Tag Archive: அஸ்வகர்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 6

[ 10 ] முனிவர்கள் கூடிவந்து தன்னிடம் சொன்னதைக் கேட்டு மகாகாளர் மூக்கிலிட்ட கையை குடைந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் அருகே நின்ற முதல் மாணவன் உரத்தகுரலில் “நாங்கள் நேற்றே கிளம்புவதாக இருந்தோம். எங்கள் ஆசிரியர் மகதமன்னரைக் காணச் செல்லவேண்டியிருக்கிறது. இங்கு நாங்கள் தங்குவது இயலாதது” என்றான். “மேலும் நாங்கள் பெற்றுக்கொள்வது பொன்னும் மணியும் மட்டுமே. அதை அளிக்க வைதிகரால் இயலாது” என்றான் இரண்டாவது மாணவன். மகாகாளர் தன் மூக்கிலிருந்து உருட்டி எடுத்த அழுக்கை முகர்ந்தபின் “செய்துவிடலாம்” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91543

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 5

[ 8 ] அந்தியிருளத் தொடங்கிய வேளையில் தண்டகாரண்யத்தின் நடுவே ஓடிய மதுவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் உருண்ட மலைப்பாறை ஒன்றின்மேல் அமர்ந்திருந்த பிச்சாண்டவர் தன்னருகே ஈச்ச ஓலை பின்னிய தழையாடையை இடையில் அணிந்து தரையில் கைகட்டி அமர்ந்திருந்த வைசம்பாயனனிடம் சொன்னார். “வடக்கே இன்று அந்த குருநிலை தாருகவனம் என்றழைக்கப்படுகிறது. அதில் அத்ரிமுனிவர் நிறுவிய கிராதமூர்த்தியின் சிவக்குறியைச் சூழ்ந்து கல்லால் ஆன ஆலயம் ஒன்று எழுந்துள்ளது. அறுவகை சைவநெறியினருக்கும் அவ்விடம் முதன்மையானது. அதனருகே ஓடும் சுகந்தவாகினியில் நீராடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91483

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ -3

பகுதி ஒன்று : கனவுத்திரை – 3 அஸ்தினபுரியில் இருந்து நாற்பது காதம் தொலைவில் கங்கைக் கரையின் குறுங்காட்டுக்குள் அமைந்திருந்தது மாலினியின் தவக்குடில். பெருநகரிலிருந்து கிளம்பி கங்கை படித்துறைக்கு வந்து, அங்கிருந்து கரையோரமாகவே செல்லும் சிறிய படகில் நீரொழுக்கிலேயே சென்று, கங்கைக்குள் நீட்டி நின்றிருந்த பாறை ஒன்றின்மேல் அமைக்கப்பட்டிருந்த சிறிய படகு மேடையை அடைந்து, கரையேறி அங்கிருந்து காலடிப் பாதை வழியாக சென்று அக்குடிலை அடையவேண்டும். சுபகையும் முஷ்ணையும் சுஜயனுடன் கருக்கிருட்டிலேயே கிளம்பிவிட்டனர். அவன் முந்தைய நாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78559

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 20

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 1 குதிரைக்குளம்புப்பாறைக்குக் கீழே இருந்த குகைமுகப்பில் வைகாசிமாத ஏழாம் வளர்பிறைநாள் இரவில் அந்தகக்குலத்து யாதவர்களின் எழுபத்தெட்டு ஊர்களில் இருந்தும் வந்த குடித்தலைவர்கள் எரிகுளத்தைச் சூழ்ந்து அமர்ந்து அரசியல் தேர்ந்தனர். அந்தகக்குலத்தின் பன்னிரு பெருங்குடிகளில் இருந்தும் மூத்த யாதவர்கள் வந்திருந்தனர். கன்றுநலம்சூழும் மருத்துவர் எழுவரும் வான்குறியும் மண்குறியும் தேரும் நிமித்திகர் மூவரும் மூதன்னையருக்கு பலியும் பூசையும் ஆற்றும் பூசகர் பதின்மரும் அமர்ந்திருந்தனர். பிறை நிலவு பட்டுத்திரையை கிழிக்கும் வாள் என சென்றுகொண்டிருக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76110

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27

பகுதி ஆறு : தீச்சாரல் [ 1 ] அஸ்தினபுரிக்கு வடக்கே முப்பது நிவர்த்த தொலைவில் இருந்த கிரீஷ்மவனம் என்னும் காட்டுக்குள் ஓடிய தாராவாஹினி என்னும் சிற்றாறின் கரையில் கட்டப்பட்ட குடிலில் தன் பதினெட்டு சீடர்களுடன் பீஷ்மர் தங்கியிருந்தார். அவர்கள் மாலை ஆயுதப்பயிற்சிகள் முடிந்து மீண்டும் தாராவாஹினியில் நீராடி மரத்தடியில் தீயிட்டு அமர்ந்து கொண்டு வெளியூரில் இருந்து வந்திருந்த சூதரையும் விறலியையும் அமரச்செய்து கதைகேட்டுக்கொண்டிருந்தனர். நள்ளிரவு தாண்டியிருந்தது. பீஷ்மர் மரத்தடியில் சருகுமெத்தைமேல் விரிக்கப்பட்ட புலித்தோலில் படுத்திருந்தார். அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44540