Tag Archive: அழகின்மை

சாமானியனின் காழ்ப்பு

நண்பர் ஒருவர் விவாதக்குழுமத்தில் இந்த இணைப்பை எடுத்துப்போட்டிருந்தார். விம்பிள்டன் வென்ற ஒரு வீராங்கனையைப்பற்றிய டிவிட்டர் வசைகள் குழுமத்தில் உடலழகுக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கும் தகுதியற்ற முக்கியத்துவத்தைப் பற்றிய விவாதத்தில் இது சுட்டிக்காட்டப்பட்டது. இதில் உள்ளது அழகு சார்ந்த முன்முடிவுகள் மட்டுமல்ல. common man’s grudge என்று சொல்லப்படும் ஓர் உணர்வு என நான் நினைக்கிறேன். சாமான்யன் தொடர்ந்து பிரபலங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவர்கள் மீது மோகமும் வெறுப்பும் ஒரேசமயம் அவனுக்கிருக்கிறது.மோகம் அவர்களைப்போலத் தன்னைப் பகற்கனவில் காண்பதனால். வெறுப்பு அவர்களைப்போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37705