Tag Archive: அறிவிப்பு

வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா – 2014

  வெண்முரசு நூல்கள் மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது. இதுகுறித்த மேலதிக தகவல்களும், விரிவான நிகழ்ச்சி நிரலும் விரைவில் வெளியிடப்படும். தேதி : நவம்பர் 9, 2014, ஞாயிற்றுக்கிழமை. இடம் : சென்னை ம்யூசியம் தியேட்டர் அரங்கம் நேரம் : மாலை 5 மணி தொடர்புக்கு:  பாலா: +91 9842608169 வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/63987

நாளை நெல்லையில்

நாலை [19-10-2014] அன்று நெல்லையில் தி இந்து [தமிழ்] ஓராண்டு நிறைவுவிழாவில் பேசுகிறேன். இடம் பிரான்ஸிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி வடக்கு பைபாஸ் சாலை வண்ணாட்பேட்டை நெல்லை நேரம் காலை 930 மணி

Permanent link to this article: https://www.jeyamohan.in/63873

நாளை மதுரையில் : பெளத்தத்தின் இன்றைய தேவை உரையரங்கம்

நாளை மதுரையில் பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் நடத்தும் பெளத்தத்தின் இன்றைய தேவை உரையரங்கத்தில் கலந்துகொள்கிறேன் . அனைவரும் கலந்துகொள்ளும் பொது நிகழ்வு ,   பெளத்தத்தின் இன்றைய தேவை : உரையரங்கம் நாள் : 18/10/2014 காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை . இடம் : இறையியல் கல்லூரி , அரசடி , மதுரை   எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் , முனைவர் ஞான அலாய்சிஸ் , பேராசிரியர் லூர்துநாதன் ஆகியோருடன் ஜெயமோகனும் கலந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63866

ஒரு தனிப்பட்ட விண்ணப்பம்

வானவன் மாதேவி இயலிசை வல்லபி சகோதரிகளைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். என் வாசகர்களுக்கு பரவலாக அறிமுகமான பெயர். மரபணுச்சிக்கலால் விளைந்த குணப்படுத்த முடியாத தசைச்சுருக்க நோயால் [ Muscular Dystrophy] பாதிக்கப்பட்டவர்கள் இருவரும். கடுமையான வலியுடன் போராடி விரைவாக முற்றிவரும் நோயுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் ஆனால் ஒருபோதும் தளராத ஊக்கமும் தணியாத வாசிப்பார்வமும் கொண்டவர்கள். அவர்களுக்கிணையான வாசகர்களை நான் குறைவாகவே கண்டிருக்கிறேன். தங்கள்நோயையும் வலியையும் சகமனிதர்களுக்குச் சேவைசெய்வதற்கான முகாந்திரமாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சென்ற சில வருடங்களாக அவர்கள் தனிச்சிறப்புக் கவனத்தைக் கோரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63344

வண்ணக்கடல் எதிர்வினைகள் அனைத்தும்

வண்ணக்கடல் இம்மாதம் நூலாக வெளிவரவிருக்கிறது. படங்களை அச்செடுப்பதில் தாமதமாகிறது. அதற்கான தொழில்நுட்பச் சிக்கல்கள். வாசகர்களில் சிலர் வண்ணக்கடலை இப்போதுதான் வாசிக்கிறார்கள். அவர்களுக்காக வண்ணக்கடல் பற்றி வந்த கருத்துக்களின் ஒரு தொகுப்பு வண்ணக்கடல் எதிர்வினைகள் அனைத்தும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/63537

ராமநாதபுரத்தில்

ராமநாதபுரத்தில் இவ்வருடத்தைய புத்தகக் கண்காட்சி வரும் செப்டெம்பர் 28 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. அன்று நான் கலந்துகொண்டு உரையாற்றுகிறேன். இடம் இராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், மதுரை ரோடு இராமநாதபுரம். 27 ஆம்தேதி மாலை ராமநாதபுரம் வருவதாக எண்ணியிருக்கிறேன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/62240

சிறுகதை பயிற்சி பட்டறை

நண்பர்களே, எதிர்வரும் 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் திருவண்ணாமலையில் உள்ள எழுத்தாளர் பவா செல்லத்துரையின் தோட்டத்தில் சிறுகதை பயிற்சி பட்டறை ஒன்றை நடத்தவிருக்கிறோம். தமிழ் ஸ்டுடியோவும், வம்சி பதிப்பகமும் இணைந்து இந்த சிறுகதை பயிற்சி பட்டறையை நடத்தவிருக்கிறது. சிறுகதை எழுதுவதில் உள்ள நுட்பங்கள், சிறுகதைகளை அணுகும் விதம் என இந்த பயிற்சி பட்டறை முழுவதும் உங்கள் எழுத்து கூர்த்தீட்டப்படவிருக்கிறது. இந்த பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொண்டு பயிற்சியளிக்கவிருக்கும் எழுத்தாளர்கள்: எழுத்தாளர் பிரபஞ்சன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61388

வண்ணக்கடல் வாசிப்பரங்கம்

நண்பர்களே, முன்பு நடந்த காரைக்குடி விஷ்ணுபுரம் முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. அதுவரை அறியப் படதாத வாசிப்புகள் புலனாயின. விஷ்ணுபுரத்தை மேலும் நெருங்குவதற்கு அது உதவிகரமாக அமைந்தது . அதே போல 2 நாட்கள் முகாம் ஒன்றை வண்ணக்கடலுக்கு நடத்துவது அவசியம் என எண்ணுகிறோம் , கோவை அருகே உள்ள அட்டப்பாடி “சத் தர்சன்” அமைதிப் பள்ளத்தாக்கில் சிறுவாணி நதிக்கரையில் ஒரு வனத்தில் அழகிய விருந்தினர் இல்லம் ஒன்றில் 2014 செப்டம்பர் 13,14 சனி ஞாயிறு ஆகிய தேதிகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60361

இமயம் நோக்கி மீண்டும்…

மழைப்பாடல் எழுதிக்கொண்டிருந்தபோது ஆரம்பித்த எண்ணம். அர்ஜுனன் பிறந்ததாகச் சொல்லப்படும் புஷ்பவதியின் சமவெளிக்குச் செல்லவேண்டும் என்று. உடனே, இக்கணமே, கிளம்பிவிடவேண்டும் என மனம் எழுச்சிகொண்டது. ஆனால் உடனே செல்லமுடியாது. ஜூலை ஆகஸ்ட் மாதங்களில்தான் அச்சமவெளிக்குச் செல்லமுடியும். அரங்கசாமிதான் துடிதுடித்தார். உடனே விமானப்பயணச்சீட்டு போட்டோம். ஆனால் இந்த ஜூலையில் பருவமழை தள்ளிவந்து இப்போது உக்கிரமாகப் பெய்துகொண்டிருக்கிறது. உத்தரகண்டின் பல இடங்கள் மூடப்பட்டுவிட்டன. பல இடங்களில் பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. ஆகவே புஷ்பவதிக்கரை உட்பட நாங்கள் திட்டமிட்ட இடங்களுக்குச் செல்லமுடியவில்லை. ஆனால் பயணத்துக்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58173

டொமினிக் ஜீவாவுக்கு இயல்

கனடா இலக்கியத்தோட்டம் அமைப்பின் ‘இயல்’ விருது தமிழின் முதன்மைச்சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது, 2013 ஆம் வருடத்திற்கான சிறப்பு இயல்விருது இலங்கையின் மூத்த படைப்பாளியும் சிற்றிதழாளருமான டொமினிக் ஜீவாவுக்கு வழங்கப்படுகிறது இதுவரை இவ்விருதுகள் சுந்தரராமசாமி,வெங்கட்சாமிநாதன், கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.ராமகிருஷ்ணன், அம்பை, நாஞ்சில்நாடன், தியோடர் பாஸ்கரன் ஆகிய தமிழ்ப்படைப்பாளிகளுக்கும் கனகரட்னா, பத்மநாபாய்யர்,தாஸீயஸ், கெ.கணேஷ், எஸ்.பொன்னுத்துரை போன்ற ஈழப்படைப்பாளிகளுக்கும் லக்‌ஷ்மி ஆம்ஸ்ட்ரம், ஜார்ஜ் எல் ஹார்ட் போன்ற மேலைநாட்டினருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. கனடா தமிழ் இலக்கியத்தோட்டமும் டொரொண்டோ பல்கலைக்கழகமும் இணைந்து இவ்விருதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58024

Older posts «

» Newer posts