Tag Archive: அறிவியல்

உடலைக் கடந்த இருப்பு

ஐம்புலன்களின் வழியாகவே மனிதனுக்கு அறிதல் சாத்தியமாகிறது. புலன்களோ உடலுள் பொருந்தியவை. எனவே ‘நான் அறிகிறேன்’ என்று அறியும் தூய தன்னுணர்வு இந்தப் பரு உடலுக்குக் கட்டுப்பட்டது. இப்போது, உடல் மனிதனுக்கு அறிதலின் பாதைகளை நோக்கித் திறந்திருக்கும் வாசலா அல்லது புலன்களைச் சார்ந்தே இருப்பதால் உடல் அறிதலின் பரப்பைக் கட்டுப்படுத்தும் வேலியா? உடலைக் கடந்து மனிதனின் தன்னுணர்வு தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா? அவ்வாறு முடியுமென்றால் அறிதலுக்கு வாய்ப்பே இல்லையா அல்லது நேரெதிராக அறிதல் எல்லைகளற்று விரிந்துவிடுமா? – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58245

‘சயன்ஸே சொல்லுது!’

அன்புள்ள ஜெ, காந்தியின் சனாதனம்-4 இல் சீர்திருத்த அணுகுமுறையின் செயல்பாட்டை அடிப்படை விதிகளாக சுருக்கிச் சொல்லியிருந்தீர்கள். ஆனால் மதப்பற்று காரணமாகத் தங்கள் மதம் ஐரோப்பிய சிந்தனையையும் அறிவியலையும் விட ஆழமானதும் உயர்ந்ததுமாகும் என வாதிடுவார்கள். அதற்கான விளக்கங்கள் எல்லாமே ஐரோப்பிய தத்துவத்தையும் அறிவியலையும் அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும். ‘உருவ வழிபாடு’ திரியில் சுட்டப்பட்ட அரவிந்தன் நீலகண்டனின் ‘சிலை வழிபாடு பிரசெண்டேஷனில்’ நான் கண்டது நீங்கள் மேல் சொன்ன வரிகள்தான் என்று நினைக்கிறேன். மேலும் சிக்கல் என்னவென்றால் சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26771

ஒளியை விட வேகமானது – விளம்பரம்

ஒளியைவிட வேகமாகச்செல்லும் துகளான நியூட்ரினோ பற்றிய பரபரப்பான அறிக்கையை OPERA என்ற குழு சென்ற ஆண்டு வெளியிட்டது. உலகம் முழுக்க பெரும் பரபரப்பை உருவாக்கியது இது. ஐன்ஸ்டீனின் பிரபஞ்ச உருவகமே காலாவதியாகப்போகிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. இப்போது அந்தக் கணக்கிடலில் பெரிய பிழைகள் நிகழ்ந்துவிட்டன என்றும், அதைக் கருத்தில்கொள்ளாமல் அவசரமாக அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டார்கள் என்றும் ஏறத்தாழ நிரூபணமாகிவிட்டது. இது நான் ஏற்கனவே ஓரளவு ஐயப்பட்டதுதான் – என் கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன். குளிர் அணுஇணைவு பற்றிய செய்தியும் இப்படித்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26285

புதிய பிரபஞ்சம் பற்றி

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். தங்கள் வலைத்தளத்தில் கடந்த 27 /09 /11 அன்று “புதிய பிரபஞ்சம்” என்ற தலைப்பில் வெளிவந்திருந்த அறிவியல் கட்டுரையில் சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சிக்கூட்டமைப்பு நிகழ்த்திய பரிசோதனையில் அதிநுண்துகள்களான நியூட்ரினோக்கள் ஒளியைவிட வேகமாகச் செல்வதைப் புறவயமாக நிரூபித்துள்ளது என்றும் இது உண்மையென்றால் பிரபஞ்ச ஈர்ப்பு விசைகள் பற்றிய நியூட்டனின் கண்டுபிடிப்பு முன்வைக்கப்பட்டது போல, சார்பியல் கோட்பாடு முன்வைக்கப்பட்டதைப்போல, மானுட சிந்தனை வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனை இது. முதலில் தோன்றிய எண்ணமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25495

அறிவியலுக்கென்ன குறை?

இந்திய அறிவியல் எங்கே என்ற கட்டுரையை வாசித்துவிட்டுப் பலரும் கருத்து சொன்னார்கள். அதில் நண்பர் வேணு அவர்கள் இந்த கடிதத்தொடர்பை அனுப்பியிருந்தார்கள். இதில் ஓர் அறிவியலாளரை நாம் காண்கிறோம். மக்கள் தொலைக்காட்சி எவ்வளவு பயனுள்ளது என்பதையும். இதற்குமேல் நமக்கு என்ன தேவை? கண்களில் நீர் தளும்ப இதை எழுதுகிறேன் ஜெ நண்பர்களே, விஞ்ஞானி க.பொன்முடி அவர்கள் தமிழ்நாட்டின் சமகால விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் என்பதை அவரே என்னைத்தொடர்பு கொண்ட மின்னஞ்சல் மற்றும் காணொளி இணைப்புகள் வழி அறிந்து பெருமிதம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20504

மெய்ஞானம் சில்லறை விற்பனை

சமீபத்தில் நண்பர்கள் அனுப்பிய இணைப்புகள் அரசியல்… http://www.youtube.com/watch?v=ohpo2xDabqg&feature=player_embedded#! அறிவியல் ஆன்மீகம் கலை கரிஸ்மாட்டிஸம் பதிலடி கடைசியாக http://vhtv.in/index.asp?fl=paavainonbu அல்லேலூயா! ஹரிஓம்!

Permanent link to this article: https://www.jeyamohan.in/11644

இரு இணைப்புகள்

ஜெ, முடிந்தவரை எளிதாக அறிவியலை எழுத முயன்றிருக்கிறேன்.இதைப் பாருங்கள்… http://solvanam.com/?cat=11 போக வேண்டிய தூரம் நிறைய. அன்புடன், வேணு. அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நான் தங்கள் நெடுநாள் வாசகன்.என் கட்டுரை ஒன்று தி ஹிண்டு இதழில் வெளிவந்துள்ளது தங்களுக்கு நேரமிருப்பின் படியுங்கள்.மகிழ்வேன் http://www.hindu.com/op/2010/11/21/stories/2010112150141200.htm மிக்க நன்றி ராமனுஜம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/9355

கேள்வி பதில் – 74

இலக்கியம் தரும் புரிதலும் கண்ணோட்டமும் போதாது, பல சமயங்களில் பிற துறைகள் தொடும் விஷயங்களை/முன் வைக்கும் கருத்துகள் இலக்கியம் மூலம் வரும் சாத்தியம் மிகக் குறைவு. எனவே நான் இலக்கியமற்றது 95% இலக்கியம் 5% படிக்கிறேன். தமிழில் வெளிவரும் சிறுபத்திரிகைகள் எனக்கு அலுப்பூட்டுகின்றன என்கிறார் என் நண்பர். இது குறித்து உங்கள் கருத்தென்ன? சிறுபத்திரிகைகள் ஏன் இலக்கியம், அதிகபட்சம் வரலாறு, தத்துவம் அல்லது இலக்கியம், கலைகள் தொடர்புடையவற்றையே குறித்து கட்டுரைகள் வெளியிடுகின்றன? பிற துறைகளில் எழுதுபவர்கள் குறைவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128