Tag Archive: அ.ராமசாமி

வெகுஜனக் கலை என்பதைப் பற்றி…

  அன்புள்ள ஜெயமோகன், தங்கள் வலைத்தளத்தில் வெகுஜனவியம் (பரப்பியம் என்றும் குறிப்பிடப்படுவது) தொடர்பாக நான் எழுதியவற்றையும் உங்கள் மறுமொழிகளையும் பதிப்பித்து விவாதத்தை பலர் கவனத்திற்கும் கொண்டு சென்றதற்கு நன்றி. அதன்பிறகு, பேராசிரியர் அ.ராமசாமி அவர் வலைப்பூவில் அதைப்பற்றி எழுதியதை நீங்கள் வெளியிட்டிருந்ததை இன்றுதான் கண்ணுற்றேன். உங்களுக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலோ என்னவோ நீங்கள் அவரது குறிப்பைப் பற்றி கருத்து எதுவும் சொல்லவில்லை. பேராசிரியர் அ.ராமசாமிக்கும் போதிய அவகாசம் இல்லாததால்தான் அவரால் என்னுடைய கருத்துக்களை விவாதிக்க முடியாமல் போயிருக்கிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8668

கொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி

கொற்றவை அச்சாகி வெளிவந்த ஒரு மாத காலத்திற்குப் பின் அதன் ஆசிரியர் ஜெயமோகன் நீண்ட ஓய்வை அறிவித்தார். திட்டமிட்ட பெரிய பணி கச்சிதமாக முடிந்து விடும் நிலையில், நீண்ட ஓய்வொன்றை விரும்புவது மனித இயல்பு. 25 ஆவது வயதில் முகிழ்த்த கருவை 43 ஆவது வயதில் எழுதி முடித்து விட்டு நீண்ட ஓய்வை அறிவித்திருக்கிறார் ஜெயமோகன். 600 பக்கங்களில் டெம்மி அளவில் , அச்சுத் தொழிலின் நுட்பங்கள் கைவரப் பெற்ற தொழிலாளர்கள்-பதிப்பாசிரியரின் கூட்டுத் தயாரிப்பில் அச்சிடப் பட்டுள்ளது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/465

பேராசிரியரின் குரல்

தமிழ்ப்பண்பாட்டில் கல்லூரிப்பேராசிரியர்களின் பங்களிப்பென்ன என்று ஒரு பொதுவினாவை எழுப்பிக்கொள்ள வாய்ப்பளித்தது அ.ராமசாமியின் இந்தக் கட்டுரைத்தொகுதி. பேராசிரியர்கள் பலவகை. இந்திய சுதந்திரப்போராட்டம் என்பது பெரும்பாலும் வழக்கறிஞர்களாலும் கல்லூரிப்பேராசிரியர்களாலும் முன்னெடுக்கப்பட்டது. அக்காலத்தில் பேராசிரியர்கள் காந்தியவாதிகளாக, தேசியவாதிகளாக இருப்பது வழக்கம். க.சந்தானம், தி.செ.சௌரிராஜன், சுத்தானந்தபாரதியார் போன்றவர்களின் சுயசரிதைகளில் அன்று அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பல்வேறு பேராசிரியர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. மரபிலக்கிய மீட்பில் பேராசிரியர்களின் பங்களிப்பு அதிகம். ஏட்டுப்பிரதிகளைப் பதிப்பிப்பது, உரை எழுதுவது போன்றவற்றில் ஈடுபட்டவர்களின் ஒரு பட்டியலை அளிக்கமுடியும். பெயர்களைச் சொல்வது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77982

பரப்பியம் அல்லது வெகு ஜன வாதம் குறித்து ..

பரப்பியம் அல்லது வெகுஜனவாதம் குறித்து இந்த இணையதளத்தில் நடந்த விவாதங்களை ஒட்டி ஊடக ஆய்வாளரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தமிழ்த்துறை தலைவருமான அ.ராமசாமி இந்த கட்டுரையை அவரது இணையதளத்தில் பதித்துள்ளார். கடந்த காலத்தில் அவர் இந்த தளத்தில் எழுதியவற்றை நினைவுகூர்ந்து பரப்பியத்தின் இயல்பு மற்றும் அச்சொல்லை பற்றிய அவரது தரப்பை பதிவுசெய்திருக்கிறா http://www.ramasamywritings.blogspot.com/

Permanent link to this article: https://www.jeyamohan.in/8491