Tag Archive: அருந்ததி ராய்

அண்ணா-கடிதங்கள்

அன்புள்ள திரு. ஜெயமோகன், கடந்த சில நாட்களில் அண்ணாவைப் பற்றிப் படித்த, கேட்ட விஷயங்களால் சற்றே மனக் கசப்புடன் எழுதுகிறேன். அண்ணாவைப் பற்றிய புகார்கள் வெறும் மதச்சார்பின்மையைப் பற்றியோ, ஜனநாயகம் பற்றியோ அல்ல. இந்தியர்களாக நாம் நம்மிடையே கட்டி வைத்த வேலிகள் அவை. பலரது விமர்சனக் கட்டுரைகளைப் படித்த பின் தோன்றியது – நமது ‘வழக்கமான குற்றவாளிகளை’, பழகி போன எரிச்சல்களை மீறி நம்மால் அண்ணாவைக் காண முடியவில்லை. – காங்கிரசுக்கு சந்தேகமே இல்லை இவற்றின் பின்னால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20050

அருந்ததி

ஜெ, அருந்ததி ராய் பற்றி நீங்கள் எழுதியவற்றுக்கான பதில்களைப் பார்த்தீர்கள் அல்லவா? நீங்கள் அருந்ததி கேட்கும் ஒரு கேள்விக்குக்கூட பதில்களை எழுதவில்லை என்கிறார்களே? ராம் ராம், அருந்ததி ஒரு உருப்படியான கேள்வியைக்கூடக் கேட்கவில்லை- எல்லாமே ஊகங்கள், அவதூறுகள். அண்ணா ஹசாரே ’புதிதாகக் கிளம்பி வந்தவர்’ என்று ஒரு தேசிய ஊடகத்தில் உளறும் அளவுக்கு அறியாமையில் திளைப்பவரின் பேச்சுக்களிடம் என்ன விவாதம்? நேற்று சி என் என் நிருபரின் செய்தி. இந்திய அறிவியக்கம் அண்ணாவுக்கு எதிராகக் கிளம்பிவிட்டதாம்.இந்தியாவின் ‘முன்னணி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20022

அண்ணா-எதிர்வினைகள்

“நாளையே விளம்பரத்துக்காக மட்டுமே பொதுவாழ்க்கையில் இருக்கும் அருந்ததி ராய் போன்றவர்களும் இப்படிக் கிளம்பக்கூடும்.” வந்து விட்டார்! இன்றைய இந்து நாளிதழில் அவரது ” நான் அன்னாவாக இல்லாமல் தான் இருப்பேன் ” என்ற கட்டுரையை யாராவது படித்தீர்களா..? அவர் கருத்து, ”அன்னாவின் வழிமுறைகள் வேண்டுமானால் காந்திய வழியிலிருக்கலாம். ஆனால் கோரிக்கைகள் கண்டிப்பாக அப்படி அல்ல ” அன்னாவின் போராட்டத்தை பல்வேறு வழிகளில் ஆய்வு செய்து எழுதப்பட்டு வரும் தொடர்கட்டுரைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது மேசையில் வந்து விழுந்தது பேப்பர். அருந்ததியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19963

மாவோயிசம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். கீழகண்ட பதிவு உங்களை குறித்த சரியான மதிப்பீடு என்று க‌ருதுகிறேன். எனவே தான் நானும் அதை மீள் பதிவு செய்துள்ளேன். இது குறித்த உங்கள் கருத்தை பொது வெளியில் வைப்பது தான் சரி அதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையெனில் எனக்கு தனி மடலில் தெரிவிக்கவும். அன்புடன் சூப்பர்லிங்ஸ் அன்புள்ள சூப்பர்லிங்க்ஸ், நான் சிலசமயம் ஆச்சரியப்படுவதுண்டு, சோவியத் ருஷ்யாவிலும் சீனாவிலும் எழுத்தாளர்கள் ஏன் சைபீரியாவுக்குப்போய் செத்தாலும் பரவாயில்லை என்ற நினைப்பில் கமிசார்களை எதிர்த்தார்கள் என்று. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11521

அலைவரிசை ஊழல், அருந்ததி ராய் -ஒருகடிதம்

அன்புள்ள ஜெயமோகனுக்கு நான் உங்களுடைய நீண்ட நாள் வாசகன். முதல் முறையாக மின்னஞ்சல் அனுப்புகிறேன். அலைவரிசை ஊழல் பற்றிய உங்கள் கட்டுரையும் மாவோயிசம் குறித்து வந்த மூன்று கடிதங்களுக்கு அளித்த எதிர்வினையும் மிக அருமை. அலைவரிசை ஊழல் கட்டுரையை படிக்க ஆரம்பிக்கும்போது என்னடா மனிதர் ஊழல் எல்லாம் இருக்க வேண்டிய விஷயம் தான் என்று சொல்ல வருகிறாரோ என்று தோன்றியது. ஆனால் அந்த கட்டுரை உங்கள் இணைய தளத்துக்கு வாசகர்கள் மீண்டும் மீண்டும் வருவதற்கான காரணங்களின் உதாரணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11167

அருந்ததி ராய்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், அருந்ததி ராய் பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். 2000த்தில் இண்டியன் எக்ஸ்பிரஸில் நீங்கள் இதையே எழுதியிருந்தீர்கள் என்று ஞாபகம். அப்போது நான் உங்களை சந்தித்திருக்கிறேன். இதைப்பற்றி பேசியும் இருக்கிறேன். அருந்ததி ராய் பற்றிய உங்கள் கடைசி வரி கொஞ்சம் அதீதமானது. அவரை ஐந்தாம்படை என்றெல்லாம் ஒரு கோபத்தில்தான் சொல்லியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். சமீபத்தில் ஊடகங்கள் அவரை ஏற்றி வைக்கும் உயரமும் அவர் அங்கே செய்யும் அரசியல் தந்திரங்களும் எல்லாரையும்தான் ஆத்திரபப்ட வைத்திருக்கின்றன. சமீபத்தில் நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10629

அருந்ததிராய்.. இணைப்புகள்

ஆர்.கெ.நாராயணன்,ஆங்கில இலக்கியம்:கடிதங்கள் எனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம் எனது இந்தியாவைப்பற்றி…. எனது இந்தியா:கடிதங்கள் போலிக்கறுப்பு எனது இந்தியா:கடிதங்கள் இந்தியா கடிதங்கள் ஆர்.கெ.நாராயணன்,ஆங்கில இலக்கியம்:கடிதங்கள் எனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம் News is the inspiration இண்டியன் எக்ஸ்பிரஸில் எழுதிய கட்டுரை அங்கதம் இந்திய இலக்கியம் ஒரு விவாதம் நூல்கள் இணைப்புகள் * சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’ விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’

Permanent link to this article: https://www.jeyamohan.in/10617

ஐஸ்வரியா ராயும், அருந்ததி ராயும்

ஐஸ்வர்யா ராயை நான் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அழகான பெண். அழகான பெண்கள் வழக்கமாக இருப்பதுபோல அல்லாமல் புத்திசாலியும்கூட. அவருடன் பேசும்போதெல்லாம் ‘இவர் உலக அழகி’ என்ற எண்ணம் வந்தபடியே இருந்தது. அல்லது இப்படி சொல்லலாம். ’உலகம் என்பதுதான் என்ன?’ என்ற எண்ணம். உலகில் எத்தனை கோடிப்பெண்கள். எத்தனைகோடி அழகிகள். எத்தனை லட்சம்பேரழகிகள். எத்தனை வண்ணங்கள் , வடிவங்கள். ஆனால் யாரோ நம்மிடம் சொல்லிவிட்டார்கள் இவர் உலக அழகி என்று. பலகோடி ரூபாய் செலவில் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10189

» Newer posts