Tag Archive: அருண்மொழி

ம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை

இந்நாவலில் இயல்பாக எழுந்து வரும் மைய உருவகம் பேச்சியம்மன். பேச்சி இந்நாவலில் வரும் ஒவ்வொரு பெண்ணிலும் ஒவ்வொரு தருணத்தில் எழுகிறாள். தனித்த ஆளுமையுள்ள ஓலம்மாவில் அவள் துலங்கித் தெரிகிறாள். அவளில் இருந்து இந்நாவலில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் சற்றே வேறுபடுத்திப் புரிந்துகொள்ளலாம். ஒட்டுமொத்தமாக அத்தனை பெண்களையும் பேய்ச்சிகள் என்றும் வகுத்துக்கொள்ளலாம் வேரறிதல்: ம.நவீனின் ‘பேய்ச்சி’  

Permanent link to this article: https://www.jeyamohan.in/129193

வண்டியிலே

சர்தார்ஜி ரயிலில் அழுதுகொண்டிருந்தாராம். அவருக்கு ஆறுதல் சொல்லி ஒருவர் கேட்டார் “என்ன நடந்தது?” “நண்பன் பட்டாளத்தில் இருந்து லீவுக்கு வந்தான். பார்த்து நீண்டநாள் ஆகிறது. ஆகவே நண்பர்கள் சேர்ந்து அவனை உபசரித்தோம்” “அப்புறம்?” “வழியனுப்ப வந்த இடத்தில் பேசிப்பேசித்தீரவில்லை. ரயில் மணியடித்து பச்சைக்கொடி காட்டியும் பேசிக்கொண்டிருந்தோம். கட்டிப்பிடித்து ஒரே அழுகை” “இருக்குமே?” “ரயில் நகர ஆரம்பித்துவிட்டது. பிடி பிடி என்று சொல்லி எல்லாருமாக துரத்தி ஓடிவந்தோம்” “அப்புறம்?’ “பயங்கர ஆவேசமாக ஓடிவந்தோம். நான் பாய்ந்து ஏறிவிட்டேன்” “அதுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80281