[ 6 ] ஏழுமாத காலம் எண்ணி எண்ணி ஏங்கி வெந்து சுருங்கிய இந்திரனிடம் இந்திராணி சொன்னாள் “அஞ்சுவதை விட்டு அகலவேண்டும். வஞ்சம் கொள்வதை நோக்கி அணுகவேண்டும். அகன்றிருப்பதனால் பெருகுவதே வஞ்சம். சென்று அவ்வசுரனை காணுங்கள். அவனுடன் சொல்லாடுங்கள். அவன் யாரெனத் தெளிந்தால் இவ்வஞ்சம் அணையக்கூடும்.” இந்திரன் சினத்துடன் உறுமினான். “கரந்தமையும் எண்ணம் எதுவும் நஞ்சு. வஞ்சம் வீண் எண்ணங்களை உணவெனக்கொண்டு பெருகுவது. நீங்கள் எண்ணுபவன் அல்ல அவ்வசுரன் என்றிருக்கலாம். உங்கள் சொல்கேட்டு நண்பனென்றும் ஆகலாம். சென்று …
Tag Archive: அஹிர்புத்ன்யன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/92696
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38
[ 4 ] பிரம்மகபாலத்தின் மலைக்குகைக்குள் மழைக்காற்று தழல்கெட்டு கனல்கொண்டிருந்த எரிகுளத்தில் இருந்து பொறிஎழ வீசியது. செவ்வொளியில் குகைச்சுவர்கள் தசைப்படலமென சுருங்கி விரிந்து அதிர்ந்தன. செங்கனல்துளியை கைபொத்திப் பற்றி விரல் இடுக்குகளில் குருதியென அனல்வழிய வாயில் சேர்த்து முகம் குனித்து ஆழ இழுத்தார் பிச்சாண்டவர். நெஞ்சு நிறைத்த புகையை உடலெங்கும் பரவவிட்டு மேலும் மேலுமென உடல் குறுக்கி ஒடுங்கினார். சடைப்புரிகள் சரிந்துவிழுந்து நிழலுடன் ஆடி முகம் மறைக்க அமர்ந்த பிச்சாடனரின் இருபக்கமும் அமர்ந்து அந்தணரும் சூதனும் கதையாடினர். …
Permanent link to this article: https://www.jeyamohan.in/92686