Tag Archive: அறிவிப்பு

மழைப்பாடல்- காசோலை

நண்பர்கள் பலர் மழைப்பாடல் செம்பதிப்புக்குரிய தொகையை காசோலையாக அனுப்பலாமா என்று கேட்டிருந்தனர். அனுப்பலாம் Natrinai Pathippagam Private limited என்ற பேருக்கு காசோலையை எழுதி Natrinai pathippakam Old number 123 A – New Number 243A Triplicane Highroad Triplicane Chennai 600005 என்ற விலாசத்துக்கு அனுப்பலாம். காசோலையுடன் முழு விலாசமும் அனுப்பப்படவேண்டும் தொடர்புக்கு : நற்றிணை [email protected] தொலைபேசி: யுகன் 9486177208 , 044 28442855

Permanent link to this article: https://www.jeyamohan.in/57247

தியோடர் பாஸ்கரனுக்கு விருது

கனடாவின் இயல் விருது தியோடர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் சூழியல் எழுத்து என்னும் இலக்கிய வகையை தொடங்கிவைத்த முன்னோடிகளில் ஒருவர் என்று தியோடர் பாஸ்கரன் அவர்களைச் சொல்லமுடியும். இவ்விருது தமிழகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள மரியாதையும்கூட வாழ்த்துக்கள் தியோடர் பாஸ்கரனுக்கு இயல் தியோடர் பாஸ்கரன் மின்னஞ்சல் [email protected]

Permanent link to this article: https://www.jeyamohan.in/57341

கோவையில் கண்ணதாசன் விழா

கோவை கண்ணதாசன் கழகம் சார்பில் வழங்கப்படும் கண்ணதாசன் விருது இசைக்கலைஞர் வாணிஜெயராம் அவர்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. கண்ணதாசன் கழகம் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் 87ஆம் பிறந்ததினத்தை முன்னிட்டு 22.06.2014 அன்று மாலை 5.30 மணியளவில் கண்ணதாசன் விழா கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நிகழ்கிறது. இவ்விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன், பாடகி வாணிஜெயராம் ஆகியோருக்கு கண்ணதாசன் விருதுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 பொற்கிழியும்பட்டயமும் கொண்ட இவ்விருது கண்ணதாசன் கழகத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56784

கண்ணதாசன் விருது

கோவை கண்ணதாசன் கழகம் அளிக்கும் கண்ணதாசன் விருது இலக்கியம் மற்றும் கலைத்துறையினருக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியத்தில் இதுவரை நாஞ்சில்நாடன், வண்ணதாசன், கலாப்ரியா, எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடத்துக்கான இலக்கிய விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுத் தொகை ரூ 50000 மற்றும் நினைவுச்சின்னம் அளிக்கப்படும். வரும் 22.06.2014 அன்று கோவையில் பரிசளிப்பு விழா. கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் விழா நிகழும்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/56432

என் கவிதைகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களின் விமர்சனப் பார்வையில் குறிப்பிடத்தக்கவையாகக் கருதும் நவீன கவிதைகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவு,கீழ்க்கண்ட எளிய வலைப்பூ. முடிந்தவரை தொகுக்கப் பார்க்கிறேன். நன்றி! http://www.ariyavai.blogspot.com/ அன்புடன், கு.மாரிமுத்து அன்புள்ள மாரிமுத்து, ஆச்சரியமாக இருக்கிறது. நான் பல்வேறு கட்டங்களில் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் கவிதைகளை இப்படி ஒரே இடத்தில் பார்க்கும்போது என்னையே கண்ணாடியில் பார்ப்பது போலிருந்தது. இதன் பின் உள்ள உழைப்பு ஆச்சரியமளிக்கிறது வாழ்த்துக்கள் ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/17070

யானைடாக்டர்-படங்கள்

யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் அழகிய புகைப்படங்கள் இரண்டு கிடைத்தன. யானைடாக்டர் என்ற பேரில் இந்தக்கதை மட்டும் சிறிய நூலாக விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நண்பர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இலவசமாக இது தகுதியான வாசகர்களுக்கு வழங்கப்படும். புத்தகம் அச்சாகும் முன் கிடைத்திருந்தால் இந்தப்படங்களை அதில் சேர்த்திருக்கலாம் மேலும் சில நண்பர்கள் இந்த கதையை தங்கள் அமைப்புகளுக்காகச் சிறு நூலாக வெளியிடலாமா என்று கேட்டு எழுதியிருந்தார்கள். அதைச் சேர்ந்து செய்வது நல்லது யானைடாக்டர் கெ அவர்களைப்பற்றி பிபிசி எடுத்த ஆவணப்படம் எவரிடமாவது இருந்தால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17056

யானைடாக்டர் நினைவுகூரல் நிகழ்ச்சி

அழைப்பிதழ் காட்டியல் கண்காட்சியும் விழாவும்   இடம் பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரி,  பீளமேடு, கோவை, நாள் –29,30 ஜூன் 2011 நிகழ்ச்சி 29-6-2011 காலை பத்துமணிக்குக் காட்டியல் புகைப்படக் கண்காட்சி மா.கிருஷ்ணன், டி.என்.ஏ பெருமாள் ஆகியோர் எடுத்த புகைப்படங்கள்   30-6-2011 வியாழன் மாலை 5.00 யானை டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி நினைவுச்சொற்பொழிவு ஆற்றுபவர்  காட்டியலாளர் டாக்டர் எம் கலைவாணன் [முதுமலை காட்டியல் பூங்கா] மாலை  600 மா. கிருஷ்ணன் நினைவுச்சொற்பொழிவு ஆற்றுபவர் டி.என்.ஏ.பெருமாள்   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16874

எஸ்ராவுக்கு கண்ணதாசன் விருது

கோவை கண்ணதாசன் கழகம் அளிக்கும் இலக்கிய விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அளிக்கப்படுகிறது. ரூ 50000மும் பாராட்டுப்பத்திரமும் கொண்டது இவ்விருது. 26.06.2011 ஞாயிறு அன்று விழா கோவையில் நிகழ்கிறது. ஏற்கனவே நாஞ்சில்நாடன் இவ்விருதைப் பெற்றிருக்கிறார் எஸ்.ராவுக்கு வாழ்த்துக்கள் கண்ணதாசன் விருதுகள் 2010

Permanent link to this article: https://www.jeyamohan.in/16861

‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்

உங்களைப்   பாராட்டப் போவதில்லை, இந்த ஊரையும், சபையையும், இக்கூட்டத்தை நடத்துபவர்களையும் போற்றப் போவதில்லை. பேசும் அனைவரும் மாறி மாறிப் பட்டங்கள் கொடுத்துப் பரஸ்பரம்  புகழ் மாலைகளை   சூட்டிக் கொள்ளப் போவதில்லை.  சம்பந்தமற்ற நகைச்சுவைத் துணுக்குகளை இடை இடையே சொல்லிக் கரகோஷம் பெற முயலப் போவதில்லை. இது ஒரு சமூக மருத்துவப் பரிசோதனை அறிக்கை. பொது வாழ்விலும் நமது தனி வாழ்விலும் தேய்ந்து கொண்டே சென்று கடைசியில் இல்லாமல் ஆகப்போகும் ‘நேர்மை’ என்ற மரணப் படுக்கையில் உள்ள பதத்தைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16846

யானை டாக்டர்

அன்புள்ள ஜெயமோகன், ‘யானை டாக்டர்‘ கதை, டாக்டரை அறிந்து நேரில் பழகிய  நண்பர்கள்  ஜெயராமையும், பெருமாள் சாரையும் (T.N.A.Perumal) நெகிழ்வடையச் செய்துவிட்டது. தன்னமலற்ற சேவை புரிந்த டாக்டரை வெளியுலகுக்குச் சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ள கதை. பெருமாள் சார், அவருடைய மனமார்ந்த வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார். அவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் சில விவரங்கள்: ஐ.ஜி (இன்ஸ்பெக்டர் ஜெனரல்) என்றழைக்கப்பட்ட யானை பற்றி டாகடர் அடிக்கடி சொல்லியிருக்கிறார். யானைகள் முகாமில் சிகிச்சைக்கு வராமல் அடம் பிடிக்கும் யானைகளைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16806

Older posts «

» Newer posts