Tag Archive: அ.கா.பெருமாள்

குமரி உலா – 5

டிலனாய் [De Lennoy] கட்டிய கோட்டைகளிலேயே குறிப்பிடத்தக்கது உதயகிரி கோட்டை.  தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அவர் அங்கேதான் செலவிட்டிருக்கிறார். ஆகவே அவரது சமாதி அங்கே இருப்பது அனைத்துவகையிலும் சிறப்பானதே. நாங்கள் போகும் வழியில் வசந்தகுமாரின் காமிராவை சரிபார்த்தோம். மின்னேற்றம் குறைவுபட்டிருந்தது. அதை சரிசெய்தோம். உதயகிரி கோட்டைக்குள் நான்கு சுற்றுத்தெருக்கள் உண்டு. அவை இன்று நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளாக உள்ளன. கோட்டைக்குள்ளேயே கிழக்குப்பக்கம் இப்போதும் காடாகவே உள்ளது. வனத்துறை பாதுகாப்பில் இருக்கும் அப்பகுதியில் அவர்கள் சிறு வனப்பூங்கா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37945/

குமரி உலா – 4

பத்மநாபபுரம் அரண்மனை இப்போது பரவலாக புகழ் பெற்றுவிட்டது. முக்கிய காரணம் திரைப்படங்கள். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, வருஷம் பதினாறு, சுவாதி திருநாள், மணிசித்ரதாழ் போன்ற படங்கள் அதன் கலையழகை விளம்பரப்படுத்தின. இப்போது சினிமாக்கள் எடுக்க அனுமதிக்கப்படுவது இல்லை, காரணம் பிரபுதேவா. அவரது ஒரு படத்தின் படமாக்கலில் பல பெண்களை மரக்கட்டுமானங்கள் மீது அரைநிர்வாணமாக ஏற்றி நிறுத்தி துள்ள விட்டிருக்கிறார்கள். ஊர்க்காரர்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்து அரசுக்குத் தெரிவிக்க, படஅனுமதி நிறுத்தப்பட்டுவிட்டது. பொதுவாகவே பத்மநாபபுரத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வு அதிகம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37942/

குமரி உலா – 3

ஏறத்தாழ மூன்று வருடம் நான் பத்மநாபபுரத்தில்தான் குடியிருந்தேன். அன்று என்னைத்தேடிவந்த பெரும்பாலான நண்பர்களுக்கு அந்த ஊர் மிகவும் பிடித்திருந்தது என்பதை நினைவுகூர்கிறேன். அழகிய ஊர். பல தமிழ் சினிமாக்களில் அதை பலரும் பார்த்திருக்கக் கூடும். திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அகன்ற தெருக்களும் பெரிய வீடுகளும் கொண்டது. பொதுவாக இப்படிப்பட்ட பழமையான ஊர்களில் ஓர் இருள், சிதைவு எங்கும் காணப்படும். பத்மநாபபுரம் அப்படியல்ல, அது தன்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டு நவீனகாலகட்டத்துக்கு வந்துவிட்ட ஊர் அது. ஆனால் மக்களுக்கு தங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37934/

குமரி உலா – 2

பல வடிவங்களில் நான் மேலாங்கோட்டு அம்மனைப்பற்றி எழுதியிருக்கிறேன். என் குலதெய்வமான இட்டகவேலி முடிப்புரை நீலி மீண்டும் மீண்டும் என் கனவுகளை நிறைப்பவள். அவள்மீது எனக்கு பக்தியா பயமா பிரியமா இல்லை அதற்கும் அப்பாற்பட்ட ஏதோ ஓர் ஆழ்மனத்தொடர்பா என்று சொல்லத்தெரியவில்லை. பற்பலவடிவங்களில் பலவகையான பெண்தெய்வங்கள் குமரிமாவட்டத்தில் சிதறிக்கிடக்கிறார்கள். அனைவர் வழியாகவும் ஒரு பொதுச்சரடு ஓடுகிறது. அவர்கள் எல்லாமே ஏதோ வகையில் மலைதெய்வங்கள். நீலிக்கு நீலகேசி என்றும் பெயர் உண்டு. காடு அம்மனின் நீலமுடி. பின்பு நாகரீகத்தால் பழிவாங்கப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37938/

குமரி உலா – 1

டாக்டர் அ.கா. பெருமாள் அவர்கள் எழுதிய விரிவான வரலாற்றாய்வு நூலான ‘ குமரியின் கதை: குமரிமாவட்ட வரலாறு ‘ தமிழினி வெளியீடாக வரவுள்ளது. இதுநாள்வரையிலான வரலாற்றாய்வுத்தரவுகளை சீரானமுறையில் அதில் தொகுத்துள்ளார். குமரிமாவட்ட ஆய்வுகளின் முன்னோடிகளான கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை கெ.கெ. பிள்ளை ஆகியோரின் ஆய்வுகளை மேலதிகமாக ஆய்வு செய்து நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளார் பெருமாள் அவர்கள். சென்ற இருபதாண்டுகளில் உபரியான பல தகவல்களும் கிடைத்துள்ளன. பல ஏட்டுச்சுவடிகளை பெருமாள் அவர்களே அச்சேற்றியுள்ளார். இதற்கு உபரியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37932/

அ.கா.பெருமாள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். நலமா ?. அ கா பெருமாள் எழுதிய தோல் பாவைக் கூத்துக் கலைஞர் பற்றிய கட்டுரை. மிக அற்புதமான கட்டுரையாக கண்ணுக்கு பட்டது. http://www.kalachuvadu.com/issue-78/kalai.htm அன்புடன் பன்னீர் செல்வம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/37888/

வயக்காட்டு இசக்கி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம் . நேற்று அ கா பெருமாள் எழுதிய வயக்காட்டு இசக்கி படிதேன் . அவர் ஒரு researcher ஆகத்தான் தாணுமாலையன் ஆலயம் புத்தகம் எனக்குக் காட்டியது . ஆனால் அவரும் ஒரு அற்புதமான கதை சொல்லி என்று இந்த வயக்காட்டு இசக்கி எனக்குக் காட்டியது . ராப்பாடிகளைப் பற்றியான கதையையும் , அவர்களின் வாழ்க்கையையும் ஒரு கதை போலவே சொல்லிச் செல்கிறார் . ஓநாயின் மலத்தைத் தேய்த்துக் குறி சொல்லவருவதால்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35196/

யார் இந்து?-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், நீண்ட பதிலுக்கு மிக்க நன்றி. உண்மைதான். என்னுடைய குலதெய்வம் என்னுடைய சொந்த ஊரில் இல்லை. எந்த தலைமுறையில் நாங்கள் புலம்பெயர்ந்தோம் என்ற கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த வழிபாடு மட்டும் இன்னும் நீடிக்கிறது. இரு வருடங்களுக்கு ஒரு முறை அறுபது கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் அந்தக் கோவிலுக்குச் செல்வோம். அங்கு நான் விசாரித்த வரை அவர்கள் சொன்னது இதைத்தான். “கருப்பசாமி பல தலைமுறைகளுக்கு முன் ஊர் காவலுக்கு நேர்ந்து விடப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21662/

சிற்பச்செய்திகள்

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, நான் தங்களது விஷ்ணுபுரம் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய கோயில் சார்ந்த கலைச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். உதாரணத்திற்கு விமானம், பிரகாரம், முகமண்டபம் மற்றும் பல. இதுபோல சிற்பங்கள் குறித்த கலைச் சொற்கள். இவைகளை எப்படி புரிந்து கொள்வது? தயவுசெய்து வழிகாட்டவும். காட்டுவீர்களா? இப்படிக்கு பா.மாரியப்பன் அன்புள்ள மாரியப்பன் கோயில்சார்ந்த கலைச்சொற்கள் பொதுவாக வையாபுரிப்பிள்ளை பேரகராதியில் உள்ளன. தனியாக ஒரு கலைச்சொல்லகராதி இல்லை. இந்தப் பெருங்குறையை அ.கா.பெருமாள் அவர்களிடம் பேசியதுண்டு. பெருமாள், செந்தீ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21461/

தறி-ஒருகடிதம்

ஜெ, நீங்கள் முன்பொரு முறை குழித்தறி குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்போதே கேட்க நினைத்து விடுபட்டு விட்டது. அதில் தாங்கள் சமூகப் படிநிலையில் ஒரு உப ஜாதியைக் கீழ் இறக்கும் முகமாக உருவாக்கப் பட்டது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நானும் என் தங்கையும், அவள் கல்லூரி ஆவணப் படத்திற்காக விசாரித்த போது கிடைத்த தகவல் அடிப்படையிலேயே இதைக் கேட்கிறேன்(படம் படு மோசமாக வந்தது வேறு கதை). ஆனால் நான் அறிந்தவரை குழித்தறி தானே பழைய தறி. பட்டுத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19642/

Older posts «

» Newer posts