Tag Archive: அஸ்ஸாம்

சூரியதிசைப் பயணம் – 14

நாம் வரைபடங்களை எந்த அளவு கவனிக்கிறோம் என்பதை பெரும்பாலும் உணர்ந்திருப்பதில்லை. இலங்கையில் இருந்து என்னைச் சந்திக்கவருபவர்கள் ‘சார் நாளைக்கு கி.ராவை பாத்துப்போட்டு அப்டியே ஞானியையும் பாத்துப்போட்டு சாயங்காலம் உங்கள பாக்கவாறம்” என்பார்கள். இலங்கை என கோழிமுட்டையை வைத்தே அவர்கள் இந்தியாவை அளவிட்டிருப்பார்கள். பிரமிளின் ஒரு கதையில் ஒரு ஈழத்தவர் ‘அது எவ்வளவு பெரிய தேசம், போய்ட்டே இருக்கு’ என வியந்திருப்பார். வடகிழக்கில் ஒவ்வொரு தூரத்தையும் அந்தவகையான பிரமிப்புடன்தான் எதிர்கொள்ள முடிந்தது. எவ்வளவு பெரிய தேசம். எவ்வளவு பிரம்மாண்டமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71940/

சூரியதிசைப் பயணம் – 6

நதி என நாம் நினைப்பதன் சித்திரம் மாறிக்கொண்டே இருக்கிறது. இளமையில் நானறிந்த நதி என் வீட்டின் கொல்லையில் ஓடிய வள்ளியாறுதான். வற்றாத நதி. அதன் படுகை அதிகம் போனால் அரைகிலோமீட்டர் அகலம். மழைக்காலத்தில் செந்நிறநீர் நிறைந்தோடும். எட்டாவது படிக்கையில் முதல்முறையாக தாமிரவருணியை பார்த்தேன். இருமடங்கு பெரிய நதி. என் மனம் அன்றுகொண்ட விம்மிதத்தை இப்போதும் நினைவுகூர்கிறேன். அதன்பின் காவேரியைப்பார்த்தபோது தாமிரவருணி சிறியதாகியது. அதன்பின் கிருஷ்ணையையும் கோதாவரியையும் பார்த்தபோது நதி என்ற கற்பனையையே மாற்றியமைத்தேன். கிருஷ்ணா நதி மீது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71715/

சூரியதிசைப் பயணம் – 5

காசிரங்கா வனவிடுதியில் காலை ஆறுமணிக்கு எழுந்தோம். முந்தையநாளே குளித்திருந்தமையால் காலையில் குளிக்கவில்லை. கீழே ஒரு உணவகம் இருந்தது. ஆனால் காலையுணவை அவர் சமைக்க ஒன்றரை மணிநேரம் ஆகிவிடும் என்றார். ஆகவே டீ மட்டும் குடித்துவிட்டு கிளம்பினோம். நல்ல குளிர் இருந்தது. அஸ்ஸாம் சமநிலப்பகுதி என்றாலும் ஊட்டி அளவுக்கே காலையில் குளிர் இருந்தது. இமையமலையின் குளிர்ச்சாரல் காரணமாக இருக்கலாம். திறந்த ஜீப் வந்தது. இப்பகுதியில் மாருதி ஜிப்ஸி ஜீப்புகள் இன்னமும் பரவலாக புழக்கத்தில் உள்ளன. காட்டுக்குள் செல்ல அவைதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71611/

சூரியதிசைப் பயணம் – 4

அதிகாலையில் ஐந்தரை மணிக்கே கிளம்பிவிடவேண்டும் என்று திட்டம். எங்கள் பயணங்களில் எல்லாமே இது ஒரு நிபந்தனை. அதிகாலையில்தான் நிலக்காட்சியின் அழகு முழுமையாக வெளிப்படும். அதிகாலையில்தான் நாம் காணும் மானுட வாழ்க்கையை நுணுக்கமாக கவனிக்கிறோம், ரசிக்கிறோம். அதிகாலையை ஒருபோதும் தவறவிடக்கூடாது. ஆனால் மனாஸிலிருந்து கிளம்புபோது ஏழுமணி ஆகிவிட்டது. ஏனென்றால் எங்கள் உடலுக்கு அப்போதுதான் ஐந்தரை. வெளியே இருட்டு அதற்குள் விலகிவிட்டிருந்தது. பறவைகளின் குரல்களால் விடுதியறை சூழ்ந்திருந்தது. பெட்டிகளைக் கட்டி வைத்து டீ சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். 15 ஆம் தேதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71604/

சூரியதிசைப் பயணம் – 3

மதியம் ஒருமணிக்கு மனாஸ் தேசிய வனப்பூங்காவை வந்தடைந்தோம். ராம்குமார் அங்கே இருந்த தனியார் விடுதி ஒன்றில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தார். அஸ்ஸாமின் சுற்றுலாத்தொழில் கொஞ்சம் மேலேறி வந்த சமயத்தில் சமீபத்திய போடோ தாக்குதல் அதை பின்னடையச்செய்துவிட்டது. ஆனாலும் அறைகளில் குடும்பங்கள் நிறையவே இருந்தன. மனாஸ் ஆற்றின் கரையில் உள்ள இந்தக் காடு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது . மனாஸ் ஆறு பாம்புதேவியான மானசாதேவியின் பெயரால் அவ்வாறு அழைக்கப்படுகிறது என்கிறார்கள். பிரம்மபுத்திராவின் துணையாறு இது. யுனெஸ்கோ இந்தக்காட்டை உலகக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71525/

சூரியதிசைப் பயணம் – 2

காலை நான்குமணிக்கே விடிந்துவிட்டது. பறவைக்கூச்சல் கேட்டு வெளியே பார்த்தால் அந்த விருந்தினர் மாளிகைக்கு பின்னால் பிரம்மாண்டமாக பிரம்மபுத்திரா ஓடிக்கொண்டிருந்தது. தமிழகக் கண்ணுக்கு அது ஒர் ஆறு என்றே தோன்றாது. ஏரி என்றே தோன்றும். அத்தனை அகலம். பிரம்மபுத்திரா பற்றிய என் நினைவே அதன் கரையில் நெடுந்தொலைவுக்கு படிந்திருக்கும் கரிய சேறுதான். அப்படியேதான் இருந்தது. சற்றே கலங்கலான நீர் ஒளியுடன் கண்கூச நிறைந்து கிடந்தது. காலையில் அதில் மீன்பிடிப்படகுகள் நின்றிருந்தன. காலையில் காமாக்யா கோயிலுக்குச் சென்றோம்.கௌஹாத்தியின் முக்கியமான மத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71522/

சூரியதிசைப் பயணம் – 1

இந்தமுறை வடகிழக்குப் பயணம் என்று சொன்னபோதே என் மனதில் அர்ஜுனனின் வடகிழக்குப்பயணங்கள்தான் எழுந்தன. மகாபாரதகாலத்தில் அஸ்ஸாம் காமரூபம் என அழைக்கப்பட்டிருக்கிறது. அர்ஜுனன் தன் காடேகலிலும் பின்னர் அஸ்வமேதத்திலும் வடகிழக்கில் மணிப்பூர் வரை சென்றதாக சொல்லப்படுகிறது. பிரம்மபுத்திரா மற்றும் வடகிழக்கு நிலத்தின் அழகிய சித்திரம் மகாபாரதத்தில் உள்ளது. மணிப்பூரின் இளவரசி சித்ராங்கதையை அர்ஜுனன் மணந்த கதை வசீகரமானது. சித்ராங்கதையை இளமையிலிருந்தே ஓர் ஆண் என்றே சொல்லி வளர்த்துவந்தான் அரசன். அர்ஜுனனைக் கண்டதும் அவள் தன்னை பெண் என உணர்ந்தாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71520/

குருதியாறு

ஜெ, விஷ்ணுபுரம் வாசித்த போது எனக்கு பெரிய மனக்கிளர்ச்சியை அளித்தது அங்கே ஓடிய சோனா என்கிற சிவந்த நிறமான ஆறுதான். அதை விதவிதமாக வர்ணித்திருப்பீர்கள். ரத்த ஆறு, தீயால் ஆன ஆறு என்றெல்லாம். அதன் அருகே உள்ள மரங்களின் இலைகளில் அடிப்பக்கம் சிவந்த நிற ஒளி அலையடிக்கும் என்ற வர்ணனை அதை அப்படியே கனவுமாதிரி கண்ணில் நிறுத்தியிருக்கிறது அந்த நாவலில் எல்லாவற்றுக்கும் ‘அர்த்தம்’ உண்டு. சோனாவும் ஹரிததுங்கா என்ற குன்றும் மட்டும்தான் அர்த்தமே இல்லாதவை. அவை பாட்டுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69986/