய்வதும் அதையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2285

ஆதிச்சநல்லூர்:கடிதங்கள்

அன்பு ஜெயமோகன், தாங்கள் ஆதிச்சநல்லூர் சிதம்பரம் அய்யாவைப் பற்றி எழுதியதை வாசித்த போது கண்களில் நீர் சுரந்தது. அவர் ஆதிச்சநல்லூர் புதைகுழி மேட்டின் காவல் தெய்வம். குட்டி போட்ட தாய்ப்பூனை போல எப்போதும் அதை சுத்தி சுத்தியே வருவார். திராவிட இயக்கத்தால் அறிவெழுச்சி பெற்ற அவர் மற்ற மானமிகுகளைப் போல வறண்டு போனவர் அல்லர். வற்றாத மெல்லிய பொருநை. அவருக்கு பல தொல்தமிழ் இலக்கியங்கள் தலைகீழ் மனப்பாடம். இராமாயணப்  பாடலுக்கு ஏற்ற கீமாயணப் பாடலையும் சொல்லி திகட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2184

ஆதிச்சநல்லூர் சிதம்பரம்

சென்ற மார்ச் பதினொன்றாம் தேதி நானும் யுவன் சந்திரசேகரும் மலையாள கவிஞர் கல்பற்றா நாராயணனும் ஈரோடு நண்பர்கள் தங்கமணியும் கிருஷ்ணனும் நவதிருப்பதிகளுக்குச் சென்றபின் திரும்பும் வழியில் கிருஷ்ணாபுரம் பார்த்துவிட்டு ஆதிச்ச நல்லூர் செல்வது என முடிவுசெய்தோம். ஆதிச்ச நல்லூரைப்பற்றி பொதுவாக நண்பர்களிடையே பெரிய புரிதல் இல்லை. சுருக்கமாக தன் முக்கியத்துவத்தை விளக்கினேன் ஆதிச்ச நல்லூர் திருநெல்வேலியில் இருந்து 24 கிமீ தூரத்தில் உள்ள சிறிய கிராமம். தாமிரவருணி இந்த ஊர் வழியாக ஓடுகிறது. ஆனால் நிலம் வளமானதல்ல. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2143