Tag Archive: அறம் சிறுகதை

அறம் – சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள்

ஜெயமோகன் எழுதிய அறம் – சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துவிட்டது ,   400 பக்கங்கள் , விலை.ரூ.250 , ISBN – 978-93-80545-42-4 வெளியீடு : வம்சி பதிப்பகம் – திருவண்ணாமலை – 94448 67023 , 04175 251468 கிடைக்குமிடங்கள் (கடைகளின் முகவரி கீழே இணைக்கப்பட்டுள்ளது) இணையம் வழி வாங்க உடுமலை http://udumalai.com/?prd=aram&page=products&id=10294 கிழக்கு https://www.nhm.in/shop/100-00-0000-190-9.html Dial For Books (தொலைபேசி வழியாக வாங்கலாம் , விபிபி வசதி)+91-94459 01234 , +91-9445 97 97 97 சென்னை – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22295/

அறம்,சோற்றுக்கணக்கு-கடிதங்கள்

அன்புள்ள ஜெ , உங்கள் சோற்றுக்கணக்கு என்னை மிகவும் பாதித்தது , எனக்கு என் ஆசிரியர் ஸ்ரீனிவாசனை கேத்தல் சாஹிப் நினைவு படுத்தினார் . அவரை நாங்கள் R.S.V (R Srinivaasan) என்று அழைப்போம் . ஸ்ரீரங்கத்தில் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் ஒய்வு பெற்ற கணித ஆசிரியர் . அவருடன் இருந்த நாட்கள் ஒரு குருகுல அனுபவம் தான் . ஒரு பைசா வாங்காமல் நாற்பது ஆண்டு களம் கணிதம் சொல்லி கொடுத்தார் . 20 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12276/

அறம்,சோற்றுக்கணக்கு-கடிதங்கள்

அன்பின் ஜெயன், இதுவரை உங்களுக்கு எழுதியதில்லை. இப்பொழுதும் வேறு வார்த்தையின்றி இருக்கிறேன். சோற்றுக் கணக்கை முழுவதுமாக செரித்தப் பின்னரே நான் ஏதேனும் எழுதக் கூடும். முழுக்க மது அருந்தியவனின் துக்கம் போல வெறுமனே வார்த்தைகள் முட்டி மோதுகின்றன. நிதின். அன்புள்ள நிதின், நன்றி. நல்ல கதை உணர்வுகளில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். நெடுநாட்களாக தமிழில் நாம் அதை விட்டுவிட்டோம் . இந்தக்கதைகள் அதை தொடங்கிவைத்தால் நல்லது உங்கள் மின்னஞ்சல் பெயர் வேடிக்கையாக இருக்கிறது ‘அதுசரி’. இதுவரை இப்படி கேள்விப்பட்டதில்லை.. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12207/

அறம்,சோற்றுக்கணக்கு- மேலும் கடிதங்கள்

அறம்: சென்னையில் பணிபுரிந்த காலத்தில் எனது சம்பளம் 4000 ரூபாய். முதல் வேலையாதலால் அவ்வளவுதான் தந்தார்கள். ரூம் வாடகையே 1200 ரூபாய். இத்தனைக்கும் பொது குளியல்-கழிப்பறைகள் தான். அலுவலகத்தில் என்னை நிறுவிக்கொள்ளவேணும் தினமும் 18 மணி நேரம் உழைக்கவேண்டியதாக இருக்கும். இரவில் ரூம் திரும்ப 11 மணிக்கு மேலாகிவிடும். திருவல்லிக்கேணி ரோட்டுக்கடையில் ஒரு தள்ளுவண்டியில் அயோத்திக் குப்பத்தைச்சேர்ந்த ஒரு அக்கா இட்லி, தோசை விற்பார்கள். துணைக்கு அவரது கணவனும் நின்று வேலைகள் பார்ப்பார். அவரிடம் தான் தினமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12121/

அறம்,சோற்றுக்கணக்கு-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இது நான் எழுதும் முதல் கடிதம். கெத்தேல் சாகிப்பை பற்றிய கதையை படித்துவிட்டு கண்ணீர் சிந்தினேன். ஏனென்றால் எனக்கு கெத்தேல்சாகிப்பை தெரியும். அவர் கையால் நானும் மூன்றுவருடம் வயிறார உண்டிருக்கிறேன். நானும் திருவனந்தபுரத்திலே மாணவனாக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோதுதான் அவரது ஓட்டலிலே சாப்பிட்டேன். அவர் மனமார அள்ளி அள்ளி வைப்பார். அவரது கறிசோறின் ருசிக்கு காரணம் என்ன என்று இந்தக்கதை வாசித்தபோதுதான் தெரிந்தது. சாகிப் கணக்கே பார்ப்பதில்லை. நம்முடைய பசி மட்டும்தான் அவருக்கு கணக்கு. அவர் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12112/

அறம், மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ.மோ. வணக்கம். அறம் சிறுகதை அற்புதம். உள்ளத்தை உருக்கிய ‘உண்மைக்’ கதை. ”அறத்தை நாம் காக்க அறம் நம்மைக் காக்கும்” என்றும், ”அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்றும் படித்து நினைவில் வந்தது. பெரும்பாலான பதிப்பகங்கள் எழுத்தாளர்களைச் சுரண்டித் தான் வாழ்கின்றன. இதை சுட்டிக்காட்டவும் துணிவின்றி எழுத்தாளர்கள் இருந்துவரும் நிலையில், சிறுகதை வாயிலாக அவர்களுக்கு நீங்கள் எச்சரிக்கை செய்திருப்பதாகவே கருதுகிறேன். இக்கதையில் நீங்களும் ஒரு பாத்திரமாக உலவி இருப்பது கதையின் உண்மைத்தன்மையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12093/

அறம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், அறம் சிறுகதையை வாசித்தேன். நல்ல சிறுகதைகளே அருகி வரும் காலகட்டம். எந்த இதழில் எந்த சிறுகதையை வாசித்தாலும் ஏமாற்றமும் கோபமும்தான் வருகின்றது. சல்லித்தனமான எழுத்துக்கள். மரபு தெரியாமல், உலக இலக்கியமும் தெரியாமல்,மொழி தெரியாமல் எழுதுகிறார்கள். அதைவிட வாழ்க்கை தெரியாமல் எழுதுகிறார்கள். சின்னச்சின்ன தந்திரங்களும் வார்த்தைச் சிக்குக்களுமே இலக்கியமாக நினைக்கப்படுகிறது. ஒன்றுமே இல்லாமல் இந்தா வாழ்க்கை என்று ஒரு கைப்பிடி சதையையும் ரத்ததையும் அள்ளி வைத்தது போன்ற கதை. உண்மையில் மெய்சிலிர்த்துப்போனேன். நடந்ததா இல்லை நடந்ததாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12043/

அறம் [சிறுகதை]

வாசலில் நின்றிருந்தவர் ‘உள்ள வாங்கோ…இருக்கார்’ என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘வணக்கம்’ என்றபடி செருப்பை கழட்டினேன். அவர் செருப்பை தன் கையில் எடுத்துக்கொண்டார். ’வெளியே போட்டா நாய் தூக்கிட்டு போய்டுது சார்… உள்ளே போங்கோ’ அகலமான கல் வேய்ந்த திண்ணைக்கு அப்பால் அங்கணத்தில் முன்மதிய வெயில் வெண்ணிற திரைச்சீலை தொங்கிக்கிடப்பது போல தெரிந்தது. பக்கவாட்டில் நீளமான திண்ணை போன்ற அறையில் தாழ்வான தூளிநாற்காலியில் பெரியவர் அமர்ந்திருந்தார். மடியில் பித்தளை வெற்றிலைச்செல்லத்தை வைத்துக்கொண்டு பாக்குவெட்டியால் கொட்டைப்பாக்கின் தோலைச் சீவிக்கொண்டிருந்தார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11976/