Tag Archive: அருந்ததி ராய்

ஒரு சிறுகுருவி

  குருவி மண்டை என்று நான் அருந்ததி ராய் பற்றிச் சொன்னதற்கு முற்போக்காளர்கள் கோபித்துக்கொண்டர்கள். குருவிகள் கோபித்துக்கொண்டிருக்கலாம் என்பது என் எண்ணம். சாகரிகா கோஷை சிட்டுக்குருவிமண்டை என்று சொல்ல எனக்குத் தயக்கமில்லை. ஆண்டவன் இங்க் ஃபில்லரால் மூளையை தொட்டுச் சொட்டி வைத்திருப்பான்போல. இன்று இந்த படத்தை ஒருவர் அனுப்பியிருந்தார். சிரித்துப் புரைக்கேறிவிட்டது. மிகச்சரியாக அமைந்த சொல்லாட்சி அபூர்வமாகத்தான் வாசிக்கக் கிடைக்கிறது  

Permanent link to this article: https://www.jeyamohan.in/87142/

ராஜ்மோகன் காந்தி கடிதங்கள்

ஜெ.. அருந்ததி ராயின் நேர்மையின்மை நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. சுனீல் கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு மிக நன்றாக வந்திருக்கிறது. அதைவிடவும், அபாயகரமாகத் தோன்றுகிறது அஜித் தோவலின் பேச்சு. ஏனெனில், அவர் இன்றைய அரசை, அதன் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறார். அருந்ததி ராய், காசுக்காக எழுதியிருந்தாலும், அது ஒரு பிரச்சாரமாக இருக்கும். அதனால், ஏமாற்றப் படுபவர்கள் இருப்பார்கள். ஆனால், இவரின் குரல் அரசின் குரல். வரலாற்றை மாற்றி எழுதும் அதிகார பீடத்தில் இருந்து எழுப்பப்படுகிறது. இக்குரலுக்கான நமது எதிர்வினை என்னவாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78702/

ராயின் காந்தியும் உண்மையான காந்தியும்

அருந்ததி ராயின் அத்தனை அரசியல் கருத்துக்களையும் ஒற்றைவரியில் ‘முதிர்ச்சியற்ற, சமநிலையற்ற, தற்காலிகப்புகழைத்தேடும், உள்நோக்கம்கொண்ட எழுத்துக்கள்’ என சொல்லிவிடலாம். அவருக்குப்பின்னால் இருப்பது ஒரு சர்வதேச வலை. தன்னார்வக்குழுக்களாலும் இந்திய எதிர்ப்பு அமைப்புகளாலும் புரக்கப்படுவது அது அருந்ததி காந்தியைப்பற்றி எழுதிய ‘முனைவரும் புனிதரும்’ என்னும் கட்டுரை தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு இங்குள்ள இந்திய எதிர்ப்புத் தன்னார்வக்குழுக்களாலும் அரசியலமைப்புக்களாலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியான ஒரு வாரத்திற்குள் ஓர் அரசியல் ஆவணம்போல இந்த அபத்தமான கட்டுரை மொழியாக்கம் செய்யப்பட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78638/

காந்தி, அம்பேத்கர் அருந்ததி ராய்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். மேற்கண்ட தலைப்பில் ‘கீற்று’ தளத்தில் எழுத்தாளர்: அருந்ததி ராய் அவர்கள் “பிராஸ்பெக்ட்” ( Prospect )ஆங்கில மாத இதழில் India’s shame(இந்தியாவின் இழிவு) என்ற தலைப்பில் எழுதிய ஆங்கிலக்கட்டுரையின் தமிழ் வடிவை படித்தேன்.இந்தியாவின் வர்ணாசிரம அமைப்பையும்,சாதிகளையும் குழப்பி எழுதி இருக்கிறார்.இதோடு போதாது என்று காந்திஜி அவர்களை பற்றியும் இந்த விசயத்தில் குறை கூறியிருக்கிறார். சாதி அமைப்பைக் காட்டிலும் தரந்தாழ்ந்த ஒரு சமுதாய அமைப்பு இருக்க முடியாது என்றார் அம்பேத்கர். ‘உதவும் செயல்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66760/

காந்தி வெறுப்பு

பின்னர் ஏன் அவரை வெறுக்க வேண்டும் என்று நமக்கு தொடர்ந்து சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது ? புக்கர் பரிசு வென்ற எழுத்தாளரும்,இந்தியாவின் தீவிர விமர்சகருமான அருந்ததி ராய் சமீபத்தில் காந்தியின் அதிதீவிர விமர்சகராக உருவெடுத்து இருக்கிறார். காந்தியை கூர்மையாக விமர்சிக்கும் அவரின் சமீபத்திய கட்டுரையை வாசிக்கும் கூட்டத்தில் ஏன் இந்தியா மற்றும் உலகம் முழுக்க காந்தி நேசிக்கப்படுகிறார் என்கிற கேள்விக்கு இகழ்ச்சியாக ,”கடவுளுக்குத்தான் தெரியும் !” என்று ஏன் சொன்னார் காந்தியை ஏன் வெறுக்கிறர்கள்?

Permanent link to this article: https://www.jeyamohan.in/60583/

வெண்டி டானிகரும் இந்தியாவும்

வணக்கம் தற்போது வென்டி டானிகரின் “இந்துக்கள் :ஒரு மாற்று வரலாறு” (The Hindus : AnAlternative History) என்ற நூலை பெங்குவின் பதிப்பகம்திரும்பபெற்றிருப்பது சரியான முடிவா?உண்மையில் அந்த புத்தகம் காட்டும் வரலாறு என்ன? மிகுந்த வேலைகளுக்கிடையில் இருக்கிறீர்கள் என அறிவேன். இருந்தும் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் தனி கட்டுரையாக பதிவுசெய்தால் சிறப்பு செ. நிஜந்தன் அன்புள்ள நிஜந்தன், நான் அந்நூலை வாசிக்கவில்லை. அதைப்பற்றிய ஒரு மதிப்புரையை மட்டுமே வாசித்தேன். அந்நூலை முழுக்க வாசித்துப்பார்க்கும் மனநிலையிலும் இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46489/

நோபல் பரிசு இந்தியருக்கு

அன்புள்ள ஜெ, அடுத்த சில ஆண்டுகளில் யாராவது இந்தியருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? யாருக்கு அத்தகைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக நினைக்கிறீர்கள்? மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தனுக்கு இருப்பதாகக் கூறப் படுவது உண்மையா? சரவணன் [கெ.சச்சிதானந்தன்] அன்புள்ள சரவணன் சச்சிதானந்தன் இந்தவருடம் சிபாரிசுசெய்யப்பட்டார் என்று கேள்விப்பட்டேன். அவர் நெடுங்காலம் சாகித்ய அக்காதமி செயலர், தலைவர் பொறுப்பில் இருந்தார். உலக அளவில் நூற்றுக்கணக்கான இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுத்தவர். அத்துடன் சுயமுன்னேற்றத்துக்காக ஓயாது உழைப்பவர். ஆகவே அவருக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21891/

அருந்ததியின் பொய்கள்

பிரபல ஆங்கில பத்தி எழுத்தாளர் அருந்ததி ராய் தி இண்டு ஆங்கில இதழில் எழுதிய கட்டுரை ‘நான் ஏன் அண்ணா அல்ல’ கிட்டத்தட்ட இந்திய அறிவியக்கத்தின் குரலாக சிஎன்என் போன்ற ஊடகங்களாலும் வெளிநாட்டு இதழ்களாலும் தூக்கிப்பிடிக்கப்பட்டது. முப்பதாண்டுகள் களப்பணியாற்றிய, தேசம்தழுவிய மக்களாதரவைப் பெற்றுள்ள அண்ணாவுக்கு ஊடகங்கள் அளித்த செய்தித்தொடர்பை ‘விளம்பரம்’ என சொன்னவர்கள் ஒரே ஒரு பல்ப் நாவல் மட்டும் எழுதிய, போதிய அரசியலறிவோ வாசிப்போ கள அனுபவமோ இல்லாத, இந்த பெண்மணிக்கு ஊடகங்கள் உலகமெங்கும் அளிக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20209/

அண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்

ஜெ CNN-IBN and NDTV மாதிரி செய்தித்தாள்களையும் அருந்ததி மாதிரியான பத்தி எழுத்தாளர்களையும் வாசிக்கும் என் நண்பன் அவர்களெல்லாம் ஆய்வுசெய்து எழுதுகிறார்கள் என்று சொல்கிறான். அவர்கள் அரசியல்ரீதியாக யோசித்துத் திறமையாகப் பேசுவதாக மெச்சுகிறான். உங்களுடைய கட்டுரைகளில் புள்ளிவிவரங்கள் குறைவு என்று சொல்கிறான். இதை நான் ஒரு தகவலுக்காகச் சொல்கிறேன் ஹரிகிருஷ்ணன் அன்புள்ள ஹரி, ஒன்றை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த ஊடக அரசியலாய்வாளர்களை ஒரு சாதாரண அரசியல்கட்சிப்பேச்சாளன் வரும்போது எளிதாகத் தட்டி நொறுக்கிவிட்டுச் செல்வான். அது ஒன்றும் பெரியவிஷயமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20208/

அண்ணா ஹசாரே-கடிதங்கள்

தன்னைத்தவிர வேறு யாரும் தலைமைக்கு வரக் கூடாது என காங்கிரஸ் நினைக்கிறதா? சுதந்திரத்துக்குப் பிறகு ஒருவேளை தாங்கள் ஆட்சிக்கு வர மாட்டோம் என்ற நிலைமை இருந்திருந்தால், சுதந்திரமே வராமல் தடுத்திருக்குமோ காங்கிரஸ் என்ற சந்தேகம் வருகிறது. ராமலிங்கம் நடராஜன் அன்புள்ள ஜெ.. பலரும் எழுதி விட்டார்கள். அருந்ததி கட்டுரையில் உள்ள தவறுகளைப் பிரித்து எழுதி விட்டார்கள் – வலைப் பூக்களில். இது போன்ற விஷயங்களில் நமது வாசகர்கள் நேர்மையாகவும், உடனுக்குடனும் பங்களிக்கிறார்கள். http://www.thehindu.com/opinion/lead/article2379704.ece இந்த சுட்டியில் comments …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20206/

Older posts «