Tag Archive: ஆகும்பே

ஆகும்பே பயணம் – வேழவனம்

நடை சற்று நேரத்தில் ஒரு காட்டு வழிக்குள் திரும்பியது. எந்த வெளிச்சமும் அங்கில்லை, அங்கு அதிகம் இருந்தது ராஜநாகம் மற்றும் யானைகள் பற்றியும் இருந்த பயம். அந்த இரவில் முகத்திலிருக்கும் பயம் யாருக்கும் தெரியாதென்றாலும் இன்னும் தைரியமாகக் காட்டிக்கொள்ள நகைச்சுவை உரத்த சிரிப்பு என நடை அந்த காட்டுவழியில் தொடர்ந்தது. நேயர் விருப்பமாக யட்சிகதைகள் கேட்கப் பட்டது. ஜெயமோகனும் அந்த சூழ்நிலையின் தீவிரத்தை அதிகரிக்கும் விதமாக சில யட்சிக்கதைகளைத் தந்தார். எட்டாவது கை கதை கேட்டு எங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30456

கோதை-கடிதங்கள்

அன்பின் ஜெ.. கன்னடத்தின் துங்கை, பத்ராவதி நதிகள் உற்பத்தியாகி ஓடும் இடங்கள் பாரதத்தின் மிக அழகிய பகுதிகளில் ஒன்று. ஷிமோகாவில் ஒரு நண்பர் சர்க்கரை ஆலை நடத்துவதாகச் சொன்னீர்கள் – ரவி.. அந்தச் சர்க்கரை ஆலையில் சிலகாலம், நானும் விஜியும் ஒரு ப்ராஜக்டுக்காகத் தங்கியிருந்தோம். அப்போது, சிருங்கேரி சங்கராச்சாரியார், அங்கே வந்து தங்கியிருந்தார். என்னையும் விஜியையும் ஆசீர்வதித்தார்.. குண்டு சாமியார் அன்றிலிருந்து எங்கள் குருவாகிப் போனார். இப்போது சென்னையில் சதுர்மாஸ்ய விரதம் கொண்டு தங்கியிருக்கிறார்.. இந்தப் பக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30095

மழைக்கோதை

கோயில்களைப்பற்றி ஒரு பரவலான நம்பிக்கை உண்டு, நாம் அங்குபோக நினைத்தால் மட்டும் போதாது அவை நாம் அங்கு வரவேண்டுமென்றும் நினைக்கவேண்டும். இல்லையேல் பயணம் சாத்தியப்படாது. அதையே நதிகளுக்கும் சொல்லலாம் போல. இம்முறை கோதை எங்களைப்பார்க்கப்பிரியப்படவில்லை. நான் சென்னையில் திரைப்பட விஷயமாகத் தங்கியிருந்தேன். அரங்கசாமி தொலைபேசியில் அழைத்துச் சொன்னார், கோதாவரியில் படகுப்பயணம் சாத்தியமாகாது என்று. கோதையில் உச்சகட்ட வெள்ளம், சிவப்புக்கொடி ஏற்றிவிட்டார்கள். வெள்ளம் வடிந்தாலும்கூட நாலைந்துநாட்களுக்கு சேறு நிறைந்துகிடக்கும். பயணத்தை ஒத்திப்போடலாம், அல்லது ரத்துசெய்யலாம். ஆனால் சிக்கல் என்னவென்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30064