Tag Archive: அறிவிப்பு

கனடா – அமெரிக்கா பயணம்

இயல் விருது பெறுவதற்காக நான் வரும் ஜூன் 10 அன்று கனடா கிளம்புகிறேன். 11 டொரெண்டோவில். 13 அன்று இயல்விழா. இருபத்தைந்து வரை கனடா. அங்கிருந்து சிக்காகோவில் சிவா சக்திவேல் அவர்களின் வீடு. [எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாளின் மகள்] அங்கிருந்து பாஸ்டன் பாலாவின் இல்லம். அங்கிருந்து வாஷிங்டன் டிசி. கடைசியாக ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா. ஜூலை 25 அன்று திரும்புகிறேன். அருண்மொழியும் உடன்வருகிறாள்.இரு நாடுகளுக்கும் விசா வாங்கிவிட்டோம்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/75074

பிரயாகை முன்பதிவு- கிழக்கு அறிவிப்பு

பிரயாகை (செம்பதிப்பு) முன்பதிவு செய்ய விரும்புகிறவர்கள் http://www.jeyamohan.in/71471 என்ற சுட்டியில் சென்று பார்க்கவும். இந்த செம்பதிப்பில் ஜெயமோகனின் கையெழுத்து வேண்டுமென்றால், ஆர்டர் செய்யும்போதே அதைத் தெரிவிக்கவும். * ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள், Customer Notes என்னும் இடத்தில் உங்கள் விருப்பத்தையும், எந்த பெயர் புத்தகத்தில் வரவேண்டுமோ அதையும் குறிப்பிடவும். அதைக் குறிப்பிட்டு ஜெயமோகன் கையெழுத்திடுவார். * போனிலோ மற்ற வழிகளிலோ ஆர்டர் செய்பவர்கள் உங்களைத் தொடர்புகொள்ளும் கிழக்கு பதிப்பகத்தின் பணியாளர்களிடம் இதனைத் தெரிவிக்கவும். * உங்கள் பதிவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71495

கோவையில் பூமணி

கோவையில் விஜயா பதிப்பகம் சார்பில் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணிக்கான பாராட்டுவிழா,வரும் பிப்.8 அன்று காலை 10மணிக்கு நிகழவிருக்கிறது நாள் 8-02-15 இடம் பூசாகோ பொறியியல் கல்லூரி அரங்கம் பீளமேடு நேரம் காலை 10 மணி நாஞ்சில்நாடன்,நல்ல.வி பழனிச்சாமி, சு.துரை, சோ.தருமன், கவிஞர் அறிவன், செல்வேந்திரன் ஆகியோருடன் நானும் பேசுகிறேன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/70713

ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது

நண்பர்களே 2014 ஆம் வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் 28 ஞாயிறு அன்று கோவை நானி கலையரங்கு – மணி மேல்நிலைப்பள்ளியில் மாலை 5.30 க்கு விழா நிகழும். 27 சனிக்கிழமை முதல் கருத்தரங்குகள், சந்திப்புகள் என ஏற்பாடு செய்ய ஆலோசித்து வருகிறோம் .இடம் பங்கேற்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் கசடதபற இதழ்மூலம் நவீன இலக்கியத்திற்குள் ஆழமாக காலூன்றிய ஞானக்கூத்தன் தமிழ்த்தேசிய நோக்குள்ளவர். மபொசியின் நண்பர். தமிழரசுக்கழகத்தில் உறுப்பினராக இருந்து தமிழக எல்லைப்போராட்டங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65693

வெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு

வெண்முரசு விழாவின் நேரடி இணைய ஒளிபரப்பு பற்றி அறிவித்திருந்தோம். ஆனால் நிகழ்ச்சியை விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவிருப்பதனால் வேறுவகை ஒளிபரப்புகள் நடத்த முடியாத நிலை. விஜய்டிவியில் சிலநாட்களில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/65384

வெண்முரசு நீலம் ஓவியங்கள்

நீலம் ஓவியங்கள் அடங்கிய காலண்டர் வெளியாகியிருக்கிறது. வெண்முரசு விழா அரங்கில் நற்றிணை பதிப்பகத்திடம் கிடைக்கும் ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/65337

ஒரு சந்திப்பு

ஒரு திடீர் சந்திப்பு. வெண்முரசு விழாவுக்காக வெளியூரில் இருந்து வந்த நண்பர்களுடன் ஒரு சின்ன சந்திப்பு, இந்த விலாசத்தில். ஓய்விருப்பவர்கள் வரலாம் Bala, I-21, Chaithanya nest, 9 A, Rathna Nagar main road, Off: cenotaph road, Teynampet, Chennai – 600018

Permanent link to this article: https://www.jeyamohan.in/65366

வெண்முரசு நூல்கள் விழாவில்

நண்பர்களுக்கு, வெண்முரசு நூல் அறிமுக விழா வரும் 9- 11-2014 அன்று சென்னை எழும்பூர் மியூசியம் அரங்கில் நிகழவிருக்கிறது. நிகழ்ச்சியில் வெண்முரசு நூல்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நாவல்கள் விற்பனைக்குக் கிடைக்கும். முதற்கனல் 290 ரூபாய் விலை மழைப்பாடல் ரூ 840 வண்ணக்கடல் ரூ 800 நீலம் ரூ 500 இவற்றில் முதற்கனல் தவிர்த்த பிற நூல்களில் செம்பதிப்புகள் குறைந்த பிரதிகள் உள்ளன. அவை நற்றிணை பதிப்பகம் யுகனிடம் கிடைக்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65247

வெண்முரசு விழா இணையத்தில்

வெண்முரசு வெளியீட்டு விழா இணையத்தில் நேரடி ஒளிபரப்பு நவம்பர் 9, ஞாயிறு இந்திய நேரம் மாலை 5 மணி முதல் 9 மணி வரைக்கும் நடக்கவிருக்கும் வெண்முரசு நாவல் வெளியீட்டு விழா இணையத்தில் நேரடியாய் ஒளிபரப்பப்படவிருக்கிறது. உலகமெங்கும் உள்ள நண்பர்கள் நிகழ்வை கண்டு மகிழ இது வகை செய்யும். உங்கள் இணைய இணைப்பும் கணினி அல்லது பிற இணைய தொழில் நுட்பசாதனங்கள் யூ டியூப் போன்ற அசைபட தளங்களில் படம் பார்க்கும் வகையில் இருந்தால் போதுமானது. தமிழின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64710

சென்னையில் வெண்முரசு விழா

வெண்முரசு நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் அறிமுகம்- வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது. நமது காலப் பெரும் இலக்கிய ஆளுமைகள் அசோகமித்திரன், பி.ஏ.கிருஷ்னன் பிரபஞ்சன், நாஞ்சில்நாடன் மற்றும் திரைத் துறைச் சாதனையாளர்கள் கமல்ஹாசன், இளையராஜா முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். விழாவின் முதன்மையான சிறப்பம்சம் தொன்றுதொட்டு மகாபாரதக் கதையை நிகழ்த்துகலையாக நட்த்தி வரும் ஐந்து மூத்த மகாபாரதப் பிரசங்கியார்களை கௌரவித்தல். விழாவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64504

Older posts «