Tag Archive: அறம்

மனப்பாடம்

அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா?சமீபத்தில் புகழ்பெற்ற இலக்கியப்பேச்சாளர் ஒருவரின் சொற்பொழிவை கேட்டேன்.மடைதிறந்த வெள்ளமென பாடல்களை கொட்டினார்.தங்கு தடையற்ற வார்த்தைகள்.அதற்கு தகுந்த பாடல் மேற்கோள்கள்.இவ்வளவு பாடல்களையும் மனனம் செய்ய அவருக்கு எத்தனை காலம் ஆகியிருக்கும்.இதற்கு எவ்வளவு மெனக்கிடல்.அப்படியே படித்தாலும் அதை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல்… இப்படி பாடல்களையும்,மேற்கோள்களையும் நினைவில் வைத்திருக்க தனி ஆற்றல் வேண்டுமா?தெரிந்தாலும் அதனை சபையில் தடையின்றி எடுத்துச்சொல்லும் தனித்திறன் எது? ஏன் இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை?நானும் பேச்சாளன் என்கிற முறையில் உங்களின் கருத்து மதிப்புவாய்ந்ததென கருதுகிறேன்! அன்புடன், எம்.எஸ்.ராஜேந்திரன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70835

முத்தம்

முத்தப்போராட்டம் பற்றி பல கேள்விகள் வந்தன. பொதுவான என் எண்ணங்களைச் சொல்லலாம் என நினைக்கிறேன். இவ்விஷயம் போதிய அளவு ஆறிவிட்டது என்பதனால் வம்பாக ஆகாமல் கொஞ்சம் சமநிலையுடன் பேச இப்போது முடியலாம் பொதுவாக பாலியல் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள் எல்லாம் ஒவ்வொரு தலைமுறைக்கும் மாறிக்கொண்டிருக்கும். அவை மாறாதவை, அழியாதவை என எண்ணுவதைப்போல பேதமை ஏதும் இல்லை. ஐயமிருந்தால் சற்று பின்னால் சென்று நோக்கினால் போதும். இதே தமிழ்நாட்டில் பெண்கள் பள்ளிக்குச் செல்வது விபச்சாரத்துக்கு நிகர் என்று பேசப்பட்டிருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67062

தாயார் பாதமும் அறமும்

அன்புள்ள ஜெயமோகன் சார், சமீபத்தில் தங்கள் அறம் சிறுகதை தொகுப்பு வாசித்தேன். எல்லா கதைகளும் மனதை நெகிழச்செய்தன.அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் படித்தேன். அதில் பலமுறை வாசித்த கதை தாயார் பாதம். அந்த தொகுப்பிலேயே என்னை மிகவும் ஈர்த்த கதை அதுதான் என நினைக்கிறேன். It was not a straightforward story, but how can it be anything else? ராமனின் கதாபாத்திரம் அவ்வளவு gentle, hesitant, அவன் சுமந்த வடுக்கள் அவ்வளவு ஆழமாக பதிந்தவை, வேறெப்படி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66539

அறம் தீண்டும் கரங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். கடந்த கும்பமேளாவிற்கு கிளம்பும் முன் என்னிடம் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் மூன்று டிராவல் பேக்குகளில் அடைத்து எனது நெருங்கிய நண்பனுக்கு அவன் வீட்டில் சென்று அளித்துவிட்டு கிளம்பினேன். தனியாக கிளம்பினேன் எந்த முன் பயண திட்டமும் இல்லாமல். இரண்டு மாத திட்டம் திரும்பிவர மூன்று மாதங்களானது. நண்பன் அதிகம் வாசிப்பு பழக்கம் இல்லாதவன். தங்கள் தளத்தைப் பற்றியும் எழுத்துக்களைப் பற்றியும் அதிகம் பேசுவேன். நான் அளித்த புத்தகங்களில் உங்களின் புத்தகங்கள் நாவல்கள் அனைத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66519

துணை இணையதளங்கள்

விஷ்ணுபுரம் இணையதளம் [விஷ்ணுபுரம் சம்பந்தமான அனைத்துக்கட்டுரைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. நாவலை புரிந்துகொள்வதற்கான பிற கட்டுரைகளும் உண்டு] வெண்முரசு விவாதங்கள் இணையதளம் கொற்றவை விவாதங்கள் இணையதளம் பின் தொடரும் நிழலின் குரல் இணையதளம் பனிமனிதன் இணையதளம் காடு இணையதளம் ஏழாம் உலகம் இணையதளம் அறம் இணையதளம் வெள்ளையானை இணையதளம் இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணையதளம் நண்பர்களால் நடத்தப்படுகிறது. விஷ்ணுபுர நண்பர்களால் இரு இணையதளங்கள் நடத்தப்படுகின்றன. காந்தி இன்று இணையதளம் நண்பர் சுநீல் கிருஷ்ணனால் தொடங்கப்பட்டு அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63054

அறத்தான்

அன்பான ஜெயமோகன் ”கருணையுள்ள அறம் என ஒன்றில்லை.” இந்த வரிகளை மீறிச் செல்லாமல் நின்று விட்டது மனம். அன்பு, கருணை, நம்பிக்கை, காதல் என வெறும் பேச்சுப் பேசி வாழ்வதில் இருந்து அறம் கொண்டு வாழ்வதற்கு, அதை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளில் தோற்றுப் போகிற சிறியதிலும் சிறியதான வாழ்க்கை. பழி பாவம், முற்பிறப்பு, கர்மவினை என்று செயல்களை நியாயப் படுத்துவது கடந்து அறம் கொண்டு மட்டும் வாழ முடியுமா என்று ஏங்கிப் போகிறது நெஞ்சம். ரவிச்சந்திரிகா அன்புள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62756

அறம் – சிக்கந்தர்

அன்புள்ள ஜெ. வணக்கம். சமீபத்தில் தங்களின் அறம் தொகுப்பை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். கிட்டதட்ட எல்லா கதைகளையும் கண்களில் தேங்கிய நீருடன்தான் வாசிக்க முடிந்தது. ஒரு கதை முடிந்து அடுத்த கதையை உடனடியாக வாசிக்க முடியாது வாசித்த கதை தந்த துயரத்தில்/அதிர்வில்/இன்னும் சொல்ல தெரியாத காரணங்களால் புத்தகத்தை மூடி வைத்து வெறுமனே பார்த்துகொண்டிருப்பேன். இந்த கதையில் மனவெழுச்சி எழுப்பும் எல்லா மனிதர்களிடமும் ஆதாராமான நீதி இருந்தது. இப்படியான மனிதர்கள் அருகி வருகிறார்கள் என்பதே நிதர்சனம் என்று நினைக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/55360

கற்பு என்பது…

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, என் பெயர் கண்ணன். ஓரளவுக்கு உங்கள் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். ‘கற்பு’ என்னும் வார்த்தையைக் குறித்துத் தற்செயலாக யோசித்துக் கொண்டிருந்தேன். யோசிக்க யோசிக்க அது ரொம்ப மர்மமான வார்த்தையாகப் படுகிறது. கொஞ்சம் மேலோட்டமாகப் பொருள் கூறினால், ஒழுக்கமாக இருந்து வரும் ஒரு பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசியோ அல்லது வேறேதும் செய்து மயக்கியோ ஒருவன் அவளை அடைவானாயின் அது கற்பழிப்பாகலாம். உடனடியாக நினைவுக்கு வருவது ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு கதையில் வரும் சித்தாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35556

அறம் கடிதங்கள்

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு ஜாக்கிசேகர் எழுதிக்கொள்வது வணக்கம்… வாழிய நலம். தங்களின் அறம் சிறுகதைகளில் சோற்றுக்கணக்கு கதையை சில நாட்களுக்கு முன் வாசித்தேன்… கடைசி பாராவுக்கு வரும் போது கண்கள் ஒரு மாதிரி கலங்கியது.. கட்டுப்படுத்தியும் கண்ணீரை அடக்க முடியவில்லை… வாசித்து முடித்தவுடன் உங்களுக்கு கடிதம் எழுத தோன்றியது… உடனே எழுத கை பறபரத்தது.. ஆனாலும் அந்த ஆர்வத்தை கட்டுப்படுத்திக்கொண்டேன்….. ஜாக்கி சேகர் கடிதம் அன்புள்ள ஜாக்கி சேகர் அவர்களுக்கு, நன்றி. உணர்வுபூர்வமாக எழுதியிருந்தீர்கள். இலக்கியத்துடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/54752

அறம் ஒரு கடிதம்

அன்புள்ளஜெயமோகன், வணக்கம்.நான் மூர்த்தி.ஜெயமோகன் என்றால் எனக்குள் வேறு ஒரு படிமம் இருந்தது. வலைதளத்தில் நிறைய விமர்சிக்கப்படும், மற்ற எழுத்தாளர்களை வசைபாடும், ஒரு மனிதன் என்று. நான் ஒதுங்கியே இருந்தேன்.உங்களின் எழுத்துக்களின் வாசிப்பும் எனக்கு இருந்ததில்லை. இந்த நிலையில் எங்கள் நாடகக் குழுவில் இருக்கும் நண்பன் ஜெ.வெங்கட்ஸார் அறம் வாங்கிப் படிச்சிண்டு இருக்கேன். என்னவோ பண்றது ஸார் படிங்கோ. என்றான். கொடுத்தான் படித்தேன். இது விமர்சனம் இல்லை.எழுத நீங்கள் ஒரு இடைவெளி இல்லாக் காலம் தேர்ந்தெடுத்தது போல நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40842

Older posts «

» Newer posts