Tag Archive: அ.முத்துகிருஷ்ணன்

சென்னை கவிதை வெளியீட்டுவிழா

சென்னையில் குமரகுருபரனின் கவிதைவெளியீட்டுவிழாவில் கலந்துகொள்வதற்காக பத்தாம்தேதி மாலை கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் கிளம்பினேன். காலை எழும்பூர் ரயில்நிலையத்தில் குமரகுருபரனே நண்பருடன் வந்திருந்தார். வழக்கமான பிரதாப் பிளாசா ஓட்டலில் அறை. கவிஞர் நரன் , ஆத்மார்த்தி ஆகியோரைச் சந்தித்தேன். நரன் வசந்தபாலனுக்கு அணுக்கமானவர். ஒரே ஊர்க்காரர் என அறிந்தேன். ஆத்மார்த்தியை முன்னரே ஒரு நூல்வெளியீட்டுவிழாவில் சந்தித்திருந்தேன். நண்பர் சுகா அறைக்கு வந்திருந்தார். நானும் அவரும் ஒரு படம்செய்வதாக இருக்கிறோம். மாலையில் கவிதைவெளியீட்டுநிகழ்ச்சி. பொதுவாக என் ‘எதிரிகள்’ என இணையத்தில் தென்படுபவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84691

பாலஸ்தீன ஆதரவுக்குழு

பாலஸ்தீன ஆதரவுக்குழுவில் உள்ள இந்தியர்களை உள்ளே அனுமதிக்கமுடியாது என்று பாகிஸ்தான் சொன்னதை ஒட்டி எழுந்த சிக்கல்களைக் களைந்து குழு பாகிஸ்தானுக்குள் நுழைந்து சென்றுகொண்டிருக்கிறது என அ.முத்துகிருஷ்ணன் அனுப்பிய மின்கடிதத்தில் சொல்கிறார். அவர் கடந்துசெல்லும் இந்த நிலம் மொத்தமாகவே நமக்கு அறிமுகமில்லாதது. பயணிகள் அதிகம் செல்லாதது. அவரது பயண அனுபவங்களைச் சுடச்சுட ஏதேனும் இதழ் வெளியிடுமென்றால் சிறப்பாக இருக்கும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/10593

அ.முத்துகிருஷ்ணன் பாலஸ்தீனப் பயணம்

உயிர்மையில் எழுதிவரும் அ.முத்துக்கிருஷ்ணனுக்கு நண்பராக இல்லாத தமிழ் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அரசியல்செயல்பாட்டாளர்கள் அனேகமாக இருக்க மாட்டார்கள். எவருக்கும் எப்போதும் இன்முகத்துடன் உதவக்கூடியவர். மனம்திறந்து பேசக்கூடியவர். ஆனால் முத்துக்கிருஷ்ணன் உறுதியான அரசியல் கருத்துக்கள் கொண்டவர். அவரை அமைப்புசாரா இடதுசாரி என்று சொல்லலாம். இடதுசாரி இயக்கங்கள் அனைத்துக்கும் சகப்பயணி. களப்பணியாற்றும் காந்திய இயக்கங்களுடனும் நெருக்கமான உறவுள்ளவர். இந்திய அரசியலையும் வரலாற்றையும் இடதுசாரி நோக்குடன் அணுகி முக்கியமான கட்டுரைகள் எழுதிவரும் அ.முத்துகிருஷ்ணன் இன்று தமிழில் மிக அதிகமாக கவனிக்கப்படும் அரசியல் எழுத்தாளர்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9490