Tag Archive: அழியாச்சுடர்கள்

ஞானக்கூத்தன் நேர்காணல்

உங்கள் பென்சில் படங்கள் பூரா உங்க பிள்ளைப்பருவ வாழ்க்கை தானா? வெளிப்படையாகச் சொல்லப் போனால் நான் இருபத்தோரு வயசுக்கு மேல வளரல. எனக்கும் என் கவிதைக்கும் ஒண் ணும் நடக்கல, அதுதான் என் பிரச்சினை. அத ஒரு இடத்துல சொல்லிருக்கேன். இருபத்தோரு வயசோட எல்லாம் முடிஞ்சுபோச்சு. அப்புறம் எப்படி வாழ்றது? ஓட்டு போடுறதுக்கு முன்னாடியே வாழ்க்கை முடிஞ்சுபோச்சுன்னா பாக்கி வாழ்க்கையை என்ன செய்றது? இப்ப 72 வயசாகுது. அம்பது வருஷம் ஓட்டியிருக்கேன். அப்படி ஒரு சிக்கல் வாழ்க்கைல. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66933

கவிதை என்னும் கலைத்துக்கொள்ளுதல்

சார், ந.பிச்சமூர்த்தியின் கொக்கு, சாகுருவி கவிதைகளை இன்று அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்தபோது, உங்களது கவிதைகள் –விமரிசகனின் சிபாரிசு கட்டுரையை மீண்டும் படித்தேன். மிகவும் நிறைவாக இருந்தது. அதில் கீழ்வருமாறு சொல்லியிருக்கிறீர்கள். எவ்வளவு உண்மை அது! வருடத்தில் நூறு தொகுப்புக்குமேல் தமிழில் வருகின்றன. பெரும்பாலான தொகைகளில் ஒருசில நல்ல கவிதைகளாவது உள்ளன. ஆனால் கவிஞன் என்பவன் அப்படி கவிதை எழுதும் ஒருவனல்ல. கவிஞன் தனகே உரிய மொழி கொண்டவன். தனக்கான வாழ்க்கை நோக்கு கொண்டவன். வாழ்க்கையை கவிதைமூலமே அறிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20655

மூன்றுகதைகள்

இந்த இணையதள விவாதங்களில் நான் அடிக்கடிச் சொல்லும் இரு கதைகள் அழியாச்சுடர்கள் தளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன. கு.அழகிரிசாமியின் ’இருவர் கண்ட ஒரே கனவு’ எளிமையையே அழகாகக் கொண்ட கதை. உணர்ச்சிகரமான ஒரு தருணம் மட்டும்தான் அதில் உள்ளது. ஆனால் அது ஏன் நிகழ்ந்தது என ஒருவர் யோசிக்கப்புகுந்தால் மானுடம் என்ற ஒற்றைப்பெருந்திரளை, கண்ணுக்குத்தெரியாத ஒரு ஆழ்நதியோட்டத்தை தொட்டுவிட முடியும். ’காந்தி’ அசோகமித்திரனின் வித்தியாசமான கதை. கதையே இல்லை. ஓர் உணர்வெழுச்சி, ஒரு வேகமான சுய உரையாடல் மட்டும்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12815

அசோகமித்திரனின் காந்தி

அசோகமித்திரனின் ’காந்தி’ நான் விரும்பும் கதைகளில் ஒன்று. சொல்லப்போனால் அது கதையே அல்ல, எண்ணங்களின் பிரவாகம் மட்டும்தான். சிந்தனை அல்ல. உணர்ச்சிகள் சொற்களாக மாறும் ஒரு நிலை. ஆனால் அந்த உணர்ச்சிப்பெருக்கில் உள்ள நுண்ணிய அந்தரங்கத்தன்மையும் வேகமும் அதை தமிழின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்றாக ஆக்குகிறது அழியாச்சுடர்களில் அந்தக்கதை வலையேற்றம்செய்யப்பட்டுள்ளது

Permanent link to this article: https://www.jeyamohan.in/12476

அழகிரிசாமியின் ராஜா

மெய்ஞானத்தையும் கனிந்த விவேகத்தையும் குழந்தைகளைக்கொண்டு சொல்லவைக்கும்போக்கு இந்திய இலக்கியத்தில் உண்டு. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற எண்ணத்தின் விளைவு அது. குழந்தை மனிதர்களின் கசடுகள் தீண்டாமல் கடவுளின் கையில் இருக்கிறது என்ற நம்பிக்கை உலகமெங்கும் உள்ளது. தேவதைகளை குழந்தைகளாக உருவகித்தது மேலைமரபு. தெய்வங்களேகூட குழந்தை வடிவில் வழிபடப்பட்டன. குழந்தை ஏசு ஐரோப்பாவெங்கும் பிரபலம். குருவாயூர் கிருஷ்ணனும் உடுப்பி கிருஷ்ணனும் கைக்குழந்தைகள். முருகன் அழகிய சிறுவன். அழகிரிசாமியின் இந்தக்கதையில் அபாரமான ஒரு மெய்ஞானம் குழந்தைவாயில் இருந்து வருகிறது. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9207

என் பேட்டி

என்னுடைய பழைய பேட்டி ஒன்றை இந்த இணையதளத்தில் எடுத்துக்கொடுத்திருக்கிறார்கள். அழியாச்சுடர்கள் என்ற இந்த தளம் தமிழின் தரமான பல கதைகளை வாசிப்பதற்கான இடமாக இருக்கிறது என்பதை சுட்டியிருந்தேன் http://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_20.html

Permanent link to this article: https://www.jeyamohan.in/8810