Tag Archive: ஆசிரியர்கள்

கீழ்ப்படிதல்,முரண்படுதல் பற்றி…

குருகுலமுறையில் கீழ்ப்படிதல் முரண்படுதல் ஆகியவை எப்படிச் செயல்படுகின்றன என்பதை கவனித்திருக்கிறேன். இது குருகுல முறைகளில் மட்டுமல்ல, ஒரு தனிமனிதருடனான அந்தரங்க நட்பு மூலம் கற்றுக்கொள்ளும் எல்லா வழிமுறைகளுக்கும் பொருந்தும்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7686

பேராசிரியர்கள் குறித்த விவாதம்

அன்பிற்குரிய திரு ஜெயமோகன், தங்கள் தளத்தில் நடந்து வரும் பேராசிரியர்கள் குறித்த விவாதம் குறித்து என் பார்வைகள் சில. எஸ் .வி. டி இங்கே குறிப்பிட்டிருப்பது போல அறுந்த செருப்போடு, கசங்கிப் போன மஞ்சள் பையில் தன் புத்தகப் பொதிகளைச் சுமந்து கொண்டு வந்த சி.சு செல்லப்பா அவர்களைக் கல்லூரி முற்றத்தில் எதிர்கொண்டு,அவரிடமிருந்த புத்தகங்களின் ஒரு செட்டைச் சொந்த நூலகச் சேமிப்புக்கும் இரண்டு செட் நூல்களைக் கல்லூரி நூலகத்துக்கும் வாங்கிய ஒரு பேராசிரியர் என்பது மட்டுமே இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8330

குரு, ஒரு கடிதம்

அன்பு ஜெ. தொ. பரமசிவன் புத்தகங்கள் பற்றி நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரையையும் அதன் பின் குறிப்பையும் வாசித்தேன். சுஜாதாவின் அறிவியல் மீது கண்டனங்களை முன்வைத்து பின்னூட்டத்தையும் அதன் நீட்சியாக மேலும் சில பதிவுகளையும் எழுதியபின் அதை வலைப்பூவில் தொகுப்பாகப் படித்த போது கடுமையான மனச்சோர்வுக்கும் வாதைக்கும் ஆளானேன். கடுமையாக வி்மர்சித்து எழுதிவிட்டதில் எனக்கு வருத்தமே. சுஜாதா எனக்கு மிகவும் பிரியத்துக்குரிய எழுத்தாளர் என்ற உண்மையையும் தொடர்ந்து பதிவு செய்தே வந்திருக்கிறேன் என்றாலும். அவர் எழுதியிருப்பதைப்பதில் உள்ள தகவல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8263

ஒரு வாழ்க்கைக்குறிப்பு

கற்பனை கலக்காமல் நேரடியாக எழுதப்பட்ட இந்த கட்டுரை ஒரு துயரமான சிறுகதைபோல் இருக்கிறது. எந்தக்கதையைவிடவும் வாழ்க்கை மர்மமானது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7315

ஆசிரியர்கள்

இன்றைய நம் செய்திப்பரவல் முறையில் அடிப்படையில் ஒரு பிழை உள்ளது. நாம் எச்சரிக்கை மிக்க சமூகமாக ஆகிவிட்டிருக்கிறோம். எப்போதுமே ஐயப்படுகிறோம், அச்சக் கொள்கிறோம். ஆகவே செய்திகள் அனைத்துமே எதிர்மறையானவை.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6728

கேள்வி பதில் – 18

அரசியல்வாதிகள், சாமியார்கள், ஆசிரியர்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? இன்றைய அரசியலில் தங்களைக் கவர்ந்தவர் யார்? — பாஸ்டன் பாலாஜி. நீங்கள் இந்தக் கேள்வியை இப்படிக் கேட்பதே சங்கடமானது. இவர்களையெல்லாம் மதிப்பிட்டு மதிப்பெண் போடும் இடத்தில் இருப்பவனாக எழுத்தாளனைக் கணிக்கும் நோக்கு இதில் உள்ளது. இது பிழை. பொதுவாக மனிதர்களை அவர்களுடைய பொது அடையாளங்களைவைத்து அளவிடமுடியாது. தங்கள் செயல்தளம் மூலம் அவர்கள் அடையும் வெற்றி தோல்விகளே முக்கியமானவை. அதைத் திறந்த மனத்துடன் ஆராயவேண்டிய இடத்தில் இருக்கிறான் எழுத்தாளன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68