Tag Archive: அறம்

அறம் – வாசிப்பின் படிகளில்…

  எழுத்தாளர் அவர்களுக்கு வணக்கம்.   எனக்கு 35 வயது ஆகிறது, தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டென்றாலும் அது தொடர்ச்சியாக இருப்பதில்லை. நிறைய படித்தலும் ஆழ படித்தலும் குறைவே, மிக பெரும்பாலானவர்கள் போல சுயநல வாழ்வே வாழ்க்கை என்று இருக்கும் தமிழன்.அறம் படித்தபின் இனி நிறைய படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டு செய்தது. அறம் சிறுகதை தொகுப்பு என்னுள் மிக பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தியது.  இப்படியொரு படைப்பை தந்தமைக்கு என் நன்றிகள். அனைத்து கதைகளும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97689

அறம் -கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன் அய்யா, எனக்கு தங்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. பள்ளியில் எனது தமிழ் ஆசிரியரினை இவ்வாறு அழைத்தது உண்டு. நான் உங்களின் அறம் எனும் புத்தகத்தினை படிக்க நேர்ந்தது. எனக்கு அதிகமாக தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இல்லை. சிறு வயது முதலே ஆங்கில புத்தகங்கள் படிப்பது வழக்கமானது. அம்மாவும் அப்பாவும் நிறைய தமிழ் புத்தங்கள் வாசிப்பார்கள். கல்கி,சாண்டில்யன்,சுஜாதா, இந்திரா சௌந்தரராஜன் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் எப்பொழுதும் வீட்டில் இறைந்து கிடைக்கும். நான் சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97285

பின் தொடரும் நிழலின் குரல் – அறம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வெகுசமீபமாக தங்களின் பின் தொடரும் நிழலின் குரல் நாவலை வாசித்தேன். உங்கள் படைப்புகளில் நான் வாசிக்கும் இரண்டாவது படைப்பு இது. முதலாவதாக நான் வாசித்த அறம் என்னுள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியதோ அதற்கு சற்றும் குறையாத பாதிப்புடனே பின் தொடரும் நிழலின் குரலையும் வாசித்து முடித்தேன். என்னளவில் ஒரு சிறந்த நாவல்\சிறுகதை\கதை என்பது முழுகவனம் செழுத்தி வாசிக்க விடாமல் வாசிக்கும் வரியை பற்றிய சிந்தனை உலகில் ஏகியவாறும், அதே நேரம் அடுத்த வரியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87590

அறம் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய அறம் படித்து முடிந்து பிறகு ஒவ்வொரு ஆளுமைகள் ஏதோ எண்ணகளுக்கு உட்படுத்தினர் உங்கள் எழுத்து நடை மிக அருமை. அடுத்து உங்கள் மகத்தான படைப்புகளான விஷ்ணுபுரம், ரப்பர் படிக்க அதிக அவா கொண்டு இருகிறேன் .. நீங்கள் நலமாக,  நல்ல படைப்புகளை கொடுக்க எனது வாழ்த்துகள். நன்றி இரா.பொற்செல்வன் அன்புள்ள ஜெ உங்கள் அறம் கதைகளை ஒரு நண்பர் எனக்கு அளித்தார். நான் முன்னரே உங்கள் பல கதைகளை படித்திருந்தாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87087

என்னை வாசிக்கத் தொடங்குதல்

  அன்புடன் ஜெ, நான் ஐரோப்பிய நாடுஒன்றில் வசிக்கும் இலங்கைத் தமிழன். எனது தந்தையார் உங்களது எழுத்துக்களை வாசிக்கும் ஒரு தீவிர வாசகராக இருந்த போதிலும் ,எனது நண்பர்களால் விதைக்கப்பட்ட விச விதையினால் நான் உங்களது எழுத்துக்களை வாசிக்கவில்லை. ஆனால் நாற்பது வயதைக்கடந்த பின்னால்தான் சிறிதுசிறிதாக உங்களது எழுத்துக்களை வாசிக்கத்தொடங்கி உள்ளேன். ஒவ்வொரு எழுத்துக்களும் எனக்குள்இருந்த,இருக்கிற சந்தேகங்களை தீர்ப்பது போல இருக்கிறது. அதனால் உங்களது நாவல்களைப் படிப்பது என்று இருக்கிறேன் .ஆனால் எதனை முதல்வாசிப்பது என்று யோசிக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80644

மண்ணாப்பேடி

பேரன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு உங்கள் வாசகன் சண்முகநாதன் எழுதிக்கொள்வது…. நான் கடந்த வாரம் நாகர்கோயில் வந்திருந்தேன்.நண்பர்களோடு மூன்று நாள் விடுமுறைக்காக ….  நாகர்கோயில் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வந்தோம்.. உங்கள் கதைகளில்  வரும் அனைத்து ஊர்களையும்  மற்றும் நீங்கள் வாழ்ந்து வளர்ந்த ஊர்களையும் பார்க்க மிகவும் இனிமையாக உணர்ந்தேன்.. குறிப்பாக “படுகை” யில் வரும் பேச்சிப்பாறை (படுகையில் வரும் “கான்வென்ட் குழந்தை காட்டில் வழி தெரியாமல் நிற்பதுபோல் குரோட்டன்ஸ் வளர்க்கப்பட்டிருந்தது” என்ற உவமை என்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20559

வாசிப்பு – இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், நீண்ட நாள்களுக்கு பின் எழுதுகிறேன், கடந்த 3-4 மாதங்களில் 3 புத்தகம் படித்துவிட்டேன், ஆனால் எது பற்றியும், கட்டுரை வடிவில் எழுதி தொகுத்துக்கொள்ள என்னால் இந்த நாட்களில் முடியவில்லை. பின் தொடரும் நிழலின் குரல் என்னை வெகுவாக பாதித்து மனதளைவில் ஒரு பெரிய சலனத்தையும், தீவிர அமைதியையும் ஒரு சேர அமைத்து விட்டது. என்னால் அதிலிருந்து உண்மையில் மீள முடியவில்லை. உங்களுக்கு ஒரு வாசிப்பனுபவ கடிதம் எழுதி அதையும் நிறுத்தி விட்டேன். ‘படிச்சாச்சு’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77875

தாயார்பாதம், அறம்- அஸ்வத்

அன்பு ஜெயமோகன், நலமா? அறம் தாயார் பாதம் மற்றும் யானை டாக்டர் கதைகளைப் படித்தேன். நல்ல கதைகள். தத்ரூபமாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தங்களுடைய எழுத்து வேலைச் சுமையிலும் குவியும் பாராட்டுகளிலும் என் போன்ற ஒரு வாசகனின் மடலைத் தாங்கள் பொருட்படுத்தக் கூடும் என்றால் ஆச்சர்யமே. தவிரவும் ஒரு நாளைக்கு ஆயிரம் மடல்கள் மின்னஞ்சல் பெட்டியில் வருவதென்றால் அதை நினைத்தாலே எனக்கு ஆற்றுப் போகிறது. இதில் எல்லாவற்றையும் படிப்பதற்கே பெரிய பிரயாசை தேவைப் படுகிறது. இதை உள்வாங்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76756

நான்கு வேடங்கள்

அன்புள்ள ஜெ , தேடல் கொண்டவனாக ஒரு கட்டத்தினை அடைந்து விட்டேன் .ஆனால் என் வேலை சார்ந்த தளத்தினை மிக சிக்கலாகி விட்டேன். இத்தனைக்கும் நான் பணி செய்த இடங்களில் மிகத் திறமை கொண்டவனாக அறியப்படுவேன் . இத்தனை ஆண்டுகள் கடந்தும் கூட நான் தொழில் வேலை சார்ந்து செல்ல முடியும் என்று கூட முடிவெடுக்க முடியவில்லை .என்னை கவனித்தவர் நீங்கள், நான் என்னை எப்படி வடிவமைத்துக் கொள்வது என்று நீங்கள் ஏதேனும் அறிவுரை வழங்க வேண்டுகிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28848

மின் தமிழ் பேட்டி 2

10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69818

Older posts «