Tag Archive: அஸ்வினிதேவர்கள்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 11

[ 5 ] பிரம்மனின் ஆணைப்படி தேவசிற்பியான விஸ்வகர்மன் இப்புடவியின் பருப்பொருட்களை தன் சித்தப்பெருக்கின் வண்ணங்களாலும் வடிவங்களாலும் படைத்து, பாழ்வெளியெங்கும் நிரப்பிக்கொண்டிருந்த காலத்தொடக்கத்தில் ஒருநாள் தன் தனிமையை அழகால் நிறைத்த ஓர் அறியா உணர்வை என்னவென்று அறியத்தலைப்பட்டு இயல்பாக நிகழ்ந்த உணர்வெழுச்சியால் ஓவியம் வரையலானான். இரு கைகளிலும் தூரிகைகளை எடுத்து ஒற்றை அசைவால் அவன் வரைந்த இரு திரைச்சீலைகளில் ஒன்றுபிறிதேபோன்ற இரு பேரழகுப் பாவைகள் விழிநாணி இதழ்மலர்ந்து அவனை நோக்கின. திகைத்து வலப்பாவையை நோக்கி “யார் நீ?” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86508/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை -6 அரங்குசொல்லி மெல்ல அரங்கின் மையத்தில் வந்து நின்று கைவிரித்து “ஆக, ஓர் அங்கத நாடகத்தில் ஒருபோதும் வரமுடியாத வஞ்சங்களும், பெருவிழைவுகளும், விளைவான முற்றழிவும் இந்நாடகத்தில் வரவிருக்கின்றன. இக்கவிஞன் எந்த முறைமைக்குள்ளும் அடங்காதவன். ஏனெனில் இந்த நாடகத்தை அவன் தனக்காகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறான். இதற்குமேல் இதில் எனக்குப் பங்கென ஏதும் இல்லை. இதோ நான் அணியறைக்குச் சென்று இந்தத் தலைப்பாகையை கழற்றி வைத்துவிட்டு என் உடைகளை அணிந்துகொண்டு என் இல்லத்திற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84896/

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 8

பகுதி இரண்டு : மழைத்துளிகள் – 2 சிறு ஊற்று விழிகொண்டு சுரந்து நிறைவதுபோல் ஒவ்வொரு நாளும் எனத் திரண்டு அவளில் உருவானவை. அவளை அவளென ஒவ்வொரு கணமும் நினைவுறுத்துபவை. தனிமையிலோ நீராழத்திலோ கூட அவளே தொட்டுநோக்க தயங்கினாள். அவற்றுக்கென ஓர் நிலையும் உணர்வும் உண்டு என்பவை போல அவை அசைந்தன, குழைந்தன, தனித்து விழிபுதைந்தன, எழுந்து துடித்தன. என்றோ ஒருமுறை அவற்றைத் தீண்டுகையில் அவள் உடல் உவகையுடன் நடுங்கியது. எலும்புகளே இல்லாமல் ஓர் உறுப்பு. மென்மை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75766/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 16

பகுதி 5 : ஆடிச்சூரியன் – 3 “வைவஸ்வத மனுவின் மைந்தனாகிய மாமன்னர் சர்யாதிக்கு மகளாகப் பிறந்த சுகன்யையை வாழ்த்துவோம். இந்த இளங்குளிர் மாலையில் அவள் கதையை பாடப்பணித்த சொல்தெய்வத்தை வணங்குவோம். வெற்றியும் புகழும் விளங்கும் பாஞ்சால மண்ணில் அவள் கதை மீண்டும் எழுக! நாவிலிருந்து நாவுக்கு பற்றிக்கொண்டு காலமுடிவுவரை அது நீள்க!” என்று சூதர் பாடிவிட்டு கண்களை மூடிக்கொள்ள குறுமுழவும் யாழும் அந்த சுதியை மீட்டி முன்சென்று அமைந்தன. அவரது குரல் எழுந்தது. சர்யாதிக்கு நாலாயிரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70867/