Tag Archive: அ.கா.பெருமாள்

அ.கா.பெருமாள்:குமரி

நலமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன், ஒரு உதவி. நானும் கன்னியாகுமரிக்காரன்தான். திடீர் என்று கன்னியகுமாரியின் வரலாற்றை தெரிந்து கொள்ள ஆவல். அனேகமாக உங்கள் வலை பக்கத்தை படித்தபிறகு. இல்லை வணங்கான் கதையை படித்த பிறகு என்று நினைக்குறேன். ஐயா மார்சல் நேசமணி காங்கிரஸ் காரர் என்று ஒரு வெறுப்பில் அவரை பற்றி அதிகம் தெரியாமல் இருந்து வந்தேன் .உங்கள் வணங்கானை படித்த பின்பு தான் ஒரு ஞானம். சொந்த மண்ணின் வரலாற்றை தெரிந்து கொள்ளாமலேயே ஏதேதோ ஊரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108682/

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

  நமது பண்டைய ஆலயங்கள் வழிபாட்டுமையங்கள் மட்டுமல்ல, அவை கலைக்கூடங்களும் வரலாற்றுக் களஞ்சியங்களும்கூட. சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற நமது பேராலயங்கள் முக்கியமான அதிகாரமையங்களாக இருந்தன. அவற்றை அச்சாகக் கொண்டு அன்றைய பொருளியல் கட்டுமானமும், சமூக அடுக்குமுறையும் உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாலயங்களில் பல்லாயிரம் கல்வெட்டுகளும் பிற ஆவணப்பதிவுகளும் உள்ளன. ஒரு நவீன வரலாற்றாசிரியனுக்கு ஒவ்வொரு ஆலயமும் ஒரு மாபெரும் வரலாற்று நூல்போல. பொதுவாக வரலாற்றாய்வின் இன்றைய காலகட்டத்தை நுண்வரலாற்றெழுத்தின் காலம் எனலாம். பொதுவாகவும் ஒட்டுமொத்தமாகவும் தமிழக வரலாறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/263/

வயக்காட்டு இசக்கி

இனிய ஜெயம் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு முறை கி ரா, ” வாய்மொழி மரபு கொச்சயாத்தாம் இருக்கும். தாய்ப்பாலு கொச்சதாம். வேணாம்ன்னாக்க யாருக்கு நட்டம்?” என்றார். காலச்சுவடு வெளியீடாக அ.கா. பெருமாள் அவர்கள் எழுதி வெளியாகி இருக்கும் வயல்காட்டு இசக்கி நூலுக்கு, அதில் அ. கா. பெருமாள் எழுதி இருக்கும் முன்னுரையில் ஒரு நிகழ்வை வாசிக்கையில், மேற்கண்ட கி ரா அவர்களின் கூற்றை நினைத்துக் கொண்டேன். பேராசிரியர் மிகுந்த உழைப்பில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு நூல் ஒன்று கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102019/

அ.கா.பெருமாள், அசோகமித்திரன் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ அ.கா.பெருமாள் அவர்களைப்பற்றி நீங்கள் தொகுத்தளித்திருக்கும் எழுத்துக்களைப் பார்த்தேன். இருபதாண்டுகளாக அவரைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள் என தெரிகிறது. திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறீர்கள். நல்லது. ஆனால் காலம் மிகவும் கெட்டுக் கிடக்கிறது. கொஞ்சநாள் கழிந்ததும் நீங்கள் உண்மையில் அ.கா.பெருமாள் அவர்களை அவமதிக்கத்தான் செய்திருக்கிறீர்கள், அவரை வைத்து பணமும் புகழும் சேர்த்துவிட்டீர்கள் என ஒரு கும்பல் கிளம்பிவரும். ஆகவே பணம் புகழ் எல்லாம் சேர்க்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை கைவசம் ரெடியாக வைத்திருங்கள் சங்கர் *** அன்புள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97116/

பறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து

நேற்று முன்தினம் [2-4-2017] மாலை அ.கா.பெருமாள் அவருடைய இளம்நண்பர் ராம் அழைத்துவர வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய தோல்பாவை நிழல்கூத்து நூல் காவியா வெளியீடாக முழுமையான தொகுப்பாக வெளிவந்துள்ளது. பல்வேறு தருணங்களில் அ.கா.பெருமாள் எழுதிய தோல்பாவைநிழற்கூத்து குறித்த அனைத்துச்செய்திகளும் அடங்கிய ஆய்வுநூல் இது அ.கா.பெருமாள் அவர்களைப்பார்த்து சிலகாலம் ஆகிறது. சென்னையிலும் நாகர்கோயிலிலுமாக மாறிமாறி இருக்கிறர். சற்று களைத்திருக்கிறார். பல்லாயிரம் கிலோமீட்டர்கள் குமரிமாவட்டத்திற்குள்ளேயே சுற்றிச்சுற்றிச் செய்திசேகரித்தவர். இன்று சொந்தமாக வண்டி ஓட்டுவதில்லை. ஆய்வுப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றார். மறைந்த தமிழறிஞர்களைப்பற்றி அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97078/

நகர்நடுவே நடுக்காடு

நாகர்கோவிலில் மிக முக்கியமான நகரச்சந்திப்பு ஒன்றுக்கு ‘ நடுக்காட்டு இசக்கியம்மன் பேருந்து நிறுத்தம் ‘ என்று பெயர் .திருவனந்தபுரம் நெடுஞ்சாலை ஆகையால் சரசரவென்று பேருந்துகள் ஓடும், கடைகளும் பங்களாக்களும் நிரம்பிய ,இப்பகுதியில் சாலையோரமாகவே நடுக்காட்டு இசக்கியம்மனின் கோயில் உள்ளது . கோயில் என்பது சரியல்ல. குடில். வெள்ளைபூசப்பட்ட சிறு களிமண் சுவர்கள் கொண்ட ஓலைவேயப்பட்ட சிறு அமைப்பு ஒன்று. சுற்றிலும் மரத்தடிகளில் வேறு துணைத்தெய்வங்கள். அங்கே சென்று நின்றால் சற்று நேரத்தில் எல்லா சந்தடிகளையும் மறந்து காட்டின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88149/

மின்தமிழ் பேட்டி -1

[சி சரவணக் கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் மின்தமிழ் இதழில் வெளியான பேட்டி] 1. நீங்கள் எழுத வந்து 30 ஆண்டுகள் பூர்த்தியாகப் போகிறது. இன்று சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் உச்சபட்ச ஸ்தானம். எப்படி உணர்கிறீர்கள்? இந்த நீண்ட பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தில் சாதித்து விட்டதாகத் தோன்றுகிறதா? பதில். எழுதவந்து 30 ஆண்டுகள் என்று சொல்வதைவிட அறியப்பட்டு முப்பதாண்டுக்காலம் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. நான் எழுத ஆரம்பித்தது எழுத்துக்கள் தெரிந்த நாளில் இருந்தேதான். என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69816/

தேவசகாயம் பிள்ளை

அன்புள்ள அய்யா மறை சாட்சி தேவ சகாயம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை தங்களின் பார்வையில்,தங்களின் வரிகளில் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன். தயவு செய்து எனக்காக அவரின் வாழ்க்கை வரலாற்று கட்டுரை எழுதுமாறு வேண்டுகிறேன். நன்றி. ப கோபால கிருஷ்ணன் அன்புள்ள கோபாலகிருஷ்ணன், அனறைய திருவிதாங்கூர் அரசு இரண்டு அதிகாரமையங்கள் கொண்டிருந்தது. மார்த்தாண்டவர்மா மகாராஜா அரசுப்பொறுப்புக்கு வர பேருதவி புரிந்தவரும் படைத்தலைவரும் அமைச்சருமான ராமய்யன் தளவாய் என்னும் சோழிய பிராமணர் தலைமையில் ஒரு தரப்பு. மார்த்தாண்ட வர்மாவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47739/

ஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…

இப்போது எனக்கு வரக்கூடிய கடிதங்களில் பத்துக்கு ஒன்பதும் எழுத்தாளர்கள் எப்படியெப்படியெல்லாம் அடக்கமாக இருக்கவேண்டும் என்றும், பணிவே எழுத்தாளனுக்கு உயர்வுதரும் என்றும் அறிவுரை சொல்லக்கூடியவை. எவருக்கும் இலக்கியம், எழுத்து என எந்த அறிமுகமும் இருப்பதாகத் தெரியவில்லை. என்னையே இப்போதுதான் கேள்விப்படுகிறார்கள் என்று தோன்றியது. இருந்தும் ஏன் அறிவுரை சொல்கிறார்கள்? ஒரு அரசியல்வாதிக்கோ தொழிலதிபருக்கோ ஆலோசனை சொல்வார்களா? மாட்டார்கள்.ஏனென்றால் அவர்களை இவர்கள் அண்ணாந்து பார்க்கிறார்கள். எழுத்தாளர்களை குனிந்து பார்க்கிறார்கள். ‘எழுத்தாளர்கள் தன்னைப்பற்றி உயர்வாகச் சொல்லக்கூடாது’ என்றார் ஒருவர். ‘தன்னைப்பற்றி உயர்வாகச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41758/

குமரி உலா – 6

காலையில் கார் வந்து சேர்ந்தது. குளித்துவிட்டுக் கிளம்ப சற்றுதாமதமாகிவிட்டது. அரட்டை இடைவிடாது நடந்துகொண்டிருக்கும்போது செயல்கள் ஓடுவது இல்லை. முதல் பயணம் இரணியல் அரண்மனைக்கு. அதைப்பற்றி நெய்யூர் டவுனில் விசாரித்தாலும் யாருக்கும் தெரியாது. பயணிகள் பொதுவாக அங்கே போவது இல்லை. அங்கே பார்க்கவும் ரசிக்கவும் ஒன்றும் இல்லைதான். பெருமாள் பலமுறை சென்றிருக்கிறார். ஆகவே குழப்பம் இல்லாமல் செல்ல முடிந்தது. இரணியல் அரண்மனையைப்பற்றி பொதுவாக தெளிவான சித்திரங்கள் இல்லை. இது நூறு வருடம் முன்பே கைவிடப்பட்டுவிட்டது. ஆனால் சுதந்திரம் கிடைப்பதுவரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37947/

Older posts «