Tag Archive: அழகு

நிறம் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நிறம் கடிதத்தையும் உங்கள் பதிலையும் படித்தபொழுது மீண்டும் வருத்தமே உண்டானது. நானும் சில அதிர்ச்சி அனுபவங்களை தாண்டி வந்துள்ளேன். கருப்பாய் இருக்கும் நான் வெள்ளையாய் வந்த பிடிக்காத மாப்பிள்ளையை மறுப்பது ஏதோ தெய்வ குற்றம் போல் கருதப்பட்டது. வேறு வழியின்றி கல்யாணம் முடிக்க அவரை உலகம் எனக்கு வாழ்வளித்தவராகவே பார்த்தது. நான் படித்த படிப்புகளும் கை நிறைய சம்பாதித்த வேலையும் எனக்கு அளிக்காத வாழ்வை அவர் அளித்ததை நினைத்து இன்னும் எனக்கு ஆச்சர்யம்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75138

சாமானியனின் காழ்ப்பு

நண்பர் ஒருவர் விவாதக்குழுமத்தில் இந்த இணைப்பை எடுத்துப்போட்டிருந்தார். விம்பிள்டன் வென்ற ஒரு வீராங்கனையைப்பற்றிய டிவிட்டர் வசைகள் குழுமத்தில் உடலழகுக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கும் தகுதியற்ற முக்கியத்துவத்தைப் பற்றிய விவாதத்தில் இது சுட்டிக்காட்டப்பட்டது. இதில் உள்ளது அழகு சார்ந்த முன்முடிவுகள் மட்டுமல்ல. common man’s grudge என்று சொல்லப்படும் ஓர் உணர்வு என நான் நினைக்கிறேன். சாமான்யன் தொடர்ந்து பிரபலங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவர்கள் மீது மோகமும் வெறுப்பும் ஒரேசமயம் அவனுக்கிருக்கிறது.மோகம் அவர்களைப்போலத் தன்னைப் பகற்கனவில் காண்பதனால். வெறுப்பு அவர்களைப்போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37705

முழுமை, சமூகம், ஐரோப்பா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , “ நான் ஒருவர் தன் லௌகீக வாழ்க்கையை முழுமையாக்கியபின் அதை முடித்துக்கொள்வதை உயர்ந்த விழுமியமாகவே நினைக்கிறேன். நான் அப்படி முடித்துக்கொள்வேன் என்றால் அதை என் உச்சநிலையாகவே எண்ணுவேன் “ ஒருவரின் லௌகீக வாழ்க்கை முழுமையடைவது என்பது எப்பொழுது? நான் ஆரம்ப நிலையில் உள்ள உங்களின் வாசகன். எனவே என்னைப் பொறுத்து இதற்கு பதில் அளிக்கவும். நன்றி. ரவி. கோவை அன்புள்ள ரவி, ஒரு வாழ்க்கை முழுமையடைகிறது என்பதை அவ்வாழ்க்கைக்குள் இருக்கும் அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27561

அழகு-ஒருகடிதம்

அன்புள்ள ஜெ, ஆனால் இந்த அழகு… பிதற்றச்செய்கிறது இந்த பிரம்மாண்டம். இத்தனை பேரழகையும் மனிதன் எதற்காகத் தேடுகிறான்? அவனுள் இருக்கும் அழகுக்கான தாகம் இத்தனை பிரம்மாண்டமானதா என்ன? இத்தனை கட்டிய பின்னும் அது அப்படியே இன்னும் எஞ்சுகிறதா என்ன? போன வருடம் தனியனாக ஃப்ளோரன்ஸில் சுற்றிக்கொண்டிருந்த போது, பளிங்கு தேவாலயங்கள், பிரம்மாண்டமானதும், நுண்ணிய வேலைப்பாடு கொண்டதுமான அதன் தூண்கள், உயர்ந்த, ஓவியங்கள் செறிந்த விதானங்கள், உயிர்ப்பான ஒரு கனத்தில் உறைந்துவிட்டன போன்ற ஊணர்ச்சி ததும்பும் சிற்பங்கள் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25374