Tag Archive: அ.மார்க்ஸ்

அ.மார்க்ஸ்,சாரு நிவேதிதா, அழகியல்

அன்புள்ள ஜெ இது அ.மார்க்ஸ் உங்களைப் பற்றி எழுதியது: இன்றைய பொங்கல் சந்திப்பின்போது, கார்ல்மார்க்சின் “தீம்புனல்” எனும் புதிய நாவலை வெளியிட்டு அன்று பேசிய ஜெயமோகனின் நீண்ட உரையில் இருந்து என்னைப்பற்றி அவர் பேசிய ஒரு கருத்தை நண்பர்கள் செல்போனிலிருந்து ஒலித்துக் காட்டினார்கள். அது ஜெயமோகன் இன்றைய தமிழ் இலக்கியத்தின் பிதாமகராகத் தன்னைப் பாவித்துக் கொண்டு கார்ல்மார்க்ஸ் போன்ற இளம் எழுத்தாளர்களுக்குச் சொன்ன ஒரு முக்கியமான் அறிவுரை. அதாவது: “(புதிதாக எழுத வருபவர்கள்) சாருவிடமிருந்து எதையும் கற்றுக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129543

தேர்தல் கண்காணிப்பு

அ.மார்க்ஸ் அவர்கள் தன் இணையப்பக்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார். முக்கியமான அரசியல் நகர்வு இது. இதைப்போல பல்வேறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களை மக்கள் உருவாக்கியாகவேண்டும். தேர்தல்கள் முறையாக நிகழ்வதென்பதே ஜனநாயகத்தின் தேவை.. ஜனநாயகமே வன்முறையற்ற சமூகச்செயல்பாட்டுக்கான ஆதாரம்   TN Election Watch – 2016 “”””””””””””””””””””””””””””””””””” சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது (2014) தேர்தல் கண்காணிப்புக் குழு ஒன்று அமைத்துத் தேர்தல் அறிக்கைகள் தொடங்கி, வேட்பாளர்கள் சொத்துவிவரம், அவர்கள் செலவினங்கள் முறையாகச் செய்யப்பட்டுள்ளதா, வேட்பாளர்களின் சாதி அவர்களின் தேர்வுகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86350

குறைத்துரைத்தலின் அழகியல்

பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய இக்குறிப்பை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். இது ஒரு சிறுகதைபோல உள்ளது என்று சுட்டிக்காட்டியிருந்தார். அ.மார்க்ஸின் தமிழ்நடை எனக்குப் பிடித்தமானது. இதையும் மிகச்சுருக்கமாக, மிகையுணர்ச்சிகள் விளையாமல் எழுதியிருக்கிறார். மினிமலிசம் [குறைத்துரைத்தல்முறை] இத்தகைய தீவிரமான உண்மைநிகழ்வுகளுக்குத்தான் பொருத்தமானது. ஏனென்றால் நிகழ்வுகளின் அடுக்குகளுக்குள் உண்மையான அனல் உள்ளது. இந்த உண்மை நிகழ்வில் அந்தக்குடும்பம் கொண்டுள்ள ஒரு தலைமுறைக்காலம் முழுக்க நீண்டுவரும் தேடல், அவ்விளைஞருக்கு என்ன ஆகியிருக்கும் என்னும் ஊகம். அவ்வுணர்வுகளை தாங்கும் மறுமுனையாக உள்ள அ.மார்க்ஸ் ஆகிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80072

அ.மார்க்ஸின் ஆசி

ஜெ, பேராசிரியர் அ.மார்க்ஸ் உங்களை அவன் இவன் என்று ஒருமையில் எழுதி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். நீங்கள் இஸ்லாமிய, கிறித்தவ மக்கள் மேல் காழ்ப்பை வளர்ப்பதாகவும் உங்கள் படைப்புகளை வாசித்தால் எவருக்கும் சிறுபான்மையினர் மீது வெறுப்பே உருவாகும் என்றும் சொல்லியிருந்தார். நான் உங்கள் படைப்புகள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். உண்மையில் பின் தொடரும் நிழலின் குரல் வாசித்தபின்னர்தான் ஏசு என்ற வடிவம் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. தொடர்ந்து கிறிஸ்துவம் பற்றியும் கிறிஸ்தவர்கள் பற்றியும் தீவிரமாக எழுதிவரக்கூடியவர் என்றுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74140

கோணங்கியும் மார்க்ஸும்

தொண்ணூற்றி ஆறில் கோணங்கி தர்மபுரிக்கு வந்திருந்தார். நான் அவருடன் கிளம்பி சேலம் சென்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இரவுறங்கி கிரானைட் தொழிலில் இருந்த அவரது தம்பி வீட்டுக்குச் சென்றேன். செல்லும் வழியில் அ. மார்க்ஸ் பற்றி பேச்சு வந்தது. அவரது இலக்கியஞானம் பற்றி நான் சிரித்தேன். ‘டேய் அவருக்கு நல்ல தைரியம் இருக்குடா… இலக்கியம் பத்தி போல்டா பேசறார். அவருக்கு மட்டும் இலக்கியம் பத்தி ஏதாவது தெரிஞ்சிருந்தா அந்த தைரியம் வந்திருக்குமா சொல்லு? அப்டி ஒரு ஆளு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12837

அ.மார்க்ஸின் திரிபுகளும் தீராநதியும்

  இந்த இணையதளத்தில் நான் எழுதிய ‘எனது இந்தியா’ என்ற கட்டுரைக்கு ‘தீராநதி’ இதழில் அ.மார்க்ஸ் ஒரு மறுப்பை எழுதியிருந்தார்.  அந்த மறுப்பு வழக்கமாக அ.மார்க்ஸ் எழுதுவதுபோல அரைகுறை ஆதாரங்கள், திரிபுகள், உதிரிமேற்கோள்கள் ஆகியவற்றால் ஆனது என்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன். என்னால் விரிவாகவே அதை மறுத்து எழுத முடியும். ஆனால் மார்க்ஸின் வழக்கம் என்னவென்றால் இன்னும்பெரிய ஒரு அரைகுறைத்தகவல் கட்டுரையை அவர் எழுதுவார் என்பதே. அதையும் நாம் மறுக்கவேண்டும். ஒரு கட்டத்தில் நாம் சலித்து விலகிக்கொண்டால் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1231

இருகேள்விகள்

அன்புள்ள ஜெ, நான் கடவுள் எப்படிப்பட்ட படம்? ஆன்மீகப்படமா தத்துவப்படமா? கெ.எம்.கணேஷ் இரண்டுமே இல்லை. அடிதடிப்படம். பாலாவின் மனம் வன்முறையால் ஆனது. மனிதமனம் வன்முறையை உச்சகட்டமாகச் சந்திக்கும் கணங்களில்தான் அவரது மனம் ஈடுபடுகிறது. அதைத்தான் அவர் எடுத்திருக்கிறார். நான்கடவுள் விரிந்த காட்சிப்புலம் கொண்ட பரபரப்பான மூர்க்கமான சண்டைப்படம் என்பதே சரி. சண்டைப்படத்தில் கதாநாயகன் அசாதாரணமான உளவலிமையும் மனவலிமையும் கொண்டவனாக இருந்தாக வேண்டும். பல கோணங்களில் அந்தக் கதாபாத்திரத்தை அமைப்பதே சண்டைப்படத்தின் சவால். ரஜினி, விஜய் படங்களில் அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1209

அ.மார்க்ஸ்:கடிதங்கள்

அன்புள்ள ஜெ அ.மார்க்ஸைபற்றி நீங்கள் எழுதிய குறிப்பை அ.மார்க்ஸ்;கடிதம் வாசித்தேன். அவரது கீழ்த்தரமான கட்டுரையை வாசித்தபோது இருபது முப்பது வருடங்களாக அக்கப்போர்களல்லாமல் வேறெதையுமே எழுதாத ஓரு ஆசாமிக்கு தமிழ்மொழி காலாகாலாமாக போற்றிக்கொண்டாடும் மாபெரும் படைப்புகளை எழுதிய ஒரு கலைஞனைப்பற்றி போகிற போக்கில் ஏதாவது சொல்லுவதற்கு என்ன உரிமை இருக்கிறது, தனக்கு என்ன தகுதி இருக்கிறதென எண்ணி இந்த ஆசாமி இதையெல்லாம் எழுதுகிறார் என்ற எண்ணம் ஏற்பட்டு மிகவும் மனக்கஷ்டம் கொண்டேன். இங்கே நண்பர்களிடம் அதைப்பற்றி விவாதித்தேன். ஒரு கணமாவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1008

அ.மார்க்ஸ்;கடிதம்

அன்புள்ள அ.மார்க்ஸ் அவர்களுக்கு, தாங்கள் வழக்கமான பண்புடன் எழுதிய பதிலைக் கண்டேன். ஒரு சிறந்த வழக்கறிஞராக உங்கள் தரப்பை சீராக எடுத்து வைத்திருக்கிறீர்கள். எதிரித்தரப்பை உங்களுக்கேற்றாற்போல வளைத்தபின் வாதிட ஆரம்பிக்கும் உங்கள் தனிதிறன் இதிலும் வெளிப்படக்கண்டு களியுவகை எய்தப்பெற்றேன். மேன்மக்கள் மேன்மக்களே. சங்கு சூடானாலும் வெண்மைதரும். தங்கள் சமேதம் ஓர் எளிய தகவலை முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறேன். நான் படித்த காலத்தில் ஆங்கிலத்துக்கு 26 எழுத்துக்கள் இருந்தன. இப்போதும் அதில் பெரிதாக எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/921

அ.மார்க்ஸ் என்னும் வழக்குரைஞர்

அன்புள்ள ஜெயமோகன், அ.மார்க்ஸ் தீராநதி இதழில் உங்கள் ‘எனது இந்தியா’ கட்டுரைக்கு எழுதியிருக்கும் மறுப்பை படித்தீர்களா? கீழ்க்கண்ட சுட்டியை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன். ரவிச்ரினிவாஸ் எழுதியது http://www.ravisrinivas.blogspot.com/ சிவா குமாரசாமி அன்புள்ள சிவா அ.மார்க்ஸ் குறித்து பல வருடங்களுக்கு முன் எனக்கொரு எண்ணம் இருந்தது, அவர் நிறைய படிக்கிறார் என்று. இப்போது அவரால் பூசல் சார்ந்த கட்டுரைகளுக்கு அப்பால் ஆழமாக எதையும் படிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாதென்று எண்ணுகிறேன். அவரது இலக்கிய ரசனை பற்றி வேடிக்கையான ஒரு எண்ணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/799