Tag Archive: அஹொம் வம்சம்

சூரியதிசைப் பயணம் – 9

18-ஆம்தேதி புதன்கிழமை. நாங்கள் கிளம்பி வந்து ஐந்துநாட்கள்தான் ஆகின்றன. ஆனால் ஒரு புதிய பண்பாட்டின் புதிய நிலத்தின் வாழ்க்கைக்குள் இருந்தமையால் காலம் பலமடங்கு விரிந்து நீண்டு விட்டிருந்தது. கௌஹாத்தியே கடந்தகாலத்தின் தொலைவில் எங்கோ தெரிந்தது. காலையில் எழுந்து அஸ்ஸாமிய கருப்பு டீ அருந்திவிட்டு குளிராடைகளை அணிந்துகொண்டு சிவன்கோயிலுக்கு சென்றோம். அதிகாலையிலேயே ஆலயவளாகம் உயிர்பெற்றிருந்தது. வணிகர்களும் பிச்சைக்காரர்களும் தொழிலை தொடங்கிவிட்டிருந்தனர். அனைவருமே பிகாரிகள். அஹோம் மக்களும் போடோ மக்களும் சிறுவணிகம் செய்வதையும் பிச்சை எடுப்பதையும் வெறுப்பவர்கள். அவர்கள் பொய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71797

சூரியதிசைப் பயணம் – 8

மாஜிலியில் இருந்து நேராக சிவ்சாகர் நகரை நோக்கி காரில் வந்தோம். வரும் வழியில் சாப்பிடலாமென நினைத்தாலும் இரவுக்குள் சென்றுவிடவேண்டும் எனத் தோன்றியதனால் எங்கும் தாமதிக்கவில்லை. வழியில் ஒரு கடையில் ஜிலேபி , காரவடை, டீ சாப்பிட்டோம். ஷிவ்சாகரில்தான் நண்பர் ராம்குமார் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக இருந்தார். ஷிவ்சாகருக்கு வந்தது நல்ல நாள், சிவராத்திரி. ராம்குமார் எங்களை புறவழிச்சாலை வழியாக வரச்சொல்லியிருந்தார். அவர் ஏற்பாடுசெய்திருந்த அலுவல்விடுதிதான் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம். அதற்கு நேர் எதிரில் பிரம்மாண்டமான குளம். அதன்பெயர்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71719