Tag Archive: அறிவியல் புனைகதை

உற்றுநோக்கும் பறவை [சிறுகதை]

  ‘துவாத்மர்கள் ‘ என்ற பெயர் அனேகமாக இன்று பழைய திருவிதாங்கூர் – பிரிட்டிஷ் ராணுவ ஆவணங்களில் மட்டும் உள்ள ஓரு சிறிய வரலாற்றுக்குறிப்பு மட்டுமே. பிற்கால வரலாற்றாசிரியர்களான என் சிவசங்கரன் நாயர் , இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை , எம் கெ ராஜப்பன் நாயர் ஆகியோரின் எழுத்துக்களில் இவர்கள் மேற்குமலையடிவாரத்தில் சரல்கோடு என்ற ஊரில் வாழ்ந்த ஒரு பழைய மாடம்பி வம்சம் என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களுடைய அட்டூழியம் எல்லைமீறிப்போனமையால் பிரிட்டிஷ் ரெசிடண்ட் மேஜர் எஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57

கார்ல் சகன், ‘தொடர்பு’

  முடிவின்மையின் தொடர்பு ‘எல்லி அரோவே’ யின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது கதை. மிக இளம் வயதிலேயே அவளுக்குள் பிரபஞ்சம் எப்படி எதனால் செயல்படுகிறது என்ற வினா குழந்தைக்கே உரிய தீவிரத்துடன் எழுந்துவிட்டது. அந்த அடிப்படையான தேடலை அறிவியலாளரான அவள் தந்தை கணிதத்தையும் அறவியலையும் நோக்கித் திருப்பினார். தந்தையுடன் அவளுக்கிருந்த உணர்வுப்பூர்வமான நுட்பமான உறவு அந்த தேடல் வலுப்பெற்று அதை மட்டுமே மையமானதாகக் கொண்டு அவளது ஆளுமை உருவாகக் காரணமாக அமைந்தது. இளமையின் சபலங்களுக்கோ உலகியல் ஆர்வங்களுக்கோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5655

பித்தம் [சிறுகதை]

உள்வளவு அங்கணத்திண்ணையில் அமர்ந்து நல்லகுத்தாலிங்கம் பிள்ளை கஞ்சி குடித்துக் கொண்டிருந்தபோது நாகலட்சுமி அவசரமாக வாசலில் இருந்து உள்ளே வந்து ‘ ‘ அந்த அகமுடிவான் வந்திருக்கான். சொல்லியாச்சு, ஒத்த ஒரு காசு அவனுக்குக் குடுக்கப்பிடாது. குடுத்ததே போரும். இனி அவன் காசும் கொண்டு போனான்னு சொன்னா எனக்க சுபாவம் மாறும் பாத்துக்கிடுங்க ‘ ‘ என்றாள் பயத்தம்பருப்பு சேர்த்து சமைத்து சூடாக நெய்விட்ட சம்பா அரிசிக்கஞ்சி . துணைக்கு தேங்காயெண்ணை விட்டு மயக்கி இளந்தேங்காய் நசுக்கிப்போட்ட சக்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58

தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-3

[மேலும்]  இம்முறையானது மிக விரைவிலேயே பெரும்பாய்ச்சலை உருவாக்கியிருக்கும் என்பதை எவரும் ஊகிக்கலாம். ஏற்கனவே உலகின் அனைத்துத் தகவல்தொகைகளையும் ஒருங்கிணைத்து ஒரே தகவல்வெளியாக ஆக்கியிருந்தனர். அத்தகவல்தொகையானது மூளைக்கு வெளியே கணிப்பொறிகளில் இருந்தாலும் எக்கணமும் எண்ணிய உடனே அதிலுள்ள அனைத்தையும் மூளைக்குள் நிரப்பிக் கொள்ள இயலும் என்ற நிலை உருவாயிற்று. அதாவது ஒரு தனி மூளையின் தகவல்திறனானது நடைமுறையில் உலகில் உள்ள அனைத்துத் தகவல்களையும் கொண்டதாக மாறியது.மானுடமூளை என்பது கணிப்பொறிகள் மற்றும் புறஸீட்டா கதிர்களினாலான நரம்புவலையால் இணைக்கப்பட்ட ஒற்றைப்பெரும் மூளையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25092

தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-2

[தொடர்ச்சி] மரபை எதிர்த்தும் உடைத்தும் திரித்தும் எழுதும் நவீனத்துவ எழுத்துக்கள் உருவானபோது அதுவரை வந்த கதைச்சரடுகள் கண்ணாடிப்பிம்பம் போல தலைகீழாக்கப்பட்டுத் தொடர்ந்தன. தி ஜானகிராமனின் மோகமுள்ளை[[1962] ஒருவகைத் தாய்தெய்வப்பாடல் என்றால், நான் சுந்தர ராமசாமியின் ‘ஜெஜெ சில குறிப்புகளை ‘ [1984]ஒருவகை வீரகதைப்பாடல் என்றால், நீங்கள் சற்று சிந்திக்காமலிருக்கமாட்டீர்கள். பலவகையான கதைவடிவங்கள் பரிசீலிக்கப்பட்ட காலம் இது. அப்பரிசீலனைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நாவல் என்றார்கள் .சிறியவடிவங்களை சிறுகதை என்றார்கள். கதையற்ற வடிவங்களும் இவ்வகைமையில்சேர்க்கப்பட்டன. அவ்வாறாக புராதன கதைப்பாடல்கள் பழங்காலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25086

தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-1

சான்றோர்களே அன்பர்களே, இக்கருத்தரங்கில் இதுவரை முன்வைக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் இன்றுள்ள இலக்கியப் படைப்புகளின் பல்வேறு நுட்பங்களைப்பற்றிப் பேசின . உண்மையில் இலக்கியநுட்பங்கள் என்னும் போது அவையெல்லாம் இலக்கிய வடிவங்களின் நுட்பங்களையே உத்தேசிக்கின்றன. எல்லாக் காலத்திலும் இப்படித்தான் இருந்துள்ளது, இலக்கிய விவாதங்கள் அனைத்தும் இலக்கிய வடிவம் சார்ந்த விவாதங்களே. இலக்கியப்படைப்பின் உள்ளடக்கம் சார்ந்த விவாதங்கள் உண்மையில் இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட தளங்களுக்கு நகர்ந்துவிடுவதுதான் வழக்கம். ஆக, இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதென்றால் இலக்கிய வடிவத்தைப்பற்றியே பேசமுடியும். ஆகவேதான் உருவவியலாளர்கள் இலக்கியம் என்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/51

ஐந்தாவது மருந்து [சிறுகதை]

எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்தவன் இருக்கும் ஊரில் கொக்கோகோலா கிடைக்கவில்லை. வழியெங்கும் அடர்த்தியான தென்னந்தோப்புகளில் இளநீர்க்குலைகள்தான் தொங்கின. சரியான தாகம். பிரதாப் ‘பேசாமலிரு. போய் நல்ல கிணற்றுத்தண்ணியே சாப்பிடலாம் ‘என்றான். ஊருக்கும் ஒரு மலையாள நெடி இருந்தது, பெயரில் தொடங்கி . அச்சன்குளத்துக்குக் கார்கள் வருவதே அதிகமில்லை போலும். மாட்டுவண்டிப் பாதையில் இரு செம்மண் குழிகள் இணைஓடைகள் போல உருவாகியிருந்தன. அடிக்கடி தென்பட்ட குளங்களிலெல்லாம் தாமரைகள். அபூர்வமாக நீலத்தாமரையைக்கூடப் பார்த்தேன். ‘ஒரு கிராக்கைப்பாக்க இத்தனைதூரம் வரணுமாண்ணு இருந்தது. ஆனா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65

பூர்ணம் [சிறுகதை]

மெளனச்சாமியார் மடத்தின் ஓய்வறையில்தான் டாக்டர் வினோத் பட்டாச்சாரியாவை சந்தித்தேன்.அவர் என் நேர் எதிர் அறை. கதவைத் திறந்தால் அவரது கதவு . ஒருமுறை திறந்தபோது இருவரும் முகத்தோடுமுகம் சந்தித்து திகைத்து நின்றோம். ‘ஹாய் ‘ என்றார். அது உயர்குடிகள் ‘யாரடா நீ புழுவே ? ‘ என்று கேட்கும் முறை என நான் அறிவேன். நான் தொழில்முறைப் பத்திரிகையாளன். ‘என் பெயர் கணேஷ் குமார். பத்திரிகையாளன். ‘ என்றேன். ‘நான் பத்திரிகைகளை வெறுக்கிறேன் ‘ என்று கதவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61

நாக்கு [சிறுகதை]

கேக் ஒரு பெண்ணின் முகம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அவள் சிவந்த உதடுகள் மீது ஒரு செர்ரி. கிருஷ்ணன் அந்த செர்ரியை எடுத்தபடி ‘ ‘ அப்துல் லதீஃப் அல் பக்தாதியைப்பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? ‘ ‘ என்றான் நாசர் ‘ ‘ இல்லையே ‘ ‘ என்றார். ‘ ‘ நம்முடைய பங்குதாரரா ? ‘ ‘ ‘ ‘ தொழில்முறையில் மருத்துவர். வேதியியலிலும் ஈடுபாடு இருந்தது. அத்துடன் மத அறிஞரும்கூட ‘ ‘ என்றான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/53

அறிவியல்கதைகள்:கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன், உற்று நோக்கும் பறவை என்ற கதையை உங்கள் இணையதளத்தில் படித்தேன். மிகவும் ஆச்சரியமளித்த கதை. இதற்கு முன்பு இதற்கிணையாக மனித மனத்தின் அகவயமான செயல்பாட்டை [குறிப்பாக அதன் இரட்டை இயக்கத்தை] ஒரு கதை வழியாகச் சித்தரித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இது முழுக்க முழுக்க கற்பனை சார்ந்ததா அல்லது துவாத்மர்கள் என்ற ஒரு வகை ஆன்மீக இயக்கம் இருந்திருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஆசை ஓப்லா விஸ்வேஷ் அன்புள்ள விஸ்வேஷ், துவாத்மர்கள் என்று யாரும் இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2526

Older posts «