Tag Archive: அ.முத்துலிங்கம்

இலக்கியமும் புறவுலகும்

அன்புள்ள ஜெ, ஒரு புனைவு எழுத்தாளன் சித்தரிக்கும் உலகம் என்பது அவனது தேடல் அலைக்கழிப்புச் சார்ந்தது; தன் பார்வையினூடாகக் கற்பனையைப் பெருக்கி விரித்து எழுதுகிறான். நிச்சயம் அவனது கோணல்கள் தடுமாற்றங்கள் அப்படைப்பில் வெளிப்படும். அதனால் பொது மனநிலையில் இருக்கும் சித்திரத்தை விட்டு விலகியே அவனது நோக்கு அமைந்திருக்கும். “இங்கே ஒரு படைப்பை நிராகரிக்க முன்வைக்கப்படும் விவாதங்களின் போது “அசலாக அந்தப் பிரதேசத்தின் மண்ணையோ மக்களின் பேச்சு வழக்கையோ சரியாக உள்வாங்கவில்லை. மேலோட்டமாக உள்ளது” அல்லது “இது யதார்த்தம் இல்லை, இப்படியான ஆண்களையோ பெண்களையோ எங்கள் நிலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118283

புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து

  நித்ய சைதன்ய யதி ஒரு முறை சொன்னார், “இரவில் அஜீரணத்துடன் தூக்கம் பிடிக்காமல் தவிக்கும்போது நேரம் போக்குவதற்காக எந்த நூலை நோக்கி உங்கள் கரம் இயல்பாக நீள்கிறதோ அதே நூலையே வாழ்வின் இக்கட்டுகளில் வழிகாட்டுதலுக்காகவும் நாடினீர்கள் என்றால் அதுவே பேரிலக்கியம் ஆகும்.” தல்ஸ்தோய், தாமஸ் மன், ஐசக் பாஷவிஸ் சிங்கர், வைக்கம் முஹம்மது பஷீர், தாராசங்கர் பந்தோபாயாய ஆகியோரின் நூல்களை வெறும் பொழுதுபோக்குக்காக, வேடிக்கைக்காக நான் படிப்பது உண்டு. தல்ஸ்தோயில் மிகவும் தமாஷான பல பகுதிகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/134

அ.முத்துலிங்கம் நேர்காணல்

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன் April 27, 2003 – 4:43 am   “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!” ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா’வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார். பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார். ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார். அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78

தற்செயல்பெருக்கின் நெறி

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நலம் தானே…மிக நீண்ட நாட்களாகி விட்டது உங்களுடன் கடிதம் மூலமாக உரையாடி… மற்றபடி உங்கள் தளத்தை முடிந்தவரை தினசரி வாசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்… வெண்முரசின் வரிசையினை இரண்டு வருடம் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன்.. நடுவில் எதிர்பாராமல் விடுபட்டு போய் விட்டது மீண்டும் துவங்க வேண்டும். சமீபத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதை உடனே உங்களிடம் சொல்லவேண்டும் எனத் தோன்றியது. அதான் கடிதம். நான் கடந்த ஒன்றரை மாதமாக திண்டுக்கல் வந்திருக்கிறேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97129

கிறிஸ்மஸ் தவளை

  ‘இந்த தவளையை பாரும். தண்ணீருக்குள் தோலினால் மூச்சுவிடும். வெளியே இருக்கும்போது சுவாசப்பையினால் மூச்சு விடுகிறது. இது அழிவின் விளிம்பில் உள்ள அபூர்வமான. பிக்கர்கில்ஸ் ரீட்தவளை. இந்த இனம் பூமியிலிருந்து மறைந்தால் மனிதர்களுக்குத்தான் நட்டம். 10,000 ராண்டுகள் அந்த நட்டத்தை தீர்க்காது. அ.முத்துலிங்கத்தின் நுணுக்கமான எழுத்தில் உயிர்கொள்ளும் ஓரு குட்டிக்கதை

Permanent link to this article: https://www.jeyamohan.in/83025

கடவுள் தொடங்கிய இடம் — கடலூர் சீனு

நெஞ்சே, காணும் இவ்வுலகை கனவென்றே இரு, சுற்றத்தை, கூடிப் பின் ஓடும் சந்தைக்கூட்டமென்றே இரு, வாழ்வை, குடங்கவிழ்நீர் ஓட்டமென்றே இரு, -பட்டினத்தார்- நண்பர் ஒருவர் சரக்குக் கப்பலில் பணி புரிகிறார். துறைமுகத்துக்குள் கப்பல் நுழையும்போதுதான் அவரது பணி துவங்கும். நிற்கும் சரக்குக் கப்பல் கூட்டத்தில் தடம் பிடித்து தன் கப்பலை சரக்கு இறக்கி ஏற்ற வாகாக நிறுத்தி, பின் அதே போல அடுத்து வரும் கப்பல்களுக்கு இடர் இன்றி தடம் கண்டு துறைமுகத்தை விட்டு கப்பலை வெளிக்கொண்டுவருவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76142

சுவையறிதல்

அனைவருக்கும் வணக்கம், பதின்வயதுகளில் புல்வெட்டும் நண்பர்களுடன் காட்டுக்குச் செல்லும் வழக்கம் எனக்கு இருந்தது. கல்லூரிக்குச்செல்லும் பாவனையில் கிளம்பி புத்தகங்களை ஏதேனும் கடைகளில் போட்டுவிட்டுச் செல்வேன்.இரவில் திரும்பி வந்துசேர்வேன். படிப்பு உள்ள ஒரு நண்பன் கூடவருவதிலும் அவன் நிறைய கதைகளைச் சொல்வதிலும் நண்பர்களுக்கு மகிழ்ச்சி. காட்டைப்பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஒருமுறை ஒரு காட்டுயானையைப் பார்த்தேன். நாங்கள் ஒரு மேட்டில் ஏறியபோது கீழே விரிந்த சற்று வரண்ட நிலத்தில் பிரம்மாண்டமான கொம்பன் மேய்ந்துகொண்டு நின்றிருந்தது. உடம்பெல்லாம் செம்மண் படிந்து வரிவரியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2476

வெண்முரசு பற்றி அ.முத்துலிங்கம்

வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து அ.முத்துலிங்கம் அவர்கள் அளித்த காணொளிப் பேட்டி. [embedyt]http://www.youtube.com/watch?v=YvDw2ueHirU[/embedyt]

Permanent link to this article: https://www.jeyamohan.in/64664

அ.முத்துலிங்கமும் தாயகம் கடந்த தமிழும்

தாயகம் கடந்த தமிழ் என்ற தலைப்பில் கோவையில் நிகழ்ந்த சந்திப்பில் அ.முத்துலிங்கம் ஆற்றிய உரையின் ஒளிவடிவம். http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=O3_ZJ6U9zNw

Permanent link to this article: https://www.jeyamohan.in/45946

கடிதங்கள்

அன்புள்ள ஜெ, ”எழுத்து முதிரும் புள்ளியில் அடுத்த சொல் நிகழாமலிருக்கக் கற்ற பெரும் கலைஞன்” நேற்று படித்த “கனிதல்” பதிவில் வந்த இந்த வரி மிக அருமை! அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களில் ஒரு கச்சிதம் உள்ளது. அதை மிக மிக துல்லியமாய் உணர்த்தியமைக்கு நன்றி :-) இதை ஒரு வெறும் தொழில்நுட்பமாக நான் பார்க்கவில்லை. எதை கூறுவது, எதை சொல்லாமல் விடுவது என்பது ஒரு வகை தொழில்நுட்பம் தான். இந்த சொல்லுக்கும் சொல்லாமைக்கும் நடுவில் தான் கலை நிகழ்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42959

Older posts «