Tag Archive: அழகியல்

பூமணியின் அழகியல்

பூமணியின் எழுத்து இன்றைய வாசகனுக்கு என்ன உணர்வை உடனடியாக உருவாக்குகிறது? அவர் பிரபலமான இதழ்களில் எழுதியவரல்ல. நெடுங்காலமாகவே அவரது எழுத்து சிற்றிதழ்வட்டத்து வாசகர்களுக்காகவே பிரசுரிக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே இலக்கியங்களை வாசிக்கும் பயிற்சி பெற்றவர்கள். இயல்புவாத எழுத்தின் அலைகளற்ற நேரடித்தன்மையை அவர்களால் எளிதில் உள்வாங்கமுடியும். மேலும் உலகளாவிய தளத்தில் இயல்புவாதம் ஓர் அழகியல்முறைமையாகப் பெரிதும் பின்னகர்ந்துவிட்டது என்றே நினைக்கிறேன். இயல்புவாத எழுத்துக்களை மையப் போக்காகக் கொண்டிருந்த சீன எழுத்துக்களிலேயே இன்று அந்த அழகியல் இல்லை. ஆகவே நவீன உலக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22829/