Tag Archive: அஷ்டபதி

நீலச்சேவடி

நான் குமரிமாவட்டம் பத்மநாபபுரத்தில் வாழ்ந்தபோது பேருந்து நிறுத்தத்துக்கு எதிரே ஒரு சுற்றுச்சுவருக்குள் நின்றிருந்த ஆலமரத்தடியின் மேடையில் ‘குரு ஆத்மானந்தர் தன் குருவைக் கண்டடைந்த இடம் இது’ என்ற வரிகளை வாசித்தேன். பலமுறை அந்த இடத்தைக் கடந்துசென்றபோதும்கூட ஆத்மானந்தரை அறிய நான் அதிக முயற்சி எடுத்துக்கொள்ளவில்லை. தற்செயலாகத்தான் அவரது பெயர் கிருஷ்ணமேனன் என்றும் உலகப்புகழ்பெற்ற வேதாந்த ஞானி என்றும் அவரைச் சந்திக்க சி.ஜி.யுங், ஜூலியன் ஹக்ஸிலி போன்றவர்கள் வந்திருக்கிறார்கள் என்றும் தெரிந்துகொண்டேன். அவரைப்பற்றி சுந்தர ராமசாமி பலமுறை சொல்லியிருக்கிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62698

ஜெயதேவ மானசம்

ஜெ நேற்று இரவு உங்கள் கீத கோவிந்த இணைப்புகளைப் பார்த்தேன். அப்படியே இணையத்தில் உலவி கீதகோவிந்தம் சினிமாப்பாடல், நடனம் என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். அதிகாலை ஐந்துமணிக்கு இதை எழுதுகிறேன். eternal emotions என்று சொல்லலாம். அது மனிதனிலே நிகழ்கிறது. ஆனால் தெய்வங்களுக்குரியது என்று உங்கள் மொழியில் சொல்லலாம். காதல் பிரிவு. அதிலும் அந்தப்பெரியவர் ஆடும்போது மனிதனாகவே தெரியவில்லை பிரபு அன்புள்ள பிரபு, நான் கடந்த நாற்பதுநாட்களாகவே கீதகோவிந்தத்தில்தான் இருக்கிறேன். கொஞ்சம் மீண்டு வந்து மீண்டும் குப்புற விழுந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63128

அஷ்டபதி

ஜெயதேவ அஷ்டபதி. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஒருநாளும் நினைவிலும் கனவிலும் நிறமிழக்காத லலித மதுர கோமள பதாவலி. ஜெ யா ரமிதா வனமாலினா சகி தீர சமீரே யமுனா தீரே வசதிவனே வனமாலீ [கண்டசாலா] யாஹி மாதவா பஷ்யதி திஷி திஷி லலித லவங்கலதா பரிசீலன http://gitagovinda.wordpress.com/

Permanent link to this article: https://www.jeyamohan.in/63106

அந்தக்குழல்

ஜெ சார் நீலம் வாசித்துமுடித்ததும் ஒரு பெரிய ஏக்கம். வாசிப்பது ஆரம்பத்திலே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. நான் வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்டிருந்த பாகவதம் இரண்டு வால்யூம் வாசித்ததோடு சரி. ராதை கிருஷ்ணன் விஷயமெல்லாம் கொஞ்சம் சுமாராகத்தான் தெரியும். எங்களூரில் பஜனைமடத்தில் சூரி என்பவர் ராதாகிருஷ்ண கல்யாணம் நடத்துவார். ஜெயதேவர் அஷ்டபதி எல்லாம் பாடிக்கேட்டிருக்கிறேன். ஆனால் அதெல்லாமே சின்னவயசு. பெரியதாக ஏதும் மனதில் ஏறவில்லை, வட இந்தியா வந்தபின்னாடி ராதா பஜனை இங்கே வெகு விசேஷமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62746

காமயோகம்

ஜெ மந்திரமெழுந்தது மனக்குகை இருளில். மின்னிஎழுந்தன என் முந்தையர் விழிகள். கடுவெளி நிறைத்த காரிருளானேன். காலமென்றான துடியொலி கேட்டேன். வெறுமை மிதித்து வெறிநடமிட்டேன். கிழிபடும் திசைகளில் இடியொலி கேட்டேன். கீழ்த்திசை வானில் ஒரு சொல் கேட்டேன். உடுக்கொலியை காதில் கேட்கவைக்கும் இந்தப்பகுதியுடன் நீலம் முழுமையை அடைந்துவிட்டது. வைணவத்தின் ராஸலீலைக்குள் சிவனின் கடுந்துடி தாளமும் காளியின் கொடுகொட்டியும் சரியாக வந்து அமைந்துவிட்டன. யோசித்துப்பார்த்தால் எல்லா மதத்திலும் இந்த ஆடலை காணமுடியும் என்று நினைக்கிறேன். அஷ்டபதியில் இருக்கிறது. அப்புறம் பெரும்பாலான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62367